Girl Baby Names : உங்கள் இரட்டை பெண் குழந்தைகளுக்கு ரைமிங்காக பெயர்கள் வேண்டுமா? இதோ பாருங்கள்!
Girl Baby Names : உங்கள் இரட்டை பெண் குழந்தைகளுக்கு ரைமிங்காக பெயர்கள் வேண்டுமா? இங்கு சில பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பலன்பெறுங்கள்.
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம் ஆகும். இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும். அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.
உங்கள் இரட்டை குழந்தைகளின் பெயர்களை தேர்ந்தெடுங்கள்
ஆராத்யா – ஆராதிகா
ஆராத்யா என்றால் வணங்கக்கூடிய நபர் என்று பொருள். விநாயகப் பெருமானின் அருளைப்பெற்றவர் என்று பொருள். இது சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட பெயர். பிடித்தமான, மரியாதை தரக்கூடிய மற்றும் எடுத்துகாரியத்தை முடித்த ஆகியவற்றை குறிக்கிறது.
ஆராதிகா
ஆராதிகா என்றால் துளசி மாடத்தின் அடியில் ஏற்றப்படும் தீபம் என்று பொருள். உங்கள் வாழ்வில் ஒளியேற்ற வந்த நபர் என்று பொருள். வணங்கக்கூடியவர் என்பதையும் குறிக்கிறது.
அஞ்சனா – அபர்ணா
அஞ்சனா என்பவர் அனுமனின் தாய். இந்து பெண் குழந்தைகளுக்கு இந்தப் பெயர் வைக்கப்படுகிறது. இதற்கு சாம்பல் நிறம் என்ற பொருளும் உண்டு. இந்திய புராணங்களில் ஒரு பாம்பின் பெயராகவும் உள்ளது. மலை, யானை என பலவற்றை அஞ்சனா குறிக்கிறது. அஞ்சனம் என்றால் கண் மை, கருமை என்றும் பொருள்.
அபர்ணா
அபர்ணா என்றால் பார்வதி தேவியின் பெயர்களுள் ஒன்று. இலைகளை கூட உண்ணாமல் வாழும் நபர். இந்தப்பெயரை கொண்ட நபர்கள் மற்றவர்களிடம் அனுதாபம் கொண்டவர்களாக இருப்பார்கள். நிறைய விவாதங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
அனுபமா – நிரூபமா
அனுபமா என்றால் ஒப்பிட முடியாதவர். எல்லையற்றவர் என்று பொருள். சிறப்பான என்பதையும் இந்தப் பெயர் குறிக்கிறது. சமஸ்கிருதப் பெயராகும். அரிய, மதிப்புமிக்க, இஞ்சி, பொருத்தமற்ற ஆகிய அர்த்தங்களையும் கொடுக்கிறது. இந்து பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்.
நிரூபமா
நிரூபமா என்றால் தனித்தன்மையான, ஒப்பிட முடியாத அல்லது அச்சமற்ற என்று பொருள். நிரூபன், நிரூபம் என ஆண்களுக்கும் இந்தப்பெயரை சூட்டலாம். சமமற்ற, சீரற்ற ஆகிய அர்த்தங்களையும் இந்தப்பெயர் தருகிறது.
அஞ்சனா – சஞ்சனா
அஞ்சனா என்பவர் அனுமனின் தாய். இந்து பெண் குழந்தைகளுக்கு இந்தப் பெயர் வைக்கப்படுகிறது. இதற்கு சாம்பல் நிறம் என்ற பொருளும் உண்டு. இந்திய புராணங்களில் ஒரு பாம்பின் பெயராகவும் உள்ளது. மலை, யானை என பலவற்றை அஞ்சனா குறிக்கிறது. அஞ்சனம் என்றால் கண் மை, கருமை என்றும் பொருள்.
சஞ்சனா
சஞ்சனா என்றால் பொறுமை, நேர்மை, இதமான இசை ஆகிய அர்த்தங்களைக் கொண்டது. சேர்த்தல் அல்லது ஒன்றினைத்தல் என்பதையும் இந்தப்பெயர் குறிக்கிறது. உருவாக்குபவர், பல்லி, மேகங்கள் மற்றும் அந்தியின் கடவுள் என்றும் கூறப்படுகிறது.
அமிர்தா – அங்கிதா
அமிர்தா என்றால் அமிரதம், அமுது, அமுதுணவு என்று பொருள். எல்லையற்றவர் என்ற பொருளைத் தருகிறது. இந்தப் பெயருக்கு தனித்தன்மையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பின்னணி உள்ளது.
அங்கிதா
அங்கிதா என்றால் மங்களகரமான அறிகுறிகளைக் கொண்ட நபர் என்று பொருள். ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் பிரபலமான பெயர். இது இந்தப்பெயரைக் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பான பலன்களைத் தருகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்