Glowing Face : உங்கள் முகம் பால்போல் பளபளவென இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்ங்க போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Glowing Face : உங்கள் முகம் பால்போல் பளபளவென இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்ங்க போதும்!

Glowing Face : உங்கள் முகம் பால்போல் பளபளவென இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்ங்க போதும்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 09, 2024 10:38 AM IST

Glowing Face : உங்கள் முகம் பால்போல் பளபளவென இருக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக் மட்டும் உங்களுக்கு போதும்.

Glowing Face : உங்கள் முகம் பால்போல் பளபளவென இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்ங்க போதும்!
Glowing Face : உங்கள் முகம் பால்போல் பளபளவென இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்ங்க போதும்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

இன்றைய காலத்தில் வெயில் காலம் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும், இங்குள்ள மாசுக்களால் நமது சருமம் கடும் சேதம் அடைகிறது. சருமத்தில் பொலிவின்மை, வறட்சி ஆகியவை ஏற்படுகிறது. இதனால் சரும பாதுகாப்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதற்காக நாம் பல்வேறு கிரீம்களையும் நாடவேண்டியுள்ளது. இந்த கிரீம்களும் பக்கவிளைவை ஏற்படுத்தினால், அது சருமத்தை பாதிக்கும். எனவே அதற்கும் வீட்டில் இருந்தே நாம் சிலவற்றை செய்வதன் மூலம் பொலிவு பெற முடியும்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – அரை (தோல் சீவி சிறு துண்டுகளாக்கிக்கொள்ள வேண்டும்)

பச்சரிசி மாவு – 2 ஸ்பூன்

தேன் – ஒரு ஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

எலுமிச்சை பழத்தோல் அல்லது

ஆரஞ்சு பழத்தின் தோல் – சிறிதளவு

செய்முறை

உருளைக்கிழங்கு, பச்சரிசி மாவு, தேன், கஸ்தூரி மஞ்சள் மற்றும் எலுமிச்சைப்பழம் அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இது ஒரு நல்ல பேஸ்ட் பதத்தில் இருக்கும். இதை உங்கள் முகத்தில் பூசிவிட்டு, 20 நிமிடங்கள் நன்றாக உலர விடவேண்டும்.

பின்னர் மிருதுவான ஃபேஷ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை கழுவவேண்டும். இதனால் உங்கள் முகம் பொலிவு பெறும். உங்கள் முகம் பளபளப்பாகும்.

இதை நீங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறைகள் செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகம் பளபளப்பு பெறும்.

இதுபோன்ற இயற்கை முறைகளில் நீங்கள் உங்கள் சருமத்தையும், உடலின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க முடியும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.