Girl Baby Names : உங்கள் செல்ல மகள்களுக்கு பெயர் தேடுகிறீர்களா.. ஆசையோடு அர்த்தமும் தெரிந்து பெயர் சூட்டுங்கள்!
Girl Baby Names : குழந்தை கருவில் உருவானது முதலே என்ன பெயர் வைக்கலாம் என்ற விவாதம் வீட்டில் தொடங்குகிறது. தமிழகத்தில் பல மொழி கலப்புகளுடன் பெயர்வைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டவும் விரும்புகின்றனர். பெண் குழந்தைகளுக்கு பெயர் தேடிகொண்டு இருக்கிறீர்களா..
Girl Baby Names : ஒவ்வொரு மனிதனும் தன் வாழ் நாளில் மிகவும் முக்கியமான தருணமாக பார்ப்பது தனது குழந்தை பிறக்கும் நாளைதான். சமூகத்தில் பெற்றோர் என்ற அந்தஸ்தை கொடுக்கும் குழந்தை மீது தங்கள் அன்பை பொழிகின்றனர். வாழ்வின் அடுத்தடுத்த நகர்வுகளை தங்கள் குழந்தைகளை மையப்படுத்தியே நகர்த்துகின்றனர். அப்படி தனக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதையும் மிகவும் கவனமாகவும், ரசனையுடன் செய்கின்றனர்.
குழந்தை கருவில் உருவானது முதலே என்ன பெயர் வைக்கலாம் என்ற விவாதம் வீட்டில் தொடங்குகிறது. தமிழகத்தில் பல மொழி கலப்புகளுடன் பெயர்வைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டவும் விரும்புகின்றனர். அப்படி உங்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளுக்கு பெயர் தேடிகொண்டு இருக்கிறீர்களா.. இதோ இந்த பெயர்கள் உங்கள் குழந்தைக்கு பொருந்துமா பாருங்கள்.
1.அக்ஷரா
அக்ஷரா என்பது கலை மகளின் பெயர். அக்ஷரா என்றால் என்றும் அழியாதது. வாழ்வில் எப்போதும் நித்திய தன்மையை பிரதிபலிக்கும். எடுக்க எடுக்க குறையாதது. அதேபோல் கொடுக்க கொடுக்க குறையாதது. இது பெண் குழந்தைகளுக்கு வைக்க மிகவும் பொறுத்தமான பெயர்.
2.ஆதிரா
'ஆதி இரா' என்பதன் சுருக்கம் தான் ஆதிரா. ஆதிரா என்றால் தொடக்கம் இல்லாதவள். சுறுசுறுப்பான, அதிக ஆர்வம் உள்ள குழந்தை என்று பொருள். தொடக்கம் இல்லாதவள் அம்பிகை என்பதை குறிக்க இறைவிக்கு ஆதிரா என்ற பெயர் சூட்டப்பட்டது. இது ஆற்றலையும் உற்சாகத்தையும் குறிக்கும் அழகான பெயர்.
3. இனியா
இனிய என்ற பெயருக்கு இனிப்பு என்று பொருள். சந்தோசம், கருணை என்றும் பொருள் படும். சிக்கலான சூழ்நிலைகளில் தங்களின் திறமையை பயன்படுத்தி வெளியே வந்து விடுவார்கள். மேலும் கடினமான விஷயத்தையும் மற்றவர்களுக்கு எளிதாக சொல்லி புரிய வைப்பார்கள்.இவர்களிடம் சண்டை வந்தால் வாதாடி ஜெயிக்கமுடியாது. இவர்கள் பேசுவது தான் நியாயம் என்று கூறுவார்கள். சில சூழ்நிலைகளில் திமிராக இருப்பார்கள். இவர்கள் எந்த சூழ்நிலையையும் பொறுமையாக கையாளுவார்கள்.
4 மதிவதனி
மதிவதனி என்பது அழகிய பெயர். மதி என்றால் சந்திரன் என்று பொருள். வதனி என்றால் வதனம் என்று பொருள்படும் வதனம் என்றால் முகம். பதனி என்றால் முகத்தை உடையவள். மதிவதனி என்றால் பூரண சந்திரனை போன்ற முகம் உடையவள் என்று பொருள். இது உங்கள் அன்பான மகளுக்கு ஏற்ற அழகான பெயராக இருக்கலாம்.
5. ஹரிணி
ஹரிணி என்றால் மான் என்று பொருள். ஹரிணி என்பது ஒரு மான் போன்ற கருணை மற்றும் நேர்த்தியுடன் தொடர்புடையவண் என்று பொருள் படும்.
6.ஓவியா
"ஓவியா" அழகான பெயர் "கலைஞர்" அல்லது "அழகாக வரைதல்" என்று பொருள்படும். இது ஒரு பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர், இது பெரும்பாலும் படைப்பாற்றல் மற்றும் கலைத்தன்மை கொண்டதாகக் காணப்படும் சிறுமிகளுக்கு வழங்கப்படுகிறது.
7. ரிதன்யா
ரிதன்யா என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் சரஸ்வதி தேவி என்பது ஆகும். ரிதன்யா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும். இந்த பெயருக்கு பொறுப்பு, தயவு, தன்னலமற்ற தன்மை, மற்றும் விசுவாசம் ஆகியவை அற்புதமான குணங்கள் இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்