Global Warming : சென்னையிலும் உணரப்படும் புவிவெப்பமடைதலின் தாக்கம் – அச்சுறுத்தும் ஐஎம்டி தரவுகள்!
Global Warming : நுங்கம்பாக்கத்தில் ஜனவரி 28, 1905ல் குறைந்தபட்ச வெப்பம் 13.9°C என்றும், ஜனவரி27, 1969 ல் மீனம்பாக்கத்தில் குறைந்தபட்ச வெப்பம் 15.7°C என குறைவாக பதிவாகியுள்ளது.
சென்னை, கடந்த குளிர்காலத்தில் அதிக வெப்பமுடன் காணப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது போக, வரும் கோடைக்காலத்திலும் வெப்பம் வழக்கிற்கு மாறாக அதிகரித்து காணப்படும் என வானிலை மையங்களால் கணிக்கப்பட்டுள்ளது.
2024, ஜனவரி-பிப்ரவரியில் கூட குறைந்தபட்ச வெப்பநிலை மீனம்பாக்கத்தில் 20°Cக்கு கீழ் 3 நாட்களில் மட்டுமே சென்றது.
நுங்கம்பாக்கத்திலோ, குறைந்தபட்ச வெப்பநிலை 21°Cக்கு கீழ் வழக்கிற்கு மாறாக ஒரு நாள் கூட செல்லவில்லை. மாறாக அவை அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில், ஜனவரி 14, 2020ல், நுங்கம்பாக்கத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 18.7°C என்றும், மீனம்பாக்கத்தில் 18.2°C என்றும் குறைவாக பதிவாகியுள்ளது.
சென்னையில் இரவு வெப்பம் அதிகரித்திருப்பதற்கு கூடுதல் நகர்மயமாதலும், புவிவெப்பமடைதலும் காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1970 களில், கடலுக்கு தொலைவில் உள்ள மீனம்பாக்கத்தில் குறைந்தபட்ச வெப்பம் 19°Cக்கு கீழாக பல நாட்கள் பதிவாகும்.
நுங்கம்பாக்கத்தில் ஜனவரி 28, 1905ல் குறைந்தபட்ச வெப்பம் 13.9°C என்றும், ஜனவரி27, 1969 ல் மீனம்பாக்கத்தில் குறைந்தபட்ச வெப்பம் 15.7°C என குறைவாக பதிவாகியுள்ளது.
நுங்கம்பாக்கம் வானிலை மையம்- அதிக நகர்புற வளர்ச்சிக்கு உட்பட்டு இருப்பதாலும், மக்கள் நெரிசல் அதிகம் இருப்பதாலும்,வாகனப்புகை அதிகமிருப்பதாலும் அங்கு பதிவாகும் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். கடல் அருகில் இருப்பதால் ஈரப்பதமும் அங்கு அதிகமாக இருக்கும்.
ஆவடி, பூந்தமல்லி போன்ற இடங்கள் கடலுக்கு தொலைவில் இருந்தாலும், அங்கு பசுமைப்பரப்பு, திறந்த வெளிகள் அதிகம் இருந்து, வாகன நெரிசல் குறைவாக இருப்பதால் அங்கு வெப்பம் சற்று குறைந்து காணப்படும்.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், பிப்ரவரி 2024, 1877ம் ஆண்டிக்குப் பின் வெப்பம் அதிகம் உள்ள ஆண்டாக பதிவு செய்துள்ளது என்றும், சராசரி அதிகபட்ச வெப்பம் 29.5°C என அதிகமாக பதிவானதற்கு காரணம் புவிவெப்பமடைதல் உயர்ந்தது தான் என்றும் தெரிவித்துள்ளது!
தென்னிந்தியாவில் 2024ம் ஆண்டில், கோடையின் துவக்கத்தில் சராசரி குறைந்தபட்ச வெப்பம் 1.43°C உயர்ந்தும், சராசரி அதிகபட்ச வெப்பம் 0.97°C உயர்ந்தும் இருப்பது இந்திய வானிலை மையத்தின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தியாவில் குளிர்கால வெப்பம் அதிகரித்து காணப்பட்டதாகவும், புவிவெப்பமடைதல் காரணமாக,இந்தியாவில் ஒட்டுமொத்த வெப்பம் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து காணப்படுவதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 10 வருட புள்ளிவிபரங்களை வைத்து காலநிலை மாற்றம் தான் சென்னையில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு முழுக் காரணம் என சொல்லமுடியாவிட்டாலும், வெப்பம் உயர்தலுக்கு அதன் பங்கு நிச்சயம் உள்ளது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இந்திய வானிலை மையம் தமிழகத்தில் மார்ச்-மேயில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என கணித்துள்ளது.
தற்போது காணப்படும் எல்நினோ நிகழ்வு காரணமாக, சென்னை உட்பட, கடலோர தமிழகத்தில் அதிக வெப்பஅலை நாட்கள், 6-9 என அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன. மே,2024க்குப் பின் எல்நினோ நிகழ்வு சமநிலையை (Neutral) எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
2024, மார்ச்சில் தற்போது வரை அதிகபட்ச வெப்பம் வழக்கமான அளவுகளில் இருந்து வந்தாலும், குறைந்தபட்ச வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது என சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
எனவே, சென்னை நகர்புற விரிவாக்கத்தின்போது பசுமைப்பரப்பு, திறந்தவெளிகளை அதிகரித்தும், வாகன நெரிசலைக் குறைக்க முறையான திட்டங்களை செயல்படுத்தியும், நகர்புறமயமாதலை முறையாக திட்டமிட்டும், புவிவெப்பமடைதலைக் குறைக்க சரியான திட்டமிடலும், சென்னை வெப்பத்தைக் குறைக்க தேவையானவையாக இருந்தாலும், தமிழக அரசு பரந்தூர் விமானநிலையப் பகுதியில் 2682.62 ஏக்கர் ஈரநிலங்கள் இருந்தும் (ஒரு ஏக்கர் ஈரநிலம் 81-216 மெட்ரிக் டன் கார்பனை உள்வாங்கும் திறன் கொண்டது. இதனால் புவிவெப்பமடைதல் பாதிப்பு குறையும்)
இது புவிவெப்பமடைதல் பிரச்சனயை அதிகரித்து சென்னையின் வெப்பத்தை மேலும் கூட்டி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா?
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்