Global Forgiveness Day 2024 : உலக மன்னித்தல் தினம்; வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்ட யோசனைகள் இதோ!
Global Forgiveness Day 2024 : உலக மன்னித்தல் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்ட யோசனைகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தாண்டு உலக மன்னித்தல் தினம் 07.07.2024 இன்று கொண்டாடப்படுகிறது.
உலக மன்னித்தல் தினம் 2024 இந்தாண்டு 07.07.2024 இன்று ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும், தாங்கள் தவறிழைத்தவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்டு, இந்த நாளை கொண்டாடவேண்டும். நம்மிடம் உள்ள அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் அகற்றிவிட்டு, முன்னேறிச்செல்வதற்கான தருணம் இதுதான்.
நீங்கள் புதிய, வலுவான பிணைப்புகளை, அவர்களின் கடந்த கால தவறுகளை மன்னிப்பதன் மூலம் உருவாக்கலாம். மனிதர்களின் இயல்பு தெரியாமல் தவறிழைப்பது ஆகும். எனவே நாம் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கவேண்டும்.
உலக மன்னித்தல் தின வரலாறு மற்றும் முக்கியத்துவம்
கனடாவில் கிறிஸ்துவ எம்பசி ஆஃப் கிரைஸ்ட்ஸ் அம்பாசடர்ஸ் என்ற அமைப்பு 1994ம் ஆண்டு இந்த நாளை உருவாக்கியது. முதலில் இது மன்னிப்புகோருதல் மற்றும் மன்னித்தல் தினம் என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் இது உலகளவில் பிரபலமடைந்த காலத்தில் உலக மன்னிப்பு தினம் என்று அழைக்கப்பட்டது.
மற்றவர்களை மன்னித்தல் மாற்றங்களை கொண்டுவருவது இந்த நாளில் முக்கியமாக கருத்தில்கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும். மேலும் இந்த சமுதாயத்தை அனைவருக்கும் ஏற்ற சிறந்த நாளாக மாற்றவும் உதவக்கூடியது இந்த நாள்.
ஒருவரை மன்னிக்க நிறைய நேரம் எடுக்காது. அவர்களின் நிலையை அறிவதும், அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால்போதும். மன்னிப்பு என்பது சாதாரண ஒன்றுதான்.
பல புரிதலின்மைகளை விரட்டுவதில், மனம்விட்டு பேசுவது உதவுகிறது. அவர்களை மன்னிப்பது எளிதாகிறது. சுற்றியுள்ள அனைவரையும் மன்னித்து நீங்கள் ஒரு நேர்மறையான வாழ்க்கையை வாழ வேண்டும். அன்பு, இரக்கம் ஆகிய குணங்கள், உங்களைச் சுற்றி ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கும். நாம் மற்றவர்களுக்கும் மன்னிக்க கற்றுக்கொடுக்கவேண்டும்.
இந்த நாளை எப்படி கொண்டாடுவது?
உங்களுடன் சண்டையில் இருக்கும் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் மன்னிப்புகோரி பழைய பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவந்து கடந்து செல்வது. அவர்களிடம் அவர்களின் பிரச்னைகள் குறித்து பேசி, அவர்களின் தவறுகளை மன்னித்து ஒரு புதிய அத்யாயத்தை துவக்க வேண்டும்.
மன்னிக்கவேண்டிய நபர்களை பட்டியலிட்டு, அவர்கள் உங்களின் தற்போதைய வாழ்வில் உள்ளவர்கள் மற்றும் கடந்த காலத்தில் இருந்தவர்கள் என யாராகவேண்டுமானாலும் அது இருக்கலாம். அவர்களுடன் தொடர்புகொண்டு ஒரு நல்லுறவை உருவாக்குங்கள். அவர்களை மன்னிப்பதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல வலுவான உறவை உருவாக்கலாம்.
இதுதான் இந்த நாளில் நீங்கள் செய்யவேண்டியது. மன்னித்தல் ஒரு சிறந்த குணம் என்றாலும், நாம் யாருக்கும் துரோகம் செய்யாமல், அப்பழுக்கற்ற ஒரு நேர்மையான வாழ்க்கையை வாழவேண்டுவதும் அவசியம். அப்போதுதான் நம்மால் யாரும் காயமடையமாட்டார்கள்.
மன்னிப்பவன் மனிதன், மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன் என்று கூறுவார்கள். ஆனால் நாம் எப்போதும் மன்னிக்கும் இடத்தில் இருப்பதுதான் நாம் நல்ல மனிதர் என்பதற்கான அடையாளம். அதற்காக தவறுகளே நடக்காது என்று கூறமுடியாது. அப்படி தவறு நடக்கும்போது அதை உணர்ந்து வருந்தி மன்னிப்பு கேட்கவும் நாம் தயாராக இருக்கவேண்டும். இதையே நமது சந்ததியினருக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும்.

டாபிக்ஸ்