வீட்டுத்தோட்டத்துக்கு உரம் வாங்கச் செல்கிறீர்களா? வேண்டாம்; இந்த மசாலாக்களே போதும்!
வீட்டுத்தோட்டத்துக்கு உரம் வாங்கச் செல்கிறீர்களா? உரம் வாங்கத் தேவையில்லை. நீங்கள் வீட்டில் உபயோகிக்கும் இந்த மசாலாக்களே போதும்.
உங்கள் வீட்டில் உள்ள தோட்டத்துக்கு என்று தனியாக நீங்கள் உரங்களை வாங்க தேவையில்லை. உங்கள் வீட்டில் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாக்கள், முட்டை ஓடுகள் மற்றும் காய்கறி கழிவுகளே போதுமானது. அதில் இருந்து நீங்கள் உரம் தயாரித்துக்கொள்ளலாம். ஏதேனும் மசாலாக்கள் வாங்கி நீண்ட காலமாகிவிட்டால், அதையும் கூட வீட்டுத்தோட்டத்துக்கு உரமாக்கிவிடலாம். உங்கள் வீட்டில் உள்ள செடிகளை வளப்படுத்த அது உதவும். நீங்கள் உங்கள் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மசாலாக்கள் யாவும் உங்கள் உணவுக்கு சுவை அளிப்பது மட்டுமல்ல, அவற்றை நீங்கள் உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் பயன்படுத்தலாம். மஞ்சள் முதல் உப்பு வரை நீங்கள் உங்கள் தோட்டத்திற்கு எவற்றை பயன்படுத்த முடியும். உங்கள் வீட்டு சமையலறை மசாலாக்கள் அவற்றுக்கு எப்படி உதவும் என்று பாருங்கள்.
பட்டை
பட்டையில் பூஞ்ஜைக்கு எதிரான சிறப்பான குணம் உள்ளது. இது உங்கள் வீட்டுத்தோட்டத்தில் பூஞ்ஜை தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். இதை மண்ணில் தூவினால், இது உங்களுக்கு பாதுகாப்புத் தரும். தண்ணீரில் உள்ள கடினமான உப்புக்களில் இருந்து செடிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும். இது பூச்சிகள், எறும்புகள் மற்றும் எட்டுக்கால் பூச்சிகள் ஆகியவற்றை செடிகளின் அருகே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும்.
எப்சம் உப்பு
எப்சம் உப்பு மற்றும் தண்ணீர் இரண்டையும் கலந்து, உங்கள் தாவரத்தின் வளர்ச்சியை நீங்கள் செழுமையாக்கலாம். கறிவேப்பிலை போன்ற தாவரங்களுக்கு நீங்கள் தேவையான அளவு மெக்னீசியம் சத்துக்கள் கொடுத்தீர்கள் என்றால், அவை நன்றாக வளரும். மண் மற்றும் இலைகளில் எப்சம் உப்பு கலந்த தண்ணீரை நீங்கள் ஸ்பிரே செய்துவிடவேண்டும். இது அவை நன்றாக வளர உதவும்.
மஞ்சள்
மஞ்சள் உங்கள் உணவுக்கு வண்ணம் கொடுக்கும் ஒரு மசாலாப்பொருள் மட்டுமல்ல. இது உங்கள் வேர் செழித்து வளர உதவும். இது உங்கள் தோட்டத்தில் உள்ள பூச்சிகளை அடித்து விரட்டும். இதன் மணம் மற்றும் சுவை எறும்பு, கரையான் ஆகியவற்றை உங்கள் தோட்டத்தில் அண்டவிடாது. இதை நீங்கள் வேர்களுக்கு அருகில் தூவிவிட்டால், அது உங்கள் தாவரத்தின் வளர்ச்சிக்கும் உதவும்.
மிளகு
மிளகுக்கு எறும்பு, அட்டை போன்ற பூச்சிகளை தடுக்கக்கூடிய தன்மை உள்ளது. மேலும் உங்கள் தோட்டத்தில் குழி தோண்டும் எலி, பெருச்சாளி போன்றவற்றையும் தோட்டத்தின் பக்கம் அண்விடாது. உங்கள் தோட்டத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உள்புறத்தில் இருந்து பூச்சிகள் சாப்பிட்டால், மிளகுத்தூளை சிறிதளவு தூவி விடவேண்டும். செடியைச் சுற்றி நீங்கள் தூவிவிட்டால், அதனால் ஏற்படும் மாயாஜாலத்தை பார்த்தே தெரிந்துகொள்ளுங்கள்.
பூண்டு
உங்கள் சமையலறையில் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாக்களில் முக்கியமானது பூண்டு, இதன் பூஞ்ஜைக்கு எதிரான குணங்கள், சிறிய பூச்சிகளை துரத்தும் தன்மை கொண்டது. பூண்டின் கடுமையான மணம்தான் கொசுக்கள் போன்று சிறு பூச்சியினங்கள் முதல் அணில் மற்றும் முயல் போன்ற பெரிய விலங்குகள் வரை துரத்தும் தன்மைகொண்டது.
மிளகாய்ப்பொடி
மிளகாய்ப்பொடி இல்லாமல் நம்மால் சமைக்கவே முடியாது. அந்தளவுக்கு முக்கியமான ஒன்று. இதை நாம் கிட்டத்தட்ட அனைத்து சைட் டிஷ்களிலும் பயன்படுத்துவோம். இதை நீங்கள் உங்கள் தோட்டத்தில் உள்ள பூச்சிகளை விரட்ட உபயோகிக்கலாம். ஒரு ஸ்பூன் மிளகாய்ப்பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் ஒரு சோப்பை கரைத்து, செடிகளின் இலைகளில் ஸ்பிரே செய்யவேண்டும்.
கடுகுப் பொடி
கடுகு, நாம் தாளிக்க கட்டாயம் பயன்படுத்தும் ஒரு உணவுப்பொருளாகும். இது கடும் மணம் கொண்டது. இது தோட்டதில் உள்ள பூச்சிகளை தெறித்து ஓடவிடும் திறன்கொண்டது. புழுக்களையும் அகற்றிவிடும். மண்ணின் வளத்தை பெருக்கவும் இந்த கடுகுப்பொடியை சிலர் பயன்படுத்துகிறார்கள்.
கிராம்பு
கிராம்பை உங்கள் தோட்டத்திற்கு நீங்கள் இரண்டு வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். தண்ணீரில் ஊறவைத்தும் தெளிக்கலாம். கிராம்பை பொடியாக்கியும் பயன்படுத்தலாம். இதில் பாக்டீரியா மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது சிறிய பூச்சிகளிடம் இருந்து தாவரத்தைக் காக்கிறது. தெளிப்பது அல்லது கிராம்பு தண்ணீரை நேரடியான இலைகளுக்கு ஊற்றுவது என எதைச் செய்தாலும் அது உங்களுக்கு இலைகளை தாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்