Ghee Mutton Rice : கானும் பொங்கலுக்கு செய்து அசத்த ஒரு சூப்பர் ரெசிபி! நெய் மட்டன் சோறு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ghee Mutton Rice : கானும் பொங்கலுக்கு செய்து அசத்த ஒரு சூப்பர் ரெசிபி! நெய் மட்டன் சோறு!

Ghee Mutton Rice : கானும் பொங்கலுக்கு செய்து அசத்த ஒரு சூப்பர் ரெசிபி! நெய் மட்டன் சோறு!

Priyadarshini R HT Tamil
Jan 15, 2024 04:00 PM IST

Ghee Mutton Rice : கானும் பொங்கலுக்கு செய்து அசத்த ஒரு சூப்பர் ரெசிபி! நெய் மட்டன் சோறு!

Ghee Mutton Rice : கானும் பொங்கலுக்கு செய்து அசத்த ஒரு சூப்பர் ரெசிபி! நெய் மட்டன் சோறு!
Ghee Mutton Rice : கானும் பொங்கலுக்கு செய்து அசத்த ஒரு சூப்பர் ரெசிபி! நெய் மட்டன் சோறு!

ஆட்டிறைச்சி – அரை கிலோ

தயிர் – 100 மிலி

புதினா இலைகள் – ஒருகைப்பிடி

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நெய் சாதத்திற்கு –

பாசுமதி அரிசி – 400 கிராம்

நெய் – 250 கிராம்

தேங்காய் எண்ணெய் – கால் கப்

பிரியாணி இலை – 1

ஏலக்காய் – 5

கிராம்பு – 5

பட்டை – 1 சிறு துண்டு

சீரகம் – ஒரு ஸ்பூன்

அன்னாசிப் பூ – 1

கல்பாசி – 2 துண்டு

வெங்காயம் – 3 பெரியது (மெல்லியதாக நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – 3 ஸ்பூன்

நறுக்கிய பச்சை மிளகாய் – 6

முந்திரி - ஒரு கைப்பிடி

உலர் திராட்சை - ஒரு சிறிய கைப்பிடி

உப்பு – தேவையான அளவு

செய்முறை –

ஒரு பாத்திரத்தில் ஆட்டிறைச்சியை நன்றாக கழுவி எடுத்து மேரியனேட் செய்ய கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் மேரியனேட் செய்ய வேண்டும்.

ஒரு பாத்திரம் அல்லது குக்கரில் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி அதில் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து 2 நிமிடம் வறுக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.

இஞ்சி-பூண்டு விழுது மற்றும் மிளகாய் சேர்த்து 2 நிமிடம் பச்சை வாடை போக மணக்க வதக்கவேண்டும்.

பின்னர் இதில் மேரியனேட் செய்த ஆட்டிறைச்சி கலவையை சேர்த்து, 5 முதல் 10 நிமிடங்கள் வரை வதக்கவேண்டும்.

பின்னர் குக்கரை மூடி 7 விசில் முதல் 8 விசில் வரும்படி வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

பினன்ர் அழுத்தத்தை விடுவித்து குக்கரை திறக்கவேண்டும்.

இதில் இருக்கும் நீரோடு, மேலும் 3 கப் தண்ணீர் சேர்த்து அதில் கழுவிய அரிசியை சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.

அது கொதித்ததும், அதிக வெப்பத்தில் 5 நிமிடங்களுக்கு பெரும்பாலான நீர் வற்றும் வரை நன்றாக வேகவிடவேண்டும்.

இப்போது தீயைக் குறைத்து, ஒரு கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கி, முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

இதை வெந்த அரிசியின் மேல் ஊற்றி மூடி வைக்கவேண்டும்.

மீண்டும் குறைந்த வெப்பத்தில் 10 நிமிடங்கள் இதை சமைக்கவேண்டும்.

பின்ர் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி 2 நிமிடங்கள் அப்படியே வைத்திவிட்டு பின்னர் குக்கரைத் திறந்து அரிசியைக் கிளறிவிடவேண்டும்.

அட்டகாசமான கம கம நெய் மட்டன் சோறு தயார்.

தயிர் வெங்காயம், மாங்காய் வெல்லம் பச்சடி, சால்னா, தால்ஸா, மீன் அல்லது மட்டன் அல்லது சிக்கன் குழம்புகள் அனைத்தும் இதற்கு பிரமாதமாக இருக்கும்.

குறிப்பு

சீரக சம்பா அரிசியிலும் இதைச் செய்யலாம். கறி இளசாகப் பார்த்து வாங்கவேண்டும். பிரியாணிக்கு போடுவதுபோல வெட்டி வாங்கவேண்டும். கறியை மேரியனேட் செய்யும்போது புதினாவை அரைத்தும் சேர்க்கலாம். இனிப்பு பிடிக்காவிட்டால், உலர் திராட்சையை தவிர்த்துவிடவேண்டும்.

தயிர் புளிப்பாக இருந்தால் எலுமிச்சை சாறின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். முந்திரி பொரிக்க 200 கிராம் நெய்யை பயன்படுத்திவிட்டு, மீதி நெய்யை கடைசியில் சோற்றின் மீது ஊற்றி சேர்ப்பது இன்னும் நன்றாக இருக்கும்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.