Amla Chutney : நெல்லிக்காய் கார சட்னி; இட்லி, தோசைக்கு இது மட்டும் போதும்! சாப்பிட்டுக்கிட்ட இருக்கலாம்! இதோ ரெசிபி!
நெல்லிக்காய்ச் சட்னி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 3
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
புளி – ஒரு சிறிய துண்டு
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
பூண்டு – 2 பல்
இஞ்சி – சிறிய துண்டு
வர மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேணடும். அடுத்து இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, நெல்லிக்காய், புளி, மல்லித்தழை, வர மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். நன்றாக வதக்கிவிட்டு, ஆறவிடவேண்டும்.
ஆறிய பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். இதை சட்னியில் சேர்த்தால் சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
நெல்லிக்காயின் நன்மைகள்
நெல்லிக்காயின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. நெல்லிச்சாறை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கண்ணில் நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது. இதில் உள்ள அடாப்டோஜெனிக் உட்பொருள், மனஅழுத்ததை குறைக்க உதவுகிறது. மனத்தெளிவை அதிகரிக்கிறது. உடல் மற்றும் உணர்வு ரீதியிலான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. நெல்லிக்காய் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தலைமுடியை வலுவாக்குகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது. உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.
உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது.
உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது.
இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.
வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்