Global Warming : புவி வெப்பமடைதல் உயரும் சூழலில் அதிகரிக்கும் மின் உற்பத்தி கார்பன் வெளியீடுகள் - அதிர்ச்சி ஆய்வு!
Global Warming : புவி வெப்பமடைதல் உயரும் சூழலில் அதிகரிக்கும் மின் உற்பத்தி கார்பன் வெளியீடுகள் - அதிர்ச்சி ஆய்வு!

புவிவெப்பமடைதல் அதிகமாகும் சூழலில் அதிக கரியமிலவாயுவை வெளியிட்டு பாதிப்பை தமிழக மின்வாரியம் மோசமாக்குகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2023ம் ஆண்டு கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த ஆண்டாக இருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூஜ்ஜிய கார்பன் இலக்கை 2050ம் ஆண்டு அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு செயல்பட்டுவந்தாலும், அரசின் சில நடவடிக்கைகள் அதற்கு எதிராக அமைந்துள்ளன.
2024ம் ஆண்டு கோடைக்கால ஆற்றல், மின்தேவையை பூர்த்தி செய்ய, தமிழக அரசு இந்தோனேசியாவிடமிருந்து 5 லட்சம் டன் நிலக்கரியை (சுற்றுசூழலுக்கு மோசமான பாதிப்பை நிலக்கரி மின்சாரம் ஏற்படுத்தும்) மத்திய அரசின் அனுமதியுடன் இறக்குமதி செய்ய உள்ளது.
தமிழக மின்வாரியத்தின் காரியமிலவாயு வெளியீடோ 2017-22 இடைப்பட்ட காலத்தில் 33 சதவீதம் அதிகமாகியுள்ளது.
2022ம் ஆண்டில் புதைபடிம எரிபொருள் (முக்கியமாக நிலக்கரி மூலம்) மூலம் தமிழகத்தில் 71 சதவீத மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
2017-22 இடைப்பட்ட காலத்தில் 25,351 MU (மில்லியன் அலகுகள்) அதிகமாக தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலும் 65 சதவீத மின் உற்பத்தி புதைபடிம (Fossil fuels) எரிபொருள் மூலம் பெறப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிபொருள் மூலம் 27 சதவீத மின்சக்தி மட்டுமே பெறப்பட்டது.
2017-18ல் தமிழக மின்வாரியத்தின் மூலம் 570 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியாகியுள்ள நிலையில் 2021-22ல் அது 757 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
லிக்னைட் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்வது அதிக கரியமில வாயுவை வெளிடும் என இருக்கும்போது 2021-22ல் 17.68 சதவீதம் கரியமிலவாயு வெளியீடு லிக்னைட் நிலக்கரி மூலம் தமிழகத்தில் பெறப்பட்டுள்ளது.
மோசமான நிலக்கரி மின்உற்பத்திக்கு பதில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் தமிழக அரசு மின்உற்பத்தி செய்வதை பெருக்க வேண்டும்.
தமிழக அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) நிறுவனம் ஒரிசாவிலுள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து 1500 மெகாவாட் மின்உற்பத்தியை பெறும் ஒப்பந்தத்தை BHEL நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இத்திட்டம் 2028-29ல் தான் நடைமுறைக்கு வரும். இருப்பினும் நிலக்கரி மின் உற்பத்தி ஆபத்தானது மட்டுமன்றி புவிவெப்பமடைதல் பிரச்னையை அதிகப்படுத்தும்.
தமிழக மின்வாரியம் தனது வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் நிலக்கரி நிலக்கரி மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் 4,320 மெகாவாட் மின்சாரத்தை சராசரி திறன் (Plant Loading Factor-PLF),
2021-53.88 சதவீதம்
2022- 59.96 சதவீதம் என்ற அளவில்,
மின்சாரம் உற்பத்தி செய்துவரும் நிலையில், உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்க தமிழக மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். (தமிழக அரசின் நிலக்கரி உற்பத்தி நிலையங்களில் சல்பர் டைஆக்ஸைட் வாயுவை நீக்கும் வசதி (Flue Gas Desulpurisation-FGD) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புவிவெப்பமடைதல் பாதிப்பு மேலும் அதிகமாகும்)
பொறியியல் நிபுணர்களோ, இயங்கும் நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனங்கள் பழமையானவை என்றும், புது நிலக்கரி மின் நிலையங்களை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசும் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து (அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு) மின்சாரத்தை கொள்முதல் செய்வதை நிறுத்தி அரசே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதை பெருக்க முன்வர வேண்டும்.
சுருக்கமாக, புவிவெப்பமடைதல் பாதிப்பை குறைக்க நிலக்கரி மின்உற்பத்திக்கு பதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்தேவையை புர்த்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
மருத்துவர் புகழேந்தி.

டாபிக்ஸ்