Glowing Face : பளபளக்கும் வெள்ளை முகம் வேண்டுமா? கிரீம்களை தூக்கி வீசுங்கள்! இந்த பொடி மட்டும் போதும்!
Glowing Face : பளபளக்கும் வெள்ளை முகம் வேண்டுமா? அதற்கு கிரீம்களை பயன்படுத்துகிறீர்களா? அவற்றை தூக்கி வீசுங்கள். இந்த பொடி மட்டும் போதும் உங்கள் முகம் பளபளப்பாகும்.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
ஆண்கள், பெண்கள் வயதானவர்கள் என அனைவருக்கும் தங்களின் முகத்தை வெள்ளையாக பளிச்சென வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கும்.
அதற்கு மார்க்கெட்டில் உள்ள கிரீம்களை பயன்படுத்தாமல், இந்த ஒரு பொடியை மட்டும் பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்தும்போது உங்களுக்கு 15 நாளில் பலன் தெரியும். இது இயற்கையானது மற்றும் ஆரோக்கியானதும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், தழும்புகள், கருந்திட்டுகள் என அனைத்தும் படிபடிப்பயாக குறையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். சரும பாதிப்புக்களான தேமல் மற்றும் அலர்ஜியை இது குணப்படுத்தும்.
தேவையான பொருட்கள்
மகிழம்பூ – 10 கிராம்
சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள ரோஜா, குங்குமம்பூவைத்தான் தேர்ந்தெடுப்போம். ஆனால் மகிழம்பூக்கள் உங்கள் சருமத்தை காக்கும் ஒன்று.
சரும ஆரோக்கியத்தை காத்து, அதில் தோன்றக்கூடிய மாசு, மருக்கள் மற்றும் அலர்ஜி என அனைத்தையும் இது குணப்படுத்தும். தழும்புகளைப்போக்கி, சருமத்தை காக்கும்
கிச்சிலி கிழங்கு – 10 கிராம்
கிச்சிலி கிழங்கு மற்றும் பொடி இரண்டாகவும் பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள கருமையை நீக்கி, சருமத்தை பளபளப்பாக்கி, சருமத்தில் உள்ள சுருக்கங்களைப்போக்கும்.
செய்முறை
இவையிரண்டையும் காய வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து பொடியாக்கி, ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இரண்டுமே பொடியாகக் கிடைத்தால், அதை சமஅளவில் எடுத்து கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.
பயன்படுத்தும் முறை
இதில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து, அதில் ரோஸ் வாட்டர் அல்லது பால் கலந்துவிட்டு நன்றாக குழைத்து முகத்தில் மற்றும் சருமம் கருமையாக உள்ள இடங்களில் தடவவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை லேசாக தேய்த்து கழுவிவிட்டு, சோப்பு போட்டு தேய்த்து கழுவவேண்டும்.
இதை உடல் முழுவதும் தேய்த்தும் குளிக்கலாம். மகிழம்பூ உடலுக்கு நல்ல நறுமணத்தை தரும். ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். இதை இருவாரம் பயன்படுத்தினால் நல்ல பலன்தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
நிறம் என்பதில் அழகில்லை. ஆனால் மனம் என்பது எப்போதும் அழகாக இருக்கவேண்டும். இது அழகுடன் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் என்பதால் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்