தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Godhumai Laddu: உடலுக்கு பலம் தரும் கோதுமையில் ருசியான லட்டு.. குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் உகந்தது!

Godhumai Laddu: உடலுக்கு பலம் தரும் கோதுமையில் ருசியான லட்டு.. குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் உகந்தது!

Pandeeswari Gurusamy HT Tamil
May 18, 2024 12:44 PM IST

Godhumai Laddu Recipe: எல்லோருக்கும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று "லட்டு". அதிக அளவில் லட்டுகள் சர்க்கரையால் தயாரிக்கப்படுகின்றன. வெல்லம் சேர்த்து செய்யப்படும் லட்டு உடல் நலத்திற்கு நல்லது. சர்க்கரை உணவுகளை உண்பது எதிர்காலத்தில் பல நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த செய்முறை மிகவும் எளிதானது.

உடலுக்கு பலம் தரும் கோதுமையில் ருசியான லட்டு.. குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் உகந்தது!
உடலுக்கு பலம் தரும் கோதுமையில் ருசியான லட்டு.. குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் உகந்தது!

ட்ரெண்டிங் செய்திகள்

கோதுமை லட்டு செய்வதற்க்கு தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - அரை கப்

துருவிய வெல்லம் - ஒரு கப்

நெய் - ஐந்து ஸ்பூன்

துருவிய தேங்காய் - மூன்று ஸ்பூன்

முந்திரி - 50 கிராம்

பாதாம் - 50 கிராம்

கிஸ் மிஸ் - 50 கிராம்

உப்பு - சிட்டிகை

ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்

கோதுமை மாவு லட்டுகள் செய்முறை

1. அடுப்பில் கடாயை வைத்து கோதுமை மாவை சேர்த்து வறுக்க வேண்டும். ஆனால் மாவு வறண்டு, கட்டியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

2. பச்சை வாசனை போக ஆரம்பித்து சிறிது நிறம் மாறும் வரை வறுக்கவும்.

3. பிறகு மாவை வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

4. இப்போது அதே கடாயில் துருவிய வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.

5. அப்படி சமைக்கும் போது வெல்லம் கம்பி பதம் வரும்.

6. அந்த நேரத்தில் நாம் வறுத்து தனியே எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

7. மேலும் பாதாம், கிஸ் மிஸ், நறுக்கிய முந்திரி, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.

8. ஏலக்காய் பொடியையும் சேர்க்கவும்.

9. இந்த முழு கலவையையும் சிறிது கெட்டியாகும் வரை தொடர்ந்து கலக்கவும்.

10. அதன் பிறகு கால் கப் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை குளிர்ந்து போகும் வரை விடவும்.

11. பின் உங்களுக்கு பிடித்த அளவில் உருண்டைகளாக உருட்டி காற்று புகாத டப்பாவில் வைக்கவும். அவை நீண்ட காலம் சேமிக்கப்படுகின்றன. அவை சுவையாகவும் இருக்கும்.

12. இவற்றை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை பிரச்சனை வராமல் தடுக்கிறது.

13. குழந்தைகளுக்கு தினமும் இந்த லட்டு ஊட்டுவதால் அவர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள்

இதில் பயன்படுத்தப்படும் கோதுமை மாவு, நெய், வெல்லம், ஏலக்காய்த் தூள், முந்திரி, பாதாம் இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் நாம் அதிக வெப்பநிலையில் எதையும் சமைக்கவில்லை. எனவே இது அனைத்தும் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது. இந்த லட்டுவை தினமும் ஒரு முறை சாப்பிட்டால் போதும்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் இரத்த சோகை பிரச்சனை தவிர்க்கப்படுகிறது. இந்த லட்டுகளை தயாரிக்க குறைந்தது அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். இந்த லட்டை காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து பாதுகாக்க வேண்டும். ஒருமுறை தயாரித்தால், இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு புதியதாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்