Girl Baby Names : மனதை மயக்கும் ‘ம’ வரிசை பெயர்கள்! உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்!
Girl Baby Names : மனதை மயக்கும் ‘ம’ வரிசை பெயர்கள், உங்கள் வீட்டு இளவரசிகளுக்கு ஏற்றது. இந்த பெயர்களை சூட்டி மகிழுங்கள்!

உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்ட அழகான ‘ம‘ வரிசை பெயர்கள்.
உங்கள் பெண் குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுப்பது ஒரு சுகமான அனுபவம்
உங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது அந்தப் பெயர்கள் அழகாகவும், தனித்தன்மையாகவும், நவீனமாகவும், அனைவருக்கும் எளிதில் புரிந்ததாகவும், எளிதில் அழைக்க முடிந்ததாகவும் இருக்கவேண்டும். உங்களுக்கு ‘ம‘ என்ற எழுத்தில் துவங்கும், அழகான சில பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். அதற்கான அர்த்தமும் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைக்கு இந்த பெயர்களை சூட்டி மகிழுங்கள்.
மைரா
மைரா, என்றால், நவீனத்துவமும், பாரம்பரியமும் கலந்த பெயர்போல் இருக்கும். இதற்கு அர்த்தம் இளவரசி என்பதாகும் அல்லது அன்பிற்கினியவள் என்பதும் ஆகும். இது ஒரு அரபிக் பெயர். உங்கள் வாழ்வில் கருணையையும், அழகையும் கொண்டு வந்த உங்கள் பெண் குழந்தைக்கு இந்த பெயர் சூட்டுவது மிகவும் பொருத்தமாகும். இது நேர்த்தியும், நுட்பமும் நிறைந்தவர் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது.