Girl Baby Names : ‘நிலவிடம் வாடகை வாங்கி’ உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கலாமா? தேவதைகளுக்கு தேர்ந்தெடுங்கள்!
Girl Baby Names : உங்கள் வீட்டு தேவதைகளுக்கு சில பெயர்களை தேர்ந்தெடுங்கள்.

உங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு நீங்கள் நிலாவிடம் இருந்து பெயர்களை தேர்ந்தெடுக்க முடியும். அது என்னவென்று பாருங்கள். நிலா என்றாலே பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா? அதன் குளுமை, அமைதி என அது மனதில் செய்யும் மாயம்தான் எத்தனை? எப்போதும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தன்மை நிலாவுக்கு இருக்கும். உங்கள் பெண் குழந்தைகளுக்கு தனிப்பட்ட பெயர்கள் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்கு நீங்கள் நிலாவிடம் இருந்து பெறப்பட்ட பெயர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இங்கு நிலாவிடம் இருந்து பெறப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உங்கள் வீட்டு தேவதைளுக்காக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
நய்ரா
நய்ரா என்பது மார்டன் மற்றும் டிரண்டியான பெயர். இதற்கு நிலவைப்போல் ஜொலிப்பது என்று பொருள். இது உங்கள் வாழ்வின் ஒளியான பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்.
ஷோகல்
ஷோகல் என்பது அரிய மற்றும் கவர்ச்சியான பெயர். இதற்கு நிலவு அல்லது வானில் உள்ள பொருள் என்று அர்த்தம். உங்கள் குழந்தைக்கு தனித்தன்மையான பெயரை வைக்க விரும்பினால் நீங்கள் இந்தப்பெயரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
