Girl Baby Names : பூக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட க்யூட்டான பெண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் வீட்டு தேவதைகளுக்காக…!
உங்கள் வீட்டு தேவதைகளுக்காக மலர்களிடம் இருந்து பெறப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் இஙகே கொடுக்கப்பட்டுள்ளன.

பூக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட க்யூட்டான பெண் குழந்தைகளின் பெயர்களை உங்கள் வீட்டு தேவதைகளுக்காக தேர்ந்தெடுங்கள். உங்கள் பெண் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் இவை. அழகு, நேர்த்தி, இயற்கையின் நற்குணங்கள் நிறைந்த பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவை பூக்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள். பூக்கள் அரும்புகளாகி, மொட்டுகளாகி, மலரும் தன்மைகொண்டவை. இந்த பெயர்களில் தூய்மை, எளிமை, நேர்த்தி மற்றும் பலம் ஆகிய அர்த்தங்களை இந்தப் பெயர் குறிப்பிடுகிறது. இதை உங்கள் பெண் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்தால் அவர்களின் வாழ்க்கை வளமாகும்.
மிரிணால்
மிரிணால் என்றால் தூய்மை, அழகு மற்றும் ஆன்மீக வளர்ச்சி என்று பொருள். இந்தப் பெயர் பலம் மற்றும் அமைதி என்ற பொருளைத் தருகிறது. இந்திய கலாச்சாரத்தின் அர்த்தமுள்ள பெயராக இந்தப்பெயர் இருக்கும்.
அங்கரிக்கா
அங்கரிக்கா என்ற பெயர் மச்தாரை மலர்களிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். இந்தப் பெயருக்கு ஆற்றல், மாற்றம், பேரார்வம், நளினம் என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன. இது பலம், மீள்திறன் மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தப்பெயர் திறமைமிக்க துடிப்பான குழந்தைகளுக்கு ஏற்ற பெயராகும்.
காஸ்னி
காஸ்னி என்ற பெயர் இந்தியாவின் காஸ் பீடபூமியில் மலரும் பூக்களிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். இதற்கு அழகு, கருணை, அன்பு, தூய்மை என்று பொருள். இதற்கு அமைதியான, இயற்கையுடன் தொடர்புடைய என்று பொருள்.
மாரிகோல்ட்
மாரிகோல்ட் என்றால், சாமந்தி பூக்கள் என்ற பொருள். இந்தப்பூக்களுக்கு மகிழ்ச்சி, நேர்ம்றை எண்ணங்கள் மற்றும் இதம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இது ஆற்றல் கொண்ட துடிப்பான பெண் குழந்தைகளுக்கான பெயராகும். இதற்கு ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் எளிய சந்தோஷங்கள் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டவர் என்பது பொருள்.
மஹீவா
மஹீவா என்ற மலர்கள் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் வளரும் மலர் வகைகள் ஆகும். இந்த மலர்கள் பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும மலர்கள் ஆகும். இந்தப் பெயர் அழகு, துடிப்பு மற்றும் இயற்கை ஆகியவற்றுடன் தொடர்புடையது.
பாரிஜாதம்
பாரிஜாதம் என்றால், இது இந்திய இதிகாசங்களில் இடம்பெற்ற பெயராகும். இந்தப்பெயர் தெய்வீக அழகு, கருணை மற்றும் தூய்மை என எண்ணற்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. இதற்கு நளினம், எளிமை என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. இந்தப் பெயர் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பெயராகும். இந்தப் பெயர் எந்த காலத்துக்கும் ஏற்றது. இந்தப் பெயருக்கு வசீகரம் மற்றும் நறுமணம் என்று அர்த்தம் உள்ளது.
யூதிகா
யூதிகா என்ற பெயர் மல்லிகை மலரின் பெயரில் இருந்து பெறப்பட்ட பெயராகும். இந்தப் பெயருக்கு அழகு, தூய்மை மற்றும் கருணை என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. இந்தப் பெயர் அமைதி, இயற்கையின் நிசப்தம், நளினம் மற்றும் ஆன்மீகத்துடன் ஆழ்ந்த தொடர்பு என்பதைக் குறிக்கிறது.
சைனப்
சைனப் என்றால் மணம் வீசும் மலர் என்று பொருள். இதற்கு அழகாக மலரும் மலர் என்று பொருள். இது கருணை, பலம் மற்றும் அறம் என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. இந்தப் பெயர் அழகு, ஞானம், தெய்வீக குணங்கள் கொண்டவர் என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்