Girl Baby Names : நிலையான, தனித்தன்மையான என எண்ணற்ற அர்த்தங்கள் நிறைந்த பெண் குழந்தைகளின் பெயர்கள்!
Girl Baby Names : நிலையான, தனித்தன்மையான என எண்ணற்ற அர்த்தங்கள் நிறைந்த பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்த பெயர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம். இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும். அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.
இஷிகா
இஷிகா என்றால் வர்ணம் தீட்டும் தூரிகை என்று பொருள். உங்கள் வாழ்வில் வர்ணம் தீட்ட வந்தவள் உங்கள் மகள் என்ற அர்த்தத்தை இந்தப்பெயர் தரும் என்பதால் உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்தப்பெயரை வைத்து மகிழுங்கள்.
நந்தினி
நந்தினி என்றால், மகிழ்ச்சியானவர் மற்றும் சந்தோசத்தை அள்ளித்தருபவர் என்று பொருள். இந்த பெயரை உங்கள் வீட்டில் பெண் குழந்தைகளுக்கு வைக்கும்போது, உங்கள் வீட்டில் இன்பம் பொங்கி வழியும் என்று பொருள்.
அக்ஷரா
அக்ஷரா என்றால், என்றும் நிலைத்திருக்கும், அழியாதது என்று பொருள். உங்கள் குழந்தையின் பெயர் என்றும் நிலைத்துநிற்கும். வரலாற்றில் நிலைத்து நிற்கும் சாதனைகளை உங்கள் மகள் புரிவாள் என்பதை குறிக்கிறது.
திவ்யா
திவ்யா என்றால், சொர்க்கம் அல்லது தெய்வீகமானவர் என்று பொருள். உங்கள் குழந்தைக்கு இந்தப்பெயரை வைத்தால், அவர் தெய்வபக்தியில் சிறிந்து விளங்கும் நபர் என்பதை குறிக்கிறது.
ஆராத்யா
ஆராத்யா என்றால் வணங்கக்கூடிய நபர் என்று பொருள். ஆராத்யா என்ற பெயரை நீங்கள் உங்கள் குழந்தைக்கு வைக்கும்போது, அவர் மற்றவர்களால் போற்றி வணங்கக்கூடிய நபராக இருப்பார்.
சான்யா
சான்யா என்றால் மிளிர்கிற மற்றும் பிரகாசமானவர் என்று அர்த்தம். உங்கள் குழந்தை தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் ஜொலிப்பார் என்பதை இந்தப்பெயர் சுட்டிக்காட்டுகிறது. எனவே இந்தப்பெயரை உங்கள் வீட்டு இளவரசிக்கு வைத்து அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வழிவகுத்துக்கொடுங்கள்.
அமரா
அமரா என்றால், அழியாத, நிரந்தரமான, நிலைத்திருக்கக்கூடிய என்று பொருள். உங்கள் குழந்தையின் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கக்கூடிய பெயராக இருக்க வேண்டுமெனில் அவர்களுக்கு இந்தப்பெயரை கட்டாயம் சூட்டி மகிழுங்கள்.
ஈஷா
ஈஷா என்பது சிவனின் மனைவியாக இந்து மதத்தில் கருதப்படும் பார்வதி தேவியின் பெயர். இந்தப்பெயரை வைக்கும்போது உங்கள் குழந்தைக்கு சிவனின் அருள் கிடைக்கும். எதிலும் தலைசிறந்து விளங்கும் நபராக உங்கள் தேவதை இருப்பாள் என்பதை இந்தப்பெயர் குறிக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்