இஞ்சி சட்னி : இஞ்சி சட்னியென்றால் சிலருக்கு காரமாக இருக்கும்; ஆனால் இப்டி செஞ்சு பாருங்க ருசிக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இஞ்சி சட்னி : இஞ்சி சட்னியென்றால் சிலருக்கு காரமாக இருக்கும்; ஆனால் இப்டி செஞ்சு பாருங்க ருசிக்கும்!

இஞ்சி சட்னி : இஞ்சி சட்னியென்றால் சிலருக்கு காரமாக இருக்கும்; ஆனால் இப்டி செஞ்சு பாருங்க ருசிக்கும்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 17, 2025 09:30 AM IST

இஞ்சி சட்னி : இஞ்சி சட்னியென்றால் சிலருக்கு காரமாக இருக்கும். ஆனால் இந்த முறையில் செய்து பார்த்தால் அது ருசியானதாக இருக்கும்.

இஞ்சி சட்னி : இஞ்சி சட்னியென்றால் சிலருக்கு காரமாக இருக்கும்; ஆனால் இப்டி செஞ்சு பாருங்க ருசிக்கும்!
இஞ்சி சட்னி : இஞ்சி சட்னியென்றால் சிலருக்கு காரமாக இருக்கும்; ஆனால் இப்டி செஞ்சு பாருங்க ருசிக்கும்!

• இஞ்சி – அரை கப் (நறுக்கியது)

• வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

• பச்சை மிளகாய் – 6

• காய்ந்த மிளகாய் – 6

• புளி – 2 துண்டு

• துருவிய தேங்காய் – ஒரு டேபிள் ஸ்பூன்

• கொத்தமல்லி இலை – அரை கப்

• உப்பு – ஒரு ஸ்பூன்

• வெல்லம் – ஒரு துண்டு

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• காய்ந்த மிளகாய் – 1

• பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

1. கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவேண்டும்.

2. வெங்காயம் பாதி வதங்கியவுடன், அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவேண்டும்.

3. இதில் உப்பு சேர்த்து கிளறிவிட்டு, நன்றாக ஆற வைக்கவேண்டும்.

4. ஆறிய அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. முதலில் தண்ணீரின்றி அரைக்கவேண்டும். பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும்.

6. தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி, அதில், உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்க்கவேண்டும்.

7. இவையனைத்தும் பொரிந்து வந்தவுடன், தாளித்த பொருட்களை சட்னியில் சேர்க்க வேண்டும். சுவையான இஞ்சி சட்னி தயார்.

இதை இட்லி, தோசை, தயிர் சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இஞ்சி, பெரும்பாலும் செரிமானத்துக்கு உதவக்கூடிய ஒன்று என்பதால், வாரத்தில் ஒரு நாள் அல்லது 2 நாட்கள் இந்த சட்னியை செய்து உணவில் சேர்த்து வந்தால், உங்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கி, வயிறு சீராகும். உடலில் வயிறு மற்றும் குடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தாலே போதும் ஒட்டுமொத்த உடலும் நன்றாக இருக்கும். எனவே இதை கட்டாயம் செய்து பாருங்கள்.