Girl Baby Names : பெண் குழந்தைகளுக்கு ஏற்ற இரட்டை பெயர்கள்! உங்கள் வீட்டு இளவரசிகளின் எழிலை கூட்டும்!
Girl Baby Names : பெண் குழந்தைகளுக்கு ஏற்ற இரட்டை பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. உங்கள் வீட்டு இளவரசிகளின் எழிலை கூட்ட இந்தப்பெயர்கள் உதவும்.
உங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு ஏற்ற இரட்டை பெயர்கள். இரண்டும் ஒத்திசைந்து வருபவை.
இதில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுங்கள்
உங்கள் பெண் குழந்தைகளுக்கு பெயர்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும், சிரமமான மற்றும் முக்கியமான ஒன்று. அழகான பெயராகவும் இருக்கவேண்டும். அது நவீன பெயராகவும் இருக்கவேண்டும். அது உங்களுக்கு ஆச்சர்யமளிக்கும் பெயராகவும் இருக்கவேண்டும்.
நந்தினி சக்தி
நந்தினி சக்தி என்பது இரண்டு பெயர்களைக் கொண்ட ஒரு பெயர். நந்தினி என்றால் மகிழ்ச்சி அல்லது மகள் என்று பொருள். அதை சக்தியுடன் சேர்க்கும்போது, அது பெண் தெய்வீக சக்தியை குறிக்கும் பெயராக மாறிவிடுகிறது. இந்த பெயர், உங்கள் வீட்டுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் பெண் குழந்தைகளைக் குறிக்கும். அவர்கள் சக்தி நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சி மற்றும் பலத்தைத் தருபவர்களாகவும் உள்ளார்கள்.
நிஷா ஐஸ்வர்யா
இந்த பெயர் அமைதி மற்றும் செல்வத்தின் இருப்பு என்ற அர்த்தத்தை குறிப்பதாகும். அமைதியான இரவுடன், தெய்வத்தின் சக்தியையும் சேர்த்துக்கொள்ளும்போது, வாழ்வில் உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி மற்றும் அமைதியையும் இந்த பெயர் கொண்டுவரும் என்பது உறுதி.
நித்யா தேவி
நித்யா தேவி என்றால் நித்யா மற்றும் தேவி என்ற இரு பெயர்கள் இணைந்த ஒரு பெயர் ஆகும். நித்தியமான அல்லது நிரந்தரமான அல்லது அழிவில்லாத என்பது இதற்கு பொருள், தேவை என்றால் பெண் தெய்வம். நிலையான பெண் தேவதை என்பதை குறிக்கிறது. சக்தியின் ஆற்றலை உங்கள் வீட்டுக்கு கொண்டுவருவார்கள். அழகு மற்றும் பலம் இரண்டும் பொருந்தியவர்கள் என்பதை இந்தப் பெயர் சுட்டிக்காட்டுகிறது.
நீலம் சக்தி
நீலம் சக்தி என்றால், நீலம் என்ற கல்லின் பெயர், சக்தி என்பது தெய்வ சக்தியை குறிக்கும் பெயர் ஆகும். இது தெய்வ சக்தி நிறைந்த தெய்வாம்சம் கொண்ட குழந்தை என்பதை குறிக்கிறது. இந்த பெயர், விலைமதிப்பற்ற மற்றும் பன்முகத்திறமை கொண்டவர் என்பதை காட்டுகிறது.
நிஷா வாணி
நிஷா வாணி, என்பது நிஷா என்றால் இரவு என்பது பொருள். வாணி என்பது சரஸ்வதியின் மற்றொரு பெயரை குறிப்பது. சரஸ்வதி கல்விக் கடவுள். இந்த பெயர் இரவின் அமைதி மற்றும் வாணியின் ஞானத்தையும் ஒருங்கே பெற்றவர் என்ற அர்த்தத்தை கொடுப்பது ஆனும். சக்திவாய்ந்த மற்றும் அறிவூட்டக்கூடிய இயல்பை உடையவர் என்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
நிதி சக்தி
நிதி சக்தி என்பது நிதி என்றால் செல்வம் அல்லது பொக்கிஷம் என்று பொருள். சக்தி, தெய்வீக பெண் சக்தி என்பதைக் குறிக்கும். எனவே இது விலைமதிப்பற்ற, சக்திவாய்ந்த இருப்பை காட்டுகிறது.
நித்யா ஐஸ்வர்யா
நித்யா ஜஸ்வர்யா, நித்யா என்றால் நித்தியமான அல்லது நிரந்தரமான அல்லது அழிவில்லாத என்று பொருள், ஐஸ்வர்யாக என்றால் செல்வம், வளம், மகிழ்ச்சி என்பதை குறிக்கும் சொல். இந்தப் பெயர் நிரந்ரமான, செல்வத்தை உடைய பெண் என்பதை குறிக்கிறது.
நந்தித்தா சக்தி
நந்தித்தா சக்தி என்றால், நந்தித்தா மகிழ்ச்சி என்று பொருள், சக்தி தெய்வீக பெண் சக்தியைக் குறிக்கும் பெயர். இந்த பெயர், மகிழ்ச்சியான மற்றும் சக்தி வாய்ந்த பெண் என்பதை குறிக்கும். இது பல ஆற்றலை வெளிப்படுத்தும், உடன் சக்தி இருப்பதால் இங்கு மகிழ்ச்சியும் இருக்கும்.
நீலம் அனாயா
நீலம் அனாயா என்றால், நீலம் என்பது சபையர் என்ற கல்லின் பெயர், அனாயா என்றால் பிறர் மீது அக்கறையும், இரக்கமும் கொண்டவர் என்று பொருள் எனவே இந்தப் பெயர், மதிப்புமிக்கவர், இயற்கையை கொண்டாடக்கூடியவர் என்பதை குறிக்கிறது.
நித்ய காவ்யா
இந்தப் பெயர், நித்தியமானவர் அல்லது நிரந்தரமானவர் அல்லது அழிவில்லாதவர் என்ற அர்த்தத்தை தருகிறது. நித்யா என்ற பெயருடன் காவ்யா என்ற பெயர் சேரும்போது, அது பெரும் ஆற்றலை உங்கள் குழந்தைக்கு கொடுக்குகிறது. காவ்யா என்பது காவியம் என்பதில் இருந்து உருவான கலைத்துவமான பெயர்.
நித்யா சான்வி
நித்யா என்றால் நிரந்தமானவர், அழிவில்லாதவர், நித்தியமானவர் என்ற பொருள். இந்தப்பெயரை சான்வி என்ற ஞானம் நிறைந்தவர் என்ற அர்த்தம் வரும் பெயருடன் சேர்க்கும்போது, அது உங்கள் குழந்தைகளின் ஆற்றலை அதிகரித்து, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்குகிறது.
நந்தித்தா
நந்தித்தா என்றால் மகிழ்ச்சி, மென்மையான ஆன்மா என்று பொருள். பன்முனத்திறனும், பேராற்றலும் கொண்ட இந்தப்பெயரை, நீங்கள் கருணையின் அர்த்தமான தன்வி என்ற பெயருடன் இணைத்தால், அது சக்தி வாய்ந்ததாகவும், பலம் பொருந்தியதாகவும் இருக்கும். இந்த பெயர் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்