கோபி-சீஸ் பராத்தா : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் கோபி-சீஸ் பராத்தா! இதோ ரெசிபி!
கோபி-சீஸ் பராத்தா : ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சீஸ் கோபி பராத்தாக்களைத் தான் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒருமுறை ருசித்த பின்னர் உங்கள் வீட்டில சாதாரண சப்பாத்திக்களே செய்ய மாட்டீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

ஆலு பராத்தா போல் இது கோபி சீஸ் பராத்தா. இதை செய்வதற்கு காலிஃபிளவர் மற்றும் சீஸ் தேவைப்படும். மேலே மசாலாக்களை தூவி பராத்தக்களை செய்து எடுக்கும்போதே வாசம் சாப்பிட தூண்டும். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நீங்கள் இதை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு லன்ச் பாக்ஸில் வைத்து கொடுத்துவிட்டீர்கள் என்றால், அதில் துளி கூட மிச்சம் வைக்க மாட்டார்கள். இந்த கோபி – சீஸ் பாராத்தாக்களை செய்வது எப்படி என்ற விரிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
சப்பாத்தி மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்
• கோதுமை மாவு – ஒரு கப்
• உப்பு – தேவையான அளவு
• நெய் – ஒரு ஸ்பூன்
• சூடான தண்ணீர் – தேவையான அளவு
காலிஃப்ளவர் ஸ்டஃபிங் செய்ய தேவையான பொருட்கள்
• கரம் மசாலா – அரை ஸ்பூன்
• சீஸ் – ஒரு கப்
• உப்பு – தேவையான அளவு
• காளிஃப்ளவர் – ஒன்றரை கப் (அதன் பெட்டல்களை பறித்து, சூடான உப்பு தண்ணீரில் சேர்த்து அலசிவிட்டு, துருவிக்கொள்ளவேண்டும் அல்லது பொடியான நறுக்கிக்கொள்ளவேண்டும்)
• கஷ்மீரி மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
• ஓமம் – அரை ஸ்பூன்
• நெய் – பராத்தாக்களை செய்து எடுக்க தேவையான அளவு
செய்முறை
1. ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய் சேர்த்து கலந்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சூடான தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவேண்டும். பிசைந்த மாவை 20 நிமிடங்கள் மூடி வைத்து ஊறவைக்கவேண்டும்.
2. துருவிய காளிஃப்ளவருடன் சீஸ் மற்றும் ஓமம் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவேண்டும்.
3. மாவை எடுத்து மீண்டும் நன்றாக பிசைந்துவிட்டு, அதை சிறிய உருண்டை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக்கொள்ளவேண்டும்.
4. அதில் செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் ஸ்டஃபிங்கை வைக்கவேண்டும். அடுத்து அதில் கஷ்மீரி மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலாவைத் தூவி அதை சுருட்டி மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவேண்டும்.
5. சப்பாத்தி கடாயை சூடாக்கி, அதில் செய்து வைத்துள்ள கோபி சீஸ் பராத்தாக்களை சேர்த்து இருபுறமும் நெய் தடவி பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவேண்டும்.
6. சூப்பர் சுவையான காலிஃப்ளவர் சீஸ் பராத்தாக்கள் தயார்.
இதற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட தயிர் பச்சடி அல்லது வெள்ளரி பச்சடி போதுமானது. உங்களுக்கு விருப்பம் என்றால் வேறு கிரேவிகளும் செய்துகொள்ளலாம். இது சீஸ் சேர்த்து மிகுந்த சுவையைத் தரக்கூடியது என்பதால் உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இந்த பராத்தாக்களை சாப்பிடுவார்கள். இதை லன்ச் பாக்ஸிலும் கொடுத்துவிட சுவை அள்ளும். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சீஸ் கோபி பராத்தாக்களைத் தான் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒருமுறை ருசித்த பின்னர் உங்கள் வீட்டில சாதாரண சப்பாத்திக்களே செய்ய மாட்டீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்