Girl Baby Names : உங்க வீட்டு குட்டி தேவதைக்கு பிரத்யேகமான பெயர் தேடுறீங்களா.. இதோ பெண் குழந்தைகளுக்கான அழகான பெயர்கள்!-girl baby names are you looking for a special name for your baby angel here are the beautiful names for baby girls - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Girl Baby Names : உங்க வீட்டு குட்டி தேவதைக்கு பிரத்யேகமான பெயர் தேடுறீங்களா.. இதோ பெண் குழந்தைகளுக்கான அழகான பெயர்கள்!

Girl Baby Names : உங்க வீட்டு குட்டி தேவதைக்கு பிரத்யேகமான பெயர் தேடுறீங்களா.. இதோ பெண் குழந்தைகளுக்கான அழகான பெயர்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 05, 2024 01:12 PM IST

Girl Baby Names : ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

Girl Baby Names : உங்க வீட்டு குட்டி தேவதைக்கு பிரத்யேகமான பெயர் தேடுறீங்களா.. இதோ பெண் குழந்தைகளுக்கான அழகான பெயர்கள்!
Girl Baby Names : உங்க வீட்டு குட்டி தேவதைக்கு பிரத்யேகமான பெயர் தேடுறீங்களா.. இதோ பெண் குழந்தைகளுக்கான அழகான பெயர்கள்!

அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம்

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும் போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு. இங்கு பெண் குழந்தைகளுக்கு வைத்து மகிழக்கூடிய சில அழகான பெயர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்

பெயர்களும்.. அர்த்தங்களும்

அன்பினி

பெண் குழந்தைக்கு சூட்டுவதற்கான அழகான பெயர் இது. அன்பான பெண் என்று அர்த்தம்.

அரண்யா

அரண்யா என்ற பெண் குழந்தையின் பெயருக்கு ஆட்சி புரியும் ஆற்றல் பெற்றவள் என்று அர்த்தம்

இமயவதி

இமயவதி என்ற அழகிய பெயருக்கு பார்வதி தேவி என்று அர்த்தம்

இன்மொழி

இன்மொழி என்ற பெயருக்கு மதுர மொழி என்று அர்த்தம். இதை விருப்பமான மொழி எனலாம்.

நீள் விழி

நீள் விழி என்ற அழகான பெண் குழந்தையின் பெயருக்கு நீளமான கண்கள் உடையவள் என்று அர்த்தம்.

தண்மதி

தண்மதி என்ற பெண் குழந்தையின் அழகான பெயருக்கு குளிர்ச்சியான நிலவைப் போன்றவள் என்று அர்த்தம்

பூர்வா

பூர்வா என்பது பெண் குழந்தைகளுக்கு ஏற்ற அழகான பெயர் இதற்கு மூத்தவள் என்று அர்த்தம்.

பூவிதா

பூவிதா என்ற பெயருக்கு உண்மையானவள் என்பது சரியான அர்த்தம் ஆகும்.

புவித்ரா

புவித்ரா என்பது அழகான பெயர். இந்த பெயருக்கு பூமிப்பெண் என்று அர்த்தம்.

தனவி

தனவி என்பது வித்தியாசமான பெண் குழந்தையின் பெயர் இந்த பெருக்கு மென்மையானவள் என்று அர்த்தம்.

ததினி

ததினி என்பதும் வித்தியாசமான பெண் பெயர்தான். இதற்கு குறிக்கோளை உடையவள் என்று அர்த்தம்.

தருணா

தருணா என்பது மிகவும் வித்தியாசமான அழகான பெயர் அதற்கு இளம் பெண் என்று அர்த்தம்

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.