Glowing Skin : 60 வயதிலும் சருமம் 20 போல் ஜொலிக்க வேண்டுமா? இந்த பழங்களை தேடிச்சென்று சாப்பிடுங்கள்!
Glowing Skin : 60 வயதிலும் சருமம் 20 வயதுபோல் ஜொலிக்க வேண்டுமா? எனில் இந்த பழங்களை தேடிச்சென்று சாப்பிட்டுப்பாருங்கள் சருமம் ஜொலிப்பதுடன் ஆரோக்கியமும் கிடைக்கும்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
பொறாமை கொள்ளவைக்கும் சரும அழகைப் பெறுவதற்கு
நாம் ஆரோக்கியம் குறித்து பேசும்போது, அதற்கு பழங்கள்தான் மிகவும் முக்கியமானவையாகும். இது நாம் அனைவரும் பொதுவாக அறிந்த ஒன்றாகும். ஆனால், இந்தப்பழங்களை நீங்கள் உட்கொள்ளலாம் மற்றும் ஃபேஸ் பேக்காக முகத்தில் பூசிக்கொள்ளலாம். அவை என்ன பழங்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் நீங்கள் தினமும் சாப்பிடக்கூடிய வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. ஆரஞ்சு பழத்தில் இயற்கை எண்ணெய்கள் உள்ளது. அது உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதுதான் அந்தப்பழம் குண்டாக இருப்பதற்கும் காரணமாகிறது.
பப்பாளி
சரும ஆரோக்கியம் என்றாலே அதில் முதல் இடம்பெறுவது பப்பாளி பழம்தான். இதில் உள்ள ஈரப்பதம், உங்கள் சருமத்தை மிருதுவாகவும், நீர்ச்சத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி உங்கள் சருமத்தில் உருவாகும் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
தர்ப்பூசணி
தர்ப்பூசணியில் உங்கள் உடலுக்கு புத்துணர்வு அளிக்கும் குணங்கள் உள்ளது. அதில் உள்ள உயர்தர நார்ச்சத்துக்கள், 92 சதவீத தண்ணீர் உங்கள் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது.
சருமத்தை மிருதுவாக்குகிறது மேலும், சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. தர்ப்பூசணியில் வைட்டமின் சி, ஏ, பி1, பி6 மற்றும் லைக்கோபென் ஆகியவை உள்ளன. அது உங்கள் சருமத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.
அன்னாசி
அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் மினரல்களும் அதிகம் உள்ளன. இது தெளிவான சருமத்துக்கு உதவுகிறது. சருமத்துக்கு தேவையான ஆரோக்கியமான செல்களை வழங்குகிறது. இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உடலுக்கு உதவுகிறது.
மாம்பழம்
பழங்களின் ராஜா, இதில் வைட்டமின் ஏ, சி, இ ஆகியவை உள்ளது. இதன் காயங்களை ஆற்றும் குணங்கள், உங்கள் முகத்தில் ஏற்படும் பருக்களை நீக்குகிறது. உங்கள் சருமத்துக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது, வெயில் காலத்திலும் உங்கள் சருமம் ஜொலிக்க உதவுகிறது.
ஆப்ரிகாட்
ஆப்ரிகாட்டில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உடலில் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை சரிசெய்கிறது.
ஆப்பிள்
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவாக உள்ளது. ஆப்பிளில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளையும் சரிசெய்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வயோதிகத்தின் அறிகுறிகளைக் குறைக்கிறது.
செரிப் பழங்கள்
செரியை பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும். அது தவிர, செரிகளில் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் நன்மைகள் அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ, சி, கே மற்றும் மினரல்கள் உங்கள் சருமத்துக்கு பல ஆச்சர்யங்களைத் தருபவை.

டாபிக்ஸ்