நெல்லிக்காய்ப் பொடி; சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது; பொடி பிரியர்களின் முதல் சாய்ஸ்!
நெல்லிக்காய்ப் பொடி, சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது. ஒருமுறை ருசித்தால், பொடி பிரியர்களின் முதல் தேர்வாக இந்தப் பொடிதான் இருக்கும்.
நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் ரெசிபியை தெரிந்துகொள்வதற்கு முன் அதன் நன்மைகளை தெரிந்துகொள்வது அவசியம். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. நெல்லிச்சாறை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கண்ணில் நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது. இதில் உள்ள அடாப்டோஜெனிக் உட்பொருள், மனஅழுத்ததை குறைக்க உதவுகிறது. மனத்தெளிவை அதிகரிக்கிறது. உடல் மற்றும் உணர்வு ரீதியிலான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. நெல்லிக்காய் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தலைமுடியை வலுவாக்குகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது. உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.
நெல்லிக்காயின் நற்குணங்கள்
உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது.
உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது.
இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.
வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இத்தனை நற்குணங்கள் நிறைந்த நெல்லிக்காயில் இருந்து இட்லிப் பொடி கூட தயாரிக்க முடியும். அதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – 10
பொட்டுக்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 5
மிளகு – ஒரு ஸ்பூன்
பூண்டு – 2 பல்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
நெல்லிக்காயின் விதையை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஐந்து நாட்கள் வரை நிழலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன், நிழலில் காயவைத்த நெல்லிக்காய்த் துண்டுகளைச் சேர்த்து வறுத்து எடுத்து தனியான ஆறவைத்துவிடவேண்டும்.
அதே கடாயில் மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வர மிளகாய், மிளகு, பூண்டு, பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மொறு மொறுவென வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். வறுத்த அனைத்தையும் நன்றாக ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போது காய்ந்த மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறிய பொருட்கள் மற்றும் நெல்லிக்காய் என அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு பொடியாக பொடித்துக்கொள்ளவேண்டும்.
இந்தப் பொடியை சாதம், டிபஃன் என எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிட சுவை அள்ளும். குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் நல்லது. நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இந்தப்பொடியை சாப்பிடும்போது, அனைத்து நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
இதை 15 நாட்கள் வரை ஸ்டாக் வைத்துக்கொள்ளலாம். எனவே உங்களுக்கு தேவையான அளவு செய்துகொள்ளுங்கள். அதிக நாட்கள் வைத்துக்கொள்ள இயலாது என்பதால், தேவைப்படும்போது, அவ்வப்போது தயாரித்து உண்டு மகிழுங்கள்.
தொடர்புடையை செய்திகள்