Global Day of Parents 2024 : உலக பெற்றோர் தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் என்னவென்று தெரியுமா?
Global Day of Parents 2024 : உலக பெற்றோர் தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
Global Day of Parents 2024 : உலக பெற்றோர் தினம் 2024
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி உலக பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. இது பெற்றோர்களையும், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் வாழ்வை வடிவமைப்பதில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கையும் பாராட்டுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
உலக பெற்றோர் தினம் 2024ம் ஆண்டு கருப்பொருள்
உலக பெற்றோர் தின இந்தாண்டின் கருப்பொருள், விளையாட்டுத்தன பெற்றோரின் வாக்குறுதி என்பதாகும். ஜூன் முழுவதும், யுனிசெஃப் எனப்படும் ஐநாவின் குழந்தைகள் நிதியம் மற்றும் அதன் பார்ட்னர்கள், பெற்றோர்களுக்கு ஆதரவு தருவது மற்றும் நிபுணர்களின் அறிவுரைகளை கூறுவது மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் அறிவியல் அடித்தளத்தை அமைக்கும், விளையாட்டுகளில் பங்கெடுக்கும் வகையில், செய்யப்படும். இதுதொடர்பாக ஆன்லைன் விளையாட்டுக்களும் வடிவமைக்கப்பட்டு, பெற்றோர்களும், குழந்தைகளும் விளையாடும் வகையில், அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்குவதும் இதன் நோக்கம்.
வரலாறு
உலக பெற்றோர் தினம் ஆண்டு முழுவதும் ஜூன் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கேக் மற்றும் மலர் தினத்துக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்குமானது. குழந்தைகளை வலுவானவர்களாகவும், அவர்களின் வாழ்வை சிறப்பாக வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
1983ம் ஆண்டு, குடும்பச்சூழலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் மற்றும் சமூக வளர்ச்சி கமிஷனின் செயலாளர் குடும்பம் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை தருமாறு வலியுறுத்தினார்.
1989ம் ஆண்டு, ஐநா பொதுச்சபை, 1994ம் ஆண்டை சர்வதேச குடும்ப ஆண்டாக அங்கீகரித்து, சமூகத்தில் குடும்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, அதன் சவால்களையும் கூறியது.
1993ம் ஆண்டு, ஒவ்வொரு ஆண்டும் மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினமாகக் கொண்டாட ஜ.நா சபை உறுதியளித்துள்ளது. குடும்பங்களின் முக்கியத்துவம் மற்றும் பிணைப்புகளை முன்னிலைப்படுத்தி, குடும்பத்தை மையப்படுத்தி கொள்கைகளை வகுப்பது என்றானது.
இந்த நாள் உருவானது எப்படி?
ஒரு குடும்பத்தின் ஆணிவேரான பெற்றோரின், தனித்தன்மை மற்றும் அதை மாற்ற முடியாததை அங்கீகரிப்பது ஜூன் 1ம் தேதி கொண்டாடப்படும் பெற்றோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். பெற்றோர்களையும் அவர்களின் பங்களிப்பையும் கொண்டாடுவது இந்த நாளின் நோக்கமாகும்.
உலக குடும்ப தினத்தின் முக்கியத்துவம்
விழிப்புணர்வு ஏற்படுத்துவது – உலக பெற்றோர் தினம், உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் கொண்டாடப்படுகிறது. பெற்றோரின் முக்கியத்துவம், குடும்ப நலனில் அவர்களின் பங்கு ஆகியவற்றை உணர்த்துகிறது.
செயல்பாடு
குடும்பங்களை வலுபடுத்தி, பெற்றோர்களுக்கு ஆதரவளித்து, சவால்களை சந்திக்க தயாராக வேண்டும்.
ஒற்றுமையை வளர்த்தல்
இந்த நாள் ஒற்றுமையை வளர்க்கிறது. பெற்றோருக்கு ஆதரவளித்து குடும்பத்தில் அமைதி நிலவ வழிவகுக்கிறது.
வேற்றுமையைக் கொண்டாடுவது
இது குடும்பத்தின் பல்வேறு வகைகள் மறறும் அனைத்து பெற்றோரின் தனிப்பட்ட பங்களிப்பை கொண்டாடுகிறது. இது அவர்களின் பின்னணி மற்றும் சூழலை பெரிதாகக்கொள்வதில்லை.
உலக பெற்றோர் தினத்தில் உங்கள் பெற்றோருக்கு கட்டாயம் உங்களின் நன்றியை தெரிவியுங்கள். உங்கள் வாழ்வை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பதை நினைவுகூர்ந்து, அவர்கள் உங்களுக்கு எத்தனை நன்மைகள் செய்துள்ளார்கள் என்பதை அங்கீகரித்து கட்டாயம் நன்றி செலுத்துங்கள். ஏனெனில் பெற்றோரின்றி அமையாது உலகு. இனிய பெற்றோர் தின வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்