பெயர்கள் : ‘அழகு‘ என்ற அர்த்தத்தில் வரும் பெண் குழந்தைகளின் பெயர்கள்; பல்வேறு மொழிகளில் இருந்து உங்கள் தேவதைகளுக்காக…
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பெயர்கள் : ‘அழகு‘ என்ற அர்த்தத்தில் வரும் பெண் குழந்தைகளின் பெயர்கள்; பல்வேறு மொழிகளில் இருந்து உங்கள் தேவதைகளுக்காக…

பெயர்கள் : ‘அழகு‘ என்ற அர்த்தத்தில் வரும் பெண் குழந்தைகளின் பெயர்கள்; பல்வேறு மொழிகளில் இருந்து உங்கள் தேவதைகளுக்காக…

Priyadarshini R HT Tamil
Updated May 24, 2025 11:56 AM IST

பல்வேறு மொழிகளில் இருந்தும் அழகு என்ற அர்த்தத்தில் உங்கள் வீட்டு தேவதைகளுக்காக எடுக்கப்பட்ட பெயர்களை உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.

பெயர்கள் : ‘அழகு‘ என்ற அர்த்தத்தில் வரும் பெண் குழந்தைகளின் பெயர்கள்; பல்வேறு மொழிகளில் இருந்து உங்கள் தேவதைகளுக்காக…
பெயர்கள் : ‘அழகு‘ என்ற அர்த்தத்தில் வரும் பெண் குழந்தைகளின் பெயர்கள்; பல்வேறு மொழிகளில் இருந்து உங்கள் தேவதைகளுக்காக…

இந்திரா (சமஸ்கிருதம் – இந்தியா)

இந்திரா என்றால் அழகு என்று பொருள். இந்தப் பெயர் இந்தியாவில் எல்லா காலத்திலும் சூட்டப்படும் பெயராகும். இந்திரா என்பது வெளிப்புற அழகை குறிக்கும். உள் பலத்தையும் சுட்டிக்காட்டும். இது லட்சுமியின் மற்றொரு பெயராகும்.

களிஸ்டா (கிரேக்கம்)

களிஸ்டா என்றால், மிகவும் அழகான என்று பொருள். இது கவித்துவமான, அழகான பெயராகும். களிஸ்டா என்பது கிரேக்க இதிகாசங்களுடன் தொடர்புடைய பெயராகும். இது வசீகரிக்கும் பழங்கால பெயராகும்.

நூர்ஜஹான் (பெர்சியா-உருது)

நூர்ஜஹான் என்றால், உலகின் ஒளி என்று பொருள். உலகப் புகழ்பெற்ற முகலாய ராணியின் பெயர். இந்தப் பெயருக்கு அழகு மட்டும் அர்த்தம் கிடையாது. இதற்கு கருணை மற்றும் ஞானம் என்ற அர்த்தங்களும் உள்ளது.

சாரா (அரபிக்)

சாரா என்றால் பளபளக்கும், பூ, அழகிய தோற்றம் கொண்ட நபர், அழகிய காட்டி, சர்வதேசம் என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. இது எல்லா காலத்திலும் மார்டனான பெயராகும். இது ஸ்டைலிஷான பெயராகும். இது ஆன்மீகத்துடன் தொடர்புகொண்ட பெயராகும்.

சுந்தரி (சமஸ்கிருதம் – இந்தியா)

சுந்தரி என்றால் அழகிய இளம் பெண என்று பொருள். பழங்கால இந்திய பெயராகும். இதற்கு அழகிய பெண் என்று பொருள். இது பெண் தெய்வங்கள் மற்றும் நாட்டுப்புற கதைகளுடனும் தொடர்புகொண்ட பெயராகும்.

ஜமிலா (அரபிக்)

ஜமிலா என்றால், கருணை கொண்ட, அழகிய, பலகலாச்சாரத்துடன் தொடர்புகொண்ட மாணிக்கம் என்ற அர்த்தங்களைத் தரும். இது பல்வேறு நாடுகளில் புகழ்பெற்ற புழக்கத்தில் உள்ள பெயர். இது இதமான மற்றும் நளினமான பெயராகும்.

மெயீ (சீனம்)

சீன மொழியில் மெய் என்றால் அதற்கு அழகிய, மிருதுவான மற்றும் மெலோடியான என்று பொருள். இது எளிய பெயராக இருக்கலாம். இதற்கு உடல் மற்றும் ஆன்மீக அழகு என்ற பொருள் உள்ளது.

ரூபாஷி (பெங்காலி, சமஸ்கிருதம் – இந்தியா)

ரூபாஷி என்றால் அழகு என்று பொருள். அழகிய முகம் கொண்ட நபர் என்று பெங்காலி இலக்கியங்கள் மற்றும் கவிதைகளில் குறிப்பிடப்படும். ரூபாஷி என்பது இனிமையான பெயர். இதற்கு வசீகரம் என்று பொருள். இது தனித்தன்மையான அர்த்தம் கொண்ட பெயர்.