Girl Baby Names : உங்கள் செல்ல மகளுக்கு சூட்ட தனித்தன்மையான பெயர்களை தேடிக்கொண்டிருக்கிறீர்களா?
Girl Baby Names : உங்கள் செல்ல மகளுக்கு சூட்ட தனித்தன்மையான பெயர்களை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பிரத்யேகமான பெயர்கள்.
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம் ஆகும். இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும். அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.
ரியான்
ரியான் என்றால் கருணை என்று பொருள். இந்தப்பெயரை ஆண், பெண் இருபாலருக்கும் சூட்டலாம். இந்த பெயரை வைத்தவர்கள் கருணைமிக்கவர்களாக இருப்பார்கள் என்று பொருள். இந்தப்பெயர் உங்கள் குழந்தைக்கு தனித்தன்மையைக் கொடுக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கும்.
வன்யா
கடவுளின் அன்புப்பரிசு, கடவுள் உங்களுக்கு கொடுத்த அன்பு பரிசுதான் உங்கள் மகள். ரஷ்ய மொழியை அடிப்படையாகக் கொண்ட பெயர். ரஷ்யா மற்றும் உக்ரைனில் இந்தப்பெயர் மிகவும் பிரபலம்.
கிரிதி
கிரிதி என்றால், கலைநுட்பமான வேலை, உருவாக்கம் என்று பொருள். உங்கள் குழந்தைகள் கலைத்துறையில் சாதிக்கவேண்டும் என்று விரும்பினால் அவர்களுக்கு இந்தப் பெயர்களை வையுங்கள்.
வர்ஷா
வர்ஷா என்றால் இந்தியில் மழை என்று பொருள். இந்தப்பெயரின் அடிப்படை சமஸ்கிருத மொழியாகும். மழை நமக்கும் எத்தனை மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரும். அதுபோல் உங்களின் மகளும் செழிப்பையும், மகிழ்ச்சியையும் தருபவர் என்று பொருள்.
திதிரா
நட்சத்திரம், மிளிர்கிற என்ற அர்த்தங்களை இந்தப்பெயர் தருகிறது. உங்கள் மகள் நட்சத்திரம் போல் ஜொலிக்கவேண்டுமா, எனில் அவருக்கு திதிரா எனப்பெயரிடுங்கள். காதல் வாழ்வில் அவர்களை யாரும் கட்டுபடுத்த முடியாது. இந்தப்பெயரை கொண்டவர்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருப்பார்கள்.
நைரா
நைரா என்றல் ஒளிர்கிற மற்றும் பளபளக்கிற, பிரகாசமான என எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்ட பெயர். இது ஸ்பானிஷ் மொழியை அடிப்படையாகக் கொண்ட பெயர். பிரகாசமான சூரிய ஒளி என்பதை குறிக்கும் பெயராகும். உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு செழிக்க இந்தப்பெயரும் உறுதுணையாக இருக்கும்.
கியா
கியா என்றால் அக்கறை கொண்டவர், அன்பானவர், மகிழ்ச்சியானவர், ஆனந்தத்தைத் தருபவர் என நிறைய அர்த்தங்கள் உள்ளது. இந்தப்பெயரைக் கொண்டவர்கள் உங்கள் வாழ்வில் சிறப்பானவர்களாக இருப்பார்கள். இந்தப்பெயர் ஜப்பானிய மொழியை அடிப்படையாகக் கொண்டது. இந்தப்பெயர் எகிப்து ராணிகளுக்கு சூட்டப்படும் பெயர்.
ஈஸ்வரி
ஈஸ்வரி என்றால் சக்திவாய்ந்த, பெண் தெய்வம். உங்கள் குழந்தை தெய்வீகமயமாக இருக்கவேண்டுமெனில், இந்தப்பெயரை வைக்கலாம்.
ஆருஷி
ஆருஷி என்றால் விடியல், சிவந்த வானம், அதிகாலை, சூரியனின் முதல் கதிர், பிரகாசமான சுடர், ஒளி, வாழ்வுதரும் ஒளி என எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்டது. எனவே உங்கள் குழந்தையின் வாழ்க்கை ஒளிமயமான எதிர்காலமாக இருக்க இந்தப்பெயரை அவர்களுக்கு சூட்டி மகிழுங்கள்.
அவிகா
அவிகா என்றால் பூமி என்று பொருள். சூரிய கதிர்கள், சூரியனைப்போன்ற பிரகாசமான தோற்றம் கொண்டவர், வைரம் போன்ற அர்த்தங்களைத்தரும். இந்தப் பெயரைக் கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்