Glowing Skin : சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை முற்றிலும் அகற்ற வேண்டுமா? 21 நாள் இந்த ஒரே ஒரு ஜூஸ் போதும்!
Glowing Skin : சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை முற்றிலும் அகற்ற வேண்டுமா? 21 நாள் இந்த ஒரே ஒரு ஜூஸ் மட்டும் பருகிப்பாருங்கள் சருமம் பளபளப்பதுடன், கூந்தலின் அடர்த்தியும் அதிகரிக்கும். உடலின் ஆரோக்கியமும் பெருகும்.
Glowing Skin : மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
தேங்காய் – ஒரு கப்
வெல்லம், நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு – ஒரு ஸ்பூன்
செய்முறை
கறிவேப்பிலை, தேங்காய், தண்ணீர் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதை வடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் இனிப்புக்காக நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்க்க வேண்டும். இவற்றை கலந்து தினமும் காலை பருகவேண்டும்.
இதை 21 நாட்கள் பருகிவந்தால் போதும், உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதுடன், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை முற்றிலும் நீக்கிவிடும்.
உங்கள் சருமம் பொலிவுடனும் பளபளப்புடனும் இருக்கும். சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி, சருமத்தின் ஈரத்தன்மை தக்கவைக்கப்படும். சரும வியாதிகளையும் இது போக்கும். வெயிலினால் சருமத்தில் ஏற்படும் சன்டேன்களையும் போக்கும்.
கறிவேப்பிலையின் நன்மைகள் மற்றும் சத்துக்கள்
கறிவேப்பிலை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
5 கிராம் கறிவேப்பிலையில் 0.1 கலோரிகள் உள்ளது. இதில் பொட்டாசியம் 1.5 மில்லிகிராம், வைட்டமின் ஏ 0.50 சதவீதம், கால்சியம் 0.001, வைட்டமின் சி 0.10 சதவீதம், வைட்டமின் பி6 0.10 சதவீதம் உள்ளது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இதன் சுவையும், மணமும் வித்யாசம் நிறைந்ததாக இருக்கும். இது வயிற்றுப்போக்கு, நீரிழிவு, காலை நேர சோம்பல், வாந்தி, மயக்கம் ஆகிய அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
மேலும் கறிவேப்பிலை உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
கொழுப்பை குறைக்க உதவுகிறது
செரிமானத்துக்கு உதவுகிறது
கல்லீரலுக்கு சிறந்தது
தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
கண் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது
பாக்டீரியாவை போக்குகிறது
எடையை குறைக்க உதவுகிறது
பக்கவிளைவுகளை தடுக்கிறது
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
நீரிழிவை குணப்படுத்துகிறது
காயங்களை குணப்படுத்த உதவுகிறது
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்