Gongura Benefits : பாலியல் நோய்களுக்கு தீர்வு; பார்வை குறைபாட்டை சரிசெய்யும் புளிச்சக்கீரையின் நன்மைகள்!
Benefits of Gongura : இதில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் ஆகிய சத்துக்கள் உள்ளது. ஃப்ளேவனாய்ட்கள், பாலிஃபினாலின் ஆசிட்கள், ஆந்தோசியானின்கள் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது.
100 கிராம் புளிச்ச கீரையில் 1.6 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. 11 வகை அமினோ அமிலங்கள் உள்ளது. 3.3 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. 46 கலோரிகள் உள்ளது. இதில் வைட்டமின் ஏ, பி1 (தியாமின்), பி2 (ரிபோஃப்ளேவின்) வைட்டமின் பி9 (ஃபோலிக் ஆசிட்) மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளது.
இதில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் ஆகிய சத்துக்கள் உள்ளது. ஃப்ளேவனாய்ட்கள், பாலிஃபினாலின் ஆசிட்கள், ஆந்தோசியானின்கள் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது.
புளிச்சக்கீரை கல்லீரலை காக்கிறது. ரத்தத்தின் அளவு மற்றும் தரம் இரண்டையும் அதிகரிக்கிறது
புளிச்சகீரையின் இலை மற்றும் பூக்கள் இரண்டுமே உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டது. இது கல்லீரலில் உள்ள நச்சுக்களையும், கொழுப்பையும் போக்குகிறது. கல்லீரலை பாதுகாக்கிறது. புளிச்ச கீரையை மிதமான அளவு அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இது கல்லீரலின் சுமையை குறைக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கிறது
புளிச்ச கீரையில் அதிகம் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பை குறைக்கிறது. நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இது ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாகும்.
தலைமுடி ஆரோக்கியம் மற்றும் அடர்த்தியை அதிகரிக்கிறது
வறண்ட, பொலிவிழந்த மற்றும் சேதமடைந்த கூந்தலுக்கு உதவுகிறது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, தலைமுடி உதிர்வை குறைக்கிறது. வழுக்கை விழுவதை தாமதப்படுத்துகிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலை குறைக்க உதவுகிறது
பாலூட்டும் தாய்மார்கள் பாலை நிறுத்த நினைக்கும்போது பாலை குறைக்க உதவுகிறது. ஆனால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கான பால்தேவை அதிகம் இருக்கும்போது புளிச்சக்கீரையை சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் குழந்தைக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து அளவை குறைக்கும்.
புற்றுநோய், வீக்கம், இரும்புச்சத்துக் குறைபாடு ஆகியவற்றை தடுக்கிறது
புளிச்ச கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வீரியமிக்க புற்றுநோய் செல்களை அழித்து, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இது உடலில் டியூமர் மற்றும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது.
புளிச்சக்கீரையில் வீக்கம் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் இயற்கையிலே நிரம்பப் பெற்றுள்ளது. இது அல்சர், காயங்கள் மற்றும் வெடிப்புக்களை குணப்படுத்தும். வீக்கம், சொறி, குடல் புழுக்கள் மற்றும் சருமத்தில் எரிச்சல் ஆகியவற்றை போக்கும்.
புளிச்ச கீரையில் இரும்பு மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இரும்புச்சத்து குறைபாடு, அனீமியா மற்றும் மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு உள்ள பெண்கள், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
இதில் உள்ள குளோரோஃபில்கள், உடலில் ஹீமோகுளோபின்கள் அளவை அதிகரிக்க உதவுகிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது
செரிமானத்தை அதிகரித்து, உடலில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் இலைகள் மற்றும் பூக்கள் செரிமான மண்டலத்துக்கு உதவி, உடலில் கழிவுகள் சேர்வதை தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்னைகளையும் போக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
புளிச்ச கீரையை வழக்கமாக எடுத்துக்கொள்வது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகிறது. இது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி, அஸ்கார்பிக் ஆசிட் என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உதவி, ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து, உடலில் நோய் எதிர்ப்புத்திறன் உயர உதவுகிறது.
எலும்பை வலுவாக்குகிறது
புளிச்ச கீரையில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள், இதை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பை இரும்பாக்குகிறது. இதை மிதமான அளவில் எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மைகளைக் கொடுக்கிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நல்ல உறக்கத்துக்கு வழிவகுக்கிறது
புளிச்ச கீரை உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உறக்கம் மற்றும் மனஅமைதிக்கும் உதவுகிறது. இதை தினமும் இரண்டு இலைகள் நீங்கள் பருகும் தேநீரில் சேர்த்துக்கொள்ளலாம்.
கண்களுக்கு நல்லது
புளிச்சக்கீரையில் அதிகம் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின்கள் உருவாக உதவுகிறது. இது கண் பார்வையை அதிகரிக்கவும், மாலைக்கண் நோயை தடுக்கவும் உதவுகிறது.
நீரிழிவை மேலாண்மை செய்ய உதவுகிறது
புளிச்சக்கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது. இது டைப் 2 டயாபடீஸ் நோய் உள்ளவர்களுக்கு உதவுகிறது.
சிறுநீர் பாதை தொற்றுக்களை போக்குகிறது
பல்வேறு வகையான சிறுநீர் பாதை தொற்றுக்களையும் புளிச்சக்கீரை சரிசெய்கிறது. மேலும் பாலியல் நோய்களையும் வராமல் சரிசெய்ய உதவுகிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
ரத்தத்தின் தரத்தையும், ரத்த ஓட்டத்தையும் உடலில் அதிகரிக்க புளிச்சக்கீரை உதவுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, சருமத்தை வெண்மையாக்குகிறது.
இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?
இத்தனை நன்மைகள் இருந்தாலும் இந்த கீரையை குறைவான அளவுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதிகம் எடுத்தால் அது உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றின் சமநிலையை பாதிக்கும்.
உடல், கால்சியத்தை உறிஞ்சுவதை தடுக்கும்.
இந்த கீரையை மண் சட்டியில்தான் சமைக்கவேண்டும். மெட்டல் பாத்திரங்களில் சமைக்கும்போது, அதனுடன் பாத்திரம் வினைபுரியும்.
பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் தவிர்க்கவேண்டும்
டாபிக்ஸ்