Girl Baby Names : ‘அ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை பாருங்கள்!
Girl Baby Names : ‘அ’ என்ற எழுத்தில் துவங்கும் அழகிய பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம். இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும். அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
அகத்தழகி
அகத்தழகி என்றால், அகம் – உள்புறம், உள்ளம். உள்ளத்தை அழகாக வைத்திருப்பவர் என்று பொருள். உங்கள் பெண் குழந்தைக்கு இந்தப்பெயரை வைக்கும்போது, அது அவரின் உள்புற அழகை குறிக்கும். அகத்தில் அழகு என்றால் அவர் முகத்திலும் அழகு என்று பொருள்.
அகமணி
அகமணி என்றால் விலையுயர்ந்த கல் என்று பொருள். தனித்தன்மையான மற்றும் அற்புதமான என்று பொருள். உங்கள் மகள் உங்கள் வாழ்வில் உங்களுக்கு கிடைத்த அற்புதமான, விலையுயர்ந்த கல்லைப் போன்றவள் என்று பொருள்.
அகலிகை
அகலிகை என்றால், சுதந்திரத்தை விரும்புபவர், நெகிழ்தன்மை கொண்டவர், அறிவானவர், ஞானம் கொண்டவர் என்றுபொருள். இந்தப்பெயர் கொண்டவர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளையாகும். இதனால் தூய்மை என்பதையும் இந்தப்பெயர் குறிக்கிறது.
அகல்யா
அகல்யா என்பது சமஸ்கிருதப் பெயர். இது கௌதம மகரிஷி என்ற முனிவரின் மனைவி பெயர். இந்து புராண கதைகளுடன் இணைந்த பெயர். அழகான மற்றும் அற்புதமானவர், பிரமாதமானவர் என்று பொருள். கலைகளில் சிறந்தவர் என்பதையும் குறிப்பிடுகிறது. உங்கள் குழந்தைகள் சிறந்து விளங்கவேண்டுமெனில் அவருக்கு இந்தப்பெயரை வைத்து மகிழுங்கள்.
அகல்விழி
அகல்விழி என்றால் சுதந்திரமானவர், தலைமைப்பண்புகள் கொண்டவர், கிரியேட்டிவானவர், உண்மையானவர், தைரியமானவர், முன்னெடுப்பவர் என எண்ணற்ற அர்த்தங்களைக்கொண்டது இந்தப்பெயர். கார்த்திரை நட்சத்திரத்தில் உங்கள் குழந்தைகள் பிறந்திருந்தால் அவர்களுக்கு இந்தப் பெயரை வைக்கலாம். ஆரஞ்ச், மஞ்சள், பிரவுன், பொன்னிறம் ஆகியவை இவர்களுக்கு ஏற்ற நிறங்கள் ஆகும்.
அகவழகு
அகவழகு என்றால் உள்புற அழகு என்று பொருள். அழகான, பிரமாண்டமான, அழகிய தோற்றம் கொண்ட என எண்ணற்ற பொருளைத்தரும். உங்கள் அழகிய பெண் குழந்தைக்கு இந்தப்பெயரை சூட்டி மகிழுங்கள்.
அகவொளி
அகவொளி என்றால் உள்ளொளி என்று பொருள். உள்புறத்தில் இருந்து தோன்றம் ஒளி என்று பொருள். உங்கள் வாழ்வின் இருள் நீக்க வந்தவள் என்பது புரியும்.
அகானா
அகானா என்றால் தீ என்று பொருள். கானம் அதாவது பாடல் என்பதில் இருந்து தோன்றிய பெயர். நேரம் என்பதையும் குறிக்கும்.
அகிலா
அகிலா என்றால் அகிலம், உலகம் எனப்பொருள் தரும். உலகம் என்பதை குறிக்கும் பொருளாகும். உங்கள் உலகமே உங்கள் மகள்தான் என்பதைக் குறிக்கிறது.
இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்