Girl Baby Names : குழந்தைகளுக்கு பெயர் தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? வேண்டவே வேண்டாம் இதோ ஐடியாக்கள்!
Girl Baby Names : குழந்தைகளுக்கு பெயர் தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? இதோ இங்கு அர்த்தமுள்ள பல பெயர்கள் கொடுப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம். இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும். அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
அன்வி
அன்வி என்றால் அன்பான என்று பொருள். வாழ்வின் சுவாசம், ஆன்மா என்று பொருள். உங்கள் மகள்தான் உங்கள் வாழ்வின் பொருளானவள். வாழ்க்கையில் வசந்தமாக வந்தவள் என்பதை குறிக்கிறது.
சியா
சியா என்பது இந்து பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர். சீதா தேவியின் மற்றொரு பெயர். அழகிய பெண், நிலவொளி, புல்வெளி, மல்லிகை, இனிமையானவர் ஆகிய அர்த்தங்களைத் தரும் பெயர்.
இஷிதா
இஷிதா என்றால் செல்வம் மற்றும் ஆசை என்று பொருள். சிறந்தவர் என்பதையும் குறிப்பிடுகிறது. இந்தப்பெயரை ஆண், பெண் இருபாலருக்கும் வைக்கலாம். இது சமஸ்கிருதத்தில் இருந்து வந்த பெயர். பெண் தெய்வம், சிறப்பான மற்றும் உச்சமான, சக்தி வாய்ந்த, தெய்வீக, பலாமனவர் என எண்ணற்ற அர்த்தங்களை தருகிறது.
ரியா
ரியா என்றால், ஓடை, நீரோட்டம் எனப்பொருள். உங்கள் குழந்தை எதிலும் தேங்காமல் வாழ்வில் ஓடிக்கொண்டேயிருப்பார் என்பதை குறிக்கிறது. தைரியமானவர் என்ற அர்த்தமும் இந்தபெயருக்கு உண்டு.
சைஷா
சைஷா என்றால் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று பொருள். வாழ்வின் உண்மை, இந்து மதத்தில் சிறப்பான பெயராகக் குறிப்பிடப்படுகிறது. அறிவாளி, கிரியேட்டிவானவர், இலக்குடன் வாழ்பவர், தலைமைபண்பு கொண்டவர் என எண்ணற்ற அர்த்தங்களைத் தரும். இந்தப்பெயரை கொண்டவர்கள் சட்டம், அரசியம், வணிக என சாதிப்பார்கள்.
ஆரியா
ஆர்யா என்றால் தென்றல் காற்று, இதமான, இனிமையானவர் என்று பொருள். உங்கள் வாழ்வில் இதமளிக்கவந்தவர் உங்கள் மகள் என்பது இதன் அர்த்தமாகும்.
கியாரா
கியாரா என்றால் கருமையான அடர்ந்த கூந்தலையுடைய அழகிய பெண் என்று பொருள். ஒளி, தெளிவு என பல அர்த்தங்களைத்தரும். இத்தாலியப்பெயர்.
ஆன்யா
ஆன்யா என்றால் கருணை கொண்டவர், எல்லையற்றவர். அன்பானவர் என்று பொருள் தரும். கண் மற்றும் பார்வை என்பதையும் இந்தப்பெயர் குறிக்கிறது.
ஈஷாணி
ஈஷாணி என்றால் அழகான என்று பொருள். ஆசை, ஞானம், அறிவு, ஒளி, ஆற்றல், பலம், தைரியம், சக்திவாய்ந்த என எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்டது இந்தப்பெயர். இந்த பெயரை வைத்திருக்கும் பெண் பார்வதிதேவியின் அருளைப்பெற்றவர் என்று பொருள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்