Girl Baby Names Gives the meaning God's Gift : ‘கடவுளின் பரிசு’ என்ற அர்த்தத்தில் வரும் பெண் குழந்தைகளின் பெயர் இதோ!
Girl Baby Names Gives the meaning God's Gift : ‘கடவுளின் பரிசு’ என்ற அர்த்தத்தில் வரும் பெண் குழந்தைகளின் பெயர் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை சூட்டி மகிழுங்கள்.
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம்
இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும்.
அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.
எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
இங்கு ‘கடவுளின் பரிசு’ என்ற அர்த்தத்தில் வரும் பெண் குழந்தைகளின பெயர் தொகுகக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டு இளவரசி கடவுளின் பரிசு தான் எனவே அவருக்கு இந்த பெயர்களை சூட்டி மகிழுங்கள்.
பெண் குழந்தைகளின் பெயர்கள்
உங்கள் பெண் குழந்தைக்கு பெயரை தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். அவர்களுக்கு அழகான மற்றும் தனித்துவமிக்க பெயர்களை வைத்து மகிழவேண்டும். சில பெற்றோர்கள் அழகான பெயர்களை மற்றும் தேர்ந்தெடுப்பதில்லை.
அந்த பெயர்களுக்கு ஆழ்ந்த அர்த்தம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உங்கள் குழந்தைக்கு கடவுளின் ஆசிர்வாதத்துடன் பெயர்கள் இருக்கவேண்டும் என்றால், நீங்கள் இந்த இந்திய பெண் குழந்தைகளின் பெயர்களை தேர்ந்தெடுக்கலாம். அதற்கு கடவுளின் பரிசு என்ற பொருளும் உண்டு என்பது கூடுதல் சிறப்பு.
அனாயா
அனாயா என்ற அழகிய பெயர், அதற்கு ‘அக்கறையானவர்’ மற்றும் ’உங்களை கவனித்துக்கொள்பவர்’ என இரு அர்த்தங்கள் உண்டு. இது ஆசிர்வதிக்கப்பட்டவர் அல்லது கடவுளின் பரிசு என்ற பொருளும் உண்டு. இந்தப் பெயரை உச்சரிக்கும்போது, ஒரு மெலோடியான சத்தத்துடன், நல்ல அர்த்தமும் வேண்டுமென்றால் இந்தப்பெயரை நீங்கள் உபயோகிக்கலாம்.
நெமத்
நெமத் என்பது உருது பெயர், இதற்கு அர்த்தம் பரிசு அல்லது அசிர்வாதம் என்பதாகும். இந்த பெயர் கடவுளின் ஆசிரிவாதம் நிறைந்தது. உங்கள் வாழ்க்கையில் மகிழச்சியின் சொர்க்கத்தை கொண்டு வந்த உங்கள் குழந்தைக்கு இந்தப் பெயரை சூட்டி மகிழுங்கள்.
இஷா
இஷாவுக்கு கடவுளின் பரிசு என்ற ஒரு அர்த்தம் மட்டுமல்ல, ‘நம்மை பாதுகாப்பவர்’ என்ற ஒரு பொருளும் உண்டு. இது சிறிய மற்றும் இனிமையான பெயர். சக்தி வாய்ந்த பெயர், தங்கள் குழந்தைக்கு ஆன்மீக ரீதியில் பெயர் வைக்கவேண்டும் என்று விரும்பும் பெற்றோருக்கு இது ஏற்ற பெயர்.
நேசா
நேசா, தனித்த மற்றும் வசிகரமானவர் என்ற அர்த்தமும், கடவுளின் அதிசயம் என்ற அர்த்தமும் உள்ளது. இந்த பெயர், கடவுளின் அதிசயம் மற்றும் அவர் குடும்பத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவர் என்ற அர்த்தத்தை குறிக்கிறது.
ஹார்நூர்
இது பஞ்சாபி பெயர், இதற்கு கடவுளின் பரிசு என்று பொருள். மேலும் நற்குணங்களைக் கொண்ட நபர் என்பதையும் குறிக்கும் பெயராகும். இது தனித்தன்மை வாய்ந்த மற்றும் அர்த்தமுள்ள பெயர், அறிவு மற்றும் கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றது.
பிரிஷா
பிரிஷா என்றால், ‘அன்புக்குரியவர்’ மற்றும் ‘கடவுளின் பரிசு’ என்ற இரு பொருள்கள் உள்ளது. இந்த அழகிய பெயர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூட்டப்படுகிறது.
அயா
அயா, அதிக பிரபலமில்லாத பெயர். இதற்கு ‘அதிசயம்’ அல்லது ‘கடவுளின் அம்சம்’ என்று பொருள். தங்கள் வாழ்வில் நடந்த் அதிசய ஆசிர்வாதத்தை குறிக்கும் வகையில் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட விரும்பினால் இந்தப் பெயரை சூட்டலாம்.
மின்னா
மின்னா, என்பது அரபிக் பெயர், இதற்கு ‘அல்லாவிடம் இருந்து வந்த பரிசு’ என்று பொருள். இது கடவுளின் பொக்கிஷம் அல்லது மதிப்புமிக்க பரிசு என கூறப்படுகிறது.
வான்யா
வான்யா என்றால் ’கடவுளின் பரிசு’ மற்றும் ’கருணையின் பரிசு’ என்ற இரண்டு பொருள்கள் உள்ளது. இது பாடல் தரம் பெற்ற பெயர், இதை உங்கள் பெண் குழந்தைக்கு சூட்டுவது ஒரு சிறந்த தேர்வு.
மிஷா
மிஷா, என்றால் ‘கடவுளின் பரிசு’ என்று பொருள், ’கடவுளைப் போன்றவர்’ என்பது இதன் மற்றொரு அர்த்தம். இந்தப்பெயர் ஒரு இனிமையையும், இதத்தையும், கடவுளின் ஈர்ப்பையும்கொண்ட பெயர் ஆகும். இந்தப்பெயரையும் உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்