Girl Boy Names : இந்த பெயர்களை உங்கள் வீட்டு இளவரசிகளுக்கு வைங்களேன்! மகிழ்ச்சி மழையில் நனையலாம்!
Girl Boy Names : இந்த பெயர்களை உங்கள் வீட்டு இளவரசிகளுக்கு வைங்களேன். மகிழ்ச்சி மழையில் நனையலாம். ஏன் என்று தெரியுமா?
இந்த பெயர்களை வைக்கக் கூறியதன் காரணம். இவையனைத்தும் மழை என்ற அர்த்தத்தில் வரும் பெயர்கள் அல்லது மழையிடம் இருந்து பெறப்பட்ட பெயர்கள்.
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம்
இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும்.
அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.
எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
மழை என்ற அர்த்தத்தில் அல்லது மழைக் காலத்தின் அழகு என்பதை குறிப்பிடும் வகையில் வைக்கப்பட்ட பெயர்களை பெண் குழந்தைகளின் பெயர்களை இங்கு காணலாம்.
மழையில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தைகளின் பெயர்கள்
உங்கள் பெண் குழந்தைகளுக்கு பெயர் வைக்கவேண்டுமெனில் அதற்கு உங்களுக்கு சில நல்ல உத்வேகங்கள் தேவைப்படுகிறது. உங்களுக்கு பசுமை, மழை, சுற்றுச்சூழல், இயற்கை பிடிக்குமெனில், மழை காலத்தை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள் இங்கு தொகுகப்பட்டுள்ளன. இந்திய பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் மழை தொடர்பான பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இது மழையின் எழில் மற்றும் அழகை குறிப்பிடுவதாக இருக்கும்.
அமையா
அடித்து, ஆர்ப்பரித்து கொட்டும் மழையல்ல, இரவில் பெய்யும் இதமான மழை என்ற அர்த்தத்தை தருகிறது. அமைதியான, இதமான மழை, எல்லையில்லா போன்ற அர்த்தங்களை இந்த பெயர் தருகிறது.
மேகா
மேகம் என்பது இதன் அர்த்தம். இருள், கார்மேகம், மழையைக்கொண்டு வரும் கார்மேகம் என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது.
த்ரிஷா
தாகம் என்பது இதன் அர்த்தம். பூமியின் தாகத்தை போக்க வந்த மழை என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. மழைக்காலம் பூமியின் தாகத்தை போக்குகிறது என்பதை குறிக்கிறது.
காஷ்வி
காஷ்வி என்றால் ஒளிர்கிற என்று பொருள். வெளிச்சமான மின்னலைப் போன்றவள். மழைக்காலத்தின் அடர்மழைக்குப்பின் ஏற்படும் தெளிவான, வெளிச்சமான வானம் என்ற பொருளை தருகிறது.
அம்பிகா
அம்பிகா என்றால், பார்வதியின் பெயர், மழைக்காலத்தில் நாம் இயற்கை அன்னையை கொண்டாட வேண்டும் என்பதை குறிக்கிறது.
வர்ஷா அல்லது வர்ஷினி
வர்ஷா அல்லது வர்ஷினி என்றால் மழை. இந்து மழைக்காலத்தில் கொட்டித்தீர்க்கும் மழையைக் குறிக்கிறது.
அஞ்சலி
பரிசு அல்லது படையல் என்ற பொருளைக் கொடுக்கிறது. மழை என்பது பூமிக்கு கிடைக்கும் பரிசு அல்லது பூமிக்கு இயற்கை அன்னையிடும் படையல் அதனால்தான் அனைத்து ஜீவ ராசிகளும் உயிர் வாழ்கின்றன. மழையே பூமியை புதுப்பிக்கிறது, காக்கிறது என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் பெயர்.
நீரஜா
நீரஜா என்றால் தாமரை மலர் என்று அர்ததம். தண்ணீரில் மலரும் தாமரை மலர் போன்ற குளுமையானவள். தெளிவு மற்றும் அழகைக் குறிக்கிறது. மழைக்காலம் எவ்வளவு அற்புதமானது என்பதை காட்டுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்