Girl Baby Names : ‘நிலாப்பெண்ணே’ உங்கள் வீட்டு தேவதைக்கு நிலவிடம் இருந்து பெயரை கடன் கேட்கலாமா?-girl baby names moon girl can you borrow a name from the moon for your house angel - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Girl Baby Names : ‘நிலாப்பெண்ணே’ உங்கள் வீட்டு தேவதைக்கு நிலவிடம் இருந்து பெயரை கடன் கேட்கலாமா?

Girl Baby Names : ‘நிலாப்பெண்ணே’ உங்கள் வீட்டு தேவதைக்கு நிலவிடம் இருந்து பெயரை கடன் கேட்கலாமா?

Priyadarshini R HT Tamil
Aug 18, 2024 11:50 AM IST

Girl Baby Names : ‘நிலாப்பெண்ணே’ உங்கள் வீட்டு தேவதைக்கு நிலவிடம் இருந்து பெயரை கடன் கேட்கலாமா? இதோ நிலவின் பெயர்கள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Girl Baby Names : ‘நிலாப்பெண்ணே’ உங்கள் வீட்டு தேவதைக்கு நிலவிடம் இருந்து பெயரை கடன் கேட்கலாமா?
Girl Baby Names : ‘நிலாப்பெண்ணே’ உங்கள் வீட்டு தேவதைக்கு நிலவிடம் இருந்து பெயரை கடன் கேட்கலாமா?

பெண் குழந்தைகளின் பெயர்கள்

உங்கள் வீட்டின் பெண் குழந்தைகளுக்கு பெயர்களை தேர்ந்தெடுப்பது கடினமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு அர்த்தமுள்ள சிறப்பு பெயர்களை வைப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். நீங்கள் நிலவின் அழகு மற்றும் ரம்மியத்தில் இருந்து ஒரு பெயரை எடுக்கவேண்டுமென நீங்கள் முடிவெடுத்தால், அது சிறப்பான தேர்வு.

வானில் உள்ளவை குறித்தவற்றை நீங்கள் தேர்வு செய்யும்போது, அது அவர்களுக்கு சிறப்பான பெயர்களாகவும், தனித்தன்மையான பெயர்களாகவும் அமைந்துவிடுகிறது. உங்களுக்கு நிலவிடம் இருந்து பெறப்பட்ட பெயர்களை இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். உங்கள் பெண் குழந்தைகளுக்கு அந்த பெயரை சூட்டி மகிழுங்கள்.

செலினா

செலினா என்பது கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்ட பெயர். செலினா என்றால் நிலா பெண் தெய்வம் என்ற பொருள். இந்த பெயரை எப்போது வேண்டுமானாலும் வைக்கலாம். நிலவின் சக்தியை பெற்றவள் மற்றும் புராணக்கதைகளின் கருணையைப் பெற்றவர் என்ற இன்னொரு அர்த்தமும் உள்ளது.

மஹின்

மஹின் என்பது பாரசீக பெயர், இதற்கு நிலவுக்கு தொடர்புடைய அல்லது நிலவைப்போன்றவள் என்பது பொருள். இது மென்மையான மற்றும் நிலவின் குளுமை மற்றும் அமைதியில் இருந்து எடுக்கப்பட்ட நல்ல பெயர்.

சோமா

சோமா என்றால் நிலவின் மற்றொரு பெயர். இது சமஸ்கிருதப் பெயர். இது வேதத்தில் உள்ள பெண் தெய்வத்துடன் தொடர்புடையது. இதற்கு நிலவு மற்றும் அழியாமையின் அமுதம் என்று பொருள்.

சாந்தினி

சாந்தினி என்பது இந்தி பெயர். நிலவின் ஒளி என்று பொருள். மிருதுவான, நிலவின் பளபளக்கும் வெளிச்சம், தூய்மை மற்றும் அமைதி என்று பொருள். சாந்தினி என்ற பெயர் பரவலாக வைக்கப்படும் பெயர். பெண் குழந்தைகளுக்கு சாந்தினி என்றும், ஆண் குழந்தைகளுக்கு சாந்த் என்றும் வைக்கப்படுகிறது.

அமரிஷ்

அமரிஷ் என்றால் நிலவின் குழந்தை என்று பொருள். இது அரபி பெயர். இந்தப்பெயர் நிலவுடன் ஆழ்ந்த தொடர்புடைய பெயர். இது வெளிச்சம், ஒளி மற்றும் வழிகாட்டி என்பதை குறிக்கிறது.

இன்டு

இன்டு என்றால் எளிமையான மற்றும் இனிமையான பெயர், இதற்கு நிலவு என்று பொருள். இது சமஸ்கிருதப் பெயர். இது அமைதி, நிலவின் குளுமை, ரம்மியம் போன்ற இயற்கை குணத்தை குறிப்பிடுகிறது. அன்பானவர் என்பதையும் இந்தப்பெயர் பிரதிபலிக்கிறது.

லூனா

லூனா, என்பது லத்தீன் பெயர். இதை நேரடியாக மொழி பெயர்த்தால் நிலவு என்று பொருள் கொடுக்கிறது. இது பெற்றோர் அதிகம் தேர்ந்தெடுக்கும் பெயர். எளிமையான, நேர்த்தியான என்று பொருள். இது நிலவின் அழகை குறிப்பிடுகிறது.

ஜ்யோட்ஸ்னா

ஜ்யோட்ஸ்னா என்பது அழகிய சமஸ்கிருதப் பெயர். அதற்கு நிலவின் ஒளி என்று பொருள். இது மிருதுவான, பளபளப்பான, ரம்மியமான நிலவின் ஒளியைக் குறிக்கிறது. இது கருணை மற்றும் நேர்த்தியான அழகை குறிக்கிறது.

ஷாஷி

ஷாஷி என்பது பாரம்பரிய சமஸ்கிருதப் பெயர். இதற்கு நிலவு அல்லது நிலவொளி என்று பொருள். இது கவித்துமான பெயர். இது நிலவின் அமைதியான தோற்றம் மற்றும் மென்மையான வடிவம் என்பதை குறிக்கிறது.

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.