க்ரே ஹேருக்கு குட் பாய்! வெளியில் தெரியும் வெள்ளை முடியை மறைக்க படாதபாடா? கவலை வேண்டாம் இதோ சில ஹேக்குகள்!
க்ரே ஹேருக்கு குட் பாய் கூறலாம். ஆனால் தற்காலிகமாகத்தான். வெளியில் தெரியும் வெள்ளை முடியை மறைக்க படாதபாடுபடுகிறீர்களா? எனில் கவலையே வேண்டாம். இதோ இங்கு சில ஹேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளை முடியில் வெளியில் தெரியும்போது, அது தெரிவது குறித்து வெட்கமாக உள்ளதா? அதை மறைக்க படாதபாடு படுகிறீர்களா? எனில் அதை மறைக்கச் செய்ய சில ஹேக்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருக்கிறீர்கள், வெளியில் துருத்திக்கொண்டு வெள்ளை முடி தெரிகிறதா? அதை என்ன செய்து மறைக்கலாம். இதோ ஐடியாக்கள். இவை நிரந்த தீர்வுகள் கிடையாது. ஆனால் உங்களுக்கு ஒரு தற்காலிக பலனைத்தரும்.
தற்காலிக கன்சீலர்
உங்களின் வெள்ளை முடியை தற்காலிகமாக மறைக்க, தற்காலிக கன்சீலர்கள் உதவும். இதை நீங்கள் உங்கள் தலையில் வெள்ளை முடி தெரியும் இடத்தில் உபயோகிக்கலாம். இது அப்போதைக்கு முடிக்கு கருமை நிறத்தைத் தரும்.
ஷாம்பூ
குளித்து சில மணி நேரங்கள் வரை உங்கள் தலைக்கு கருமை நிறத்தை இந்த ஷாம்பூ கொடுக்கும். ஆனால் இதில் குளிக்கும்போது உங்களுக்கு நிரந்தரமான கருமை நிறம் கிடைக்காது. ஆனால் நீங்கள் இதை பயன்படுத்தும்போது, அது உங்கள் தலைமுடியின் வெள்ளை நிறத்தை மறைத்துக் காட்டும்.