குளிர் காலத்தில் இஞ்சி-நெல்லி பானம்! 8 நன்மைகளைத் தரும்! யார் பருகக் கூடாது எனப் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குளிர் காலத்தில் இஞ்சி-நெல்லி பானம்! 8 நன்மைகளைத் தரும்! யார் பருகக் கூடாது எனப் பாருங்க!

குளிர் காலத்தில் இஞ்சி-நெல்லி பானம்! 8 நன்மைகளைத் தரும்! யார் பருகக் கூடாது எனப் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Dec 30, 2024 10:01 AM IST

இஞ்சி-நெல்லி பானத்தில் உள்ள நன்மைகளையும், அதை யார் பருகக்கூடாது என்றும் பாருங்கள்.

குளிர் காலத்தில் இஞ்சி-நெல்லி பானம்! 8 நன்மைகளைத் தரும்! யார் பருகக் கூடாது எனப் பாருங்க!
குளிர் காலத்தில் இஞ்சி-நெல்லி பானம்! 8 நன்மைகளைத் தரும்! யார் பருகக் கூடாது எனப் பாருங்க!

இதமான சூட்டில் இஞ்சி-நெல்லி பானம்

பனிக்காலத்தில் உங்களை இதமாக மட்டுமின்றி உங்களின் நோய் எதிர்ப்பையும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் உணவுகளையும் தேர்ந்தெடுத்து உண்பது அவசியமாகும். அதில் ஒன்றுதான் இந்த இஞ்சி-நெல்லி பானம். இது குளிர் காலத்தில் இயற்கையான தீர்வைத் தரும். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குளிர் காலங்களில் நெல்லிக்காயில் உள்ள இரும்பு, நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பைக் கொடுக்கிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. இஞ்சியில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. வயிற்றுக்கு இதமளித்து, ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்ச உதவுகிறது. குளிர் காலத்தில் உங்கள் உடலை இதமாக வைத்துக்கொள்கிறது. வளர்சிதை, சரும ஆரோக்கியம் என எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

நெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உங்களுக்கு நோய் எதிர்ப்பு மற்றும் சரும ஆரோக்கியம் என இரண்டையும் கொடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது கண் பார்வையை கூராக்குகிறது. எலும்பை வலுப்படுத்துகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. இதில் உள்ள பாலிஃபினால்கள் மற்றும் ஃப்ளாவனாய்ட்கள் உங்கள் உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுகின்றன. கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

நோய் எதிர்ப்பு

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. இஞ்சியில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உட்பொருட்கள் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. நெல்லியையும், இஞ்சியையும் சேர்த்து சாப்பிடும்போது, அது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இதனால் குளிர் காலங்களில் உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் தொற்றுகள் ஏற்படும் அளவு குறைகிறது. ஆரஞ்சைவிட 20 மடங்கு அதிக வைட்டமின் சி சத்துக்கள் நெல்லியில் உள்ளுது. இது உங்கள் உடலில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து, உங்கள் உடலின் எதிர்ப்பாற்றலை உயர்த்தி தொற்றுக்களை எதிர்க்கிறது.

செரிமான ஆரோக்கியம்

குளிர் காலத்தில் குளிர் காற்றால் செரிமானம் தாமதமாகும். இதனால் வயிறு உப்புசம், செரிமான கோளாறுகள் ஏற்படும். நெல்லி மற்றும் இஞ்சி இரண்டும் அதன் செரிமான குணங்களுக்காக அறியப்படும் மூலிகைகள் ஆகும். நெல்லி குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தைத் தூண்டுகிறது. இஞ்சி செரிமான எண்சைம்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. உணவை நல்ல முறையில் உடைக்க உதவுகிறது.

உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது

குளிர் காலத்தில் உடலின் வளர்சிதையும் தாமதமாகும். இதனால் உடலில் நச்சுக்கள் சேர்ந்துவிடும். இஞ்சி-நெல்லி ஊறவைத்த பானம் இயற்கை கழிவு நீக்கியாகும். நெல்லியில் உள்ள அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. இஞ்சியின் தூய்மைப்படுத்தும் குணம், ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கல்லீரலின் இயக்கத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கழிவுநீக்க செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

இதம்

இஞ்சி சூடான குணம் கொண்டது. இஞ்சி-நெல்லி பானத்தை பருகும்போது, அது உங்கள் உடலின் உட்புற சூட்டை அதிகரிக்கச் செய்கிறது. இது குளிர் காலத்தில் உங்கள் உடலுக்கு இதமளித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்களுக்கு நாள் முழுவதும் இதமாக உள்ளது.

சரும ஆரோக்கியம்

பனியால் உங்கள் சருமத்தில் வறட்சி, எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை ஏற்படலாம். சருமமும் பொலிவிழந்து காணப்படும். இஞ்சி-நெல்லியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. அது ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் சரும சேதம் தடுக்கப்படுகிறது. நெல்லி சருமத்தில் நெகிழ்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இளம் வயதிலேயே வயோதிக தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது. இஞ்சியில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் சருமத்தின் எரிச்சலுக்கு இதமளிக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

இஞ்சி மற்றும் நெல்லி இரண்டும் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது. நெல்லியின் இன்சுலின் சென்சிட்டிவிட்டி இதற்கு உதவுகிறது. இஞ்சி, ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்கிறது. இது உடலின் குளுக்கோஸ் வளர்சிதையை மேம்படுத்துகிறது. எனவே இவையிரண்டும் ஊறிய தண்ணீரை பருகுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கும் ஏற்றது.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

நெல்லி உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. இரண்டும் உடல் எடையை முறையாக பராமரிக்க உதவுகிறது. இஞ்சியில் உள்ள கொழுப்பை எரிக்கும் குணங்கள், உங்கள் உடலில் தெர்மோஜெனிக் செயலை அதிகரிக்கிறது. எனவே இவையிரண்டும் கலந்த பானத்தை பருகுவதால் அது உங்கள் சரிவிகித உணவுக்கு நல்லது. உடற்பயிற்சி வழக்கங்களுடன் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு குளிர் காலத்திற்கு ஏற்றது.

வீக்கத்தை எதிர்க்கிறது

வீக்கம், மூட்டு வலி போன்றவை குளிர் மாதங்களில் அதிகரிக்கும். இஞ்சியின் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், தசை வலி மற்றும் ஆர்த்ரிட்டிஸ் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது. நெல்லியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இஞ்சியின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இது உடலில் வீக்கத்தைக் குறைக்கிறது.

பக்கவிளைவுகள்

அல்சர் உள்ளவர்கள் இஞ்சி-நெல்லி தண்ணீரை தவிர்க்கவேண்டும். இது அசிடிட்டியை அதிகரிக்கும். பித்தப்பை மற்றும் ரத்தம் உறைதல் பிரச்னை உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது. இவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளவேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஹார்மோன்களில் இஞ்சி ஏற்படுத்தும் தாக்கத்தை கருத்தில் கொள்ளவேண்டும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.