நெய் கிரேவி : நெய் க்ரேவி; காளான், பன்னீர், முட்டை, உருளைக்கிழங்கு என எதிலும் செய்யலாம்; இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நெய் கிரேவி : நெய் க்ரேவி; காளான், பன்னீர், முட்டை, உருளைக்கிழங்கு என எதிலும் செய்யலாம்; இதோ ரெசிபி!

நெய் கிரேவி : நெய் க்ரேவி; காளான், பன்னீர், முட்டை, உருளைக்கிழங்கு என எதிலும் செய்யலாம்; இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Mar 16, 2025 02:47 PM IST

உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கிரேவியை விரும்பி சாப்பிடுவார்கள். சூப்பர் சுவையான இந்த மசாலாவை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். அத்தனை சுவையானதாக இந்த மசாலா இருக்கும். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

நெய் கிரேவி : நெய் க்ரேவி; காளான், பன்னீர், முட்டை, உருளைக்கிழங்கு என எதிலும் செய்யலாம்; இதோ ரெசிபி!
நெய் கிரேவி : நெய் க்ரேவி; காளான், பன்னீர், முட்டை, உருளைக்கிழங்கு என எதிலும் செய்யலாம்; இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• எண்ணெய் – 2 ஸ்பூன்

• மிளகு – அரை ஸ்பூன்

• சோம்பு – அரை ஸ்பூன்

• பட்டை – 2 துண்டுகள்

• ஸ்டார் சோம்பு – 1

• கிராம்பு – 4

• ஏலக்காய் – 2

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• மல்லித்தழை – சிறிதளவு

• புதினா – சிறிதளவு

• தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – முக்கால் ஸ்பூன்

• சீரகத்தூள் – முக்கால் ஸ்பூன்

• மல்லித்தூள் – அரை ஸ்பூன்

• தயிர் – 100 கிராம்

• முந்திரி – 15

• இஞ்சி – கால் இன்ச்

• பூண்டு – 3

• நெய் – தேவையான அளவு

• உப்பு – தேவையான அளவு

• மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து பெரிய வெங்காயம், மல்லி, புதினா ஒரு கைப்பிடி சேர்த்து வதக்கவேண்டும்.

2. வெங்காயம் கண்ணாடி போல வந்ததும் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவேண்டும். பின்னர் அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து தயிர் சேர்த்து கலந்து விட்டு, இதை கொதிக்கவிடவேண்டும். இது நன்றாக கொதித்தவுடன், அடுப்பை ஆஃப் செய்து இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸியில் போடவேண்டும். அதனுடன் 15 முந்திரிகளை சேர்த்து நன்றாக கூழ்போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

3. மீண்டும் கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து, அது சூடானவுடன், நன்றாக தட்டிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். 4 அவித்த முட்டைகளை லேசாகக் கீறி இதிலே போட்டு ஒரு நிமிடம் வதக்கி நாம் அரைத்த மசாலாவை சேர்த்து, மிக்ஸி கழுவிய நீரையும் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

4. ஒரு கொதி வந்ததவுடன், கடாயை மூடி அடுப்பை மிதமாக எரிய விடவும். சில நிமிடங்கள் கொத்தித்தவுடன், மூடியை திறந்து மல்லித்தழைகளை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி வைக்கவேண்டும்.

குறிப்புகள்

ருசியான எக் நெய் க்ரேவி தயார். அவித்த முட்டைக்கு பதில் காளான், பன்னீர், உருளைக்கிழங்கும் சேர்க்கலாம். எதுவும் சேர்க்காமல் வெறும் க்ரேவியே நன்றாக இருக்கும்.

புரோட்டா, சப்பாத்தி, பூரி, புல்கா, நாண் போன்ற ரொட்டி வகைகள் புலாவ், பிரியாணி, ஆப்பம், இடியாப்பம், இட்லி, தோசை என எல்லாமே இதற்கு பெஸ்ட் ஜோடிகள் தான். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கிரேவியை விரும்பி சாப்பிடுவார்கள். சூப்பர் சுவையான இந்த மசாலாவை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். அத்தனை சுவையானதாக இந்த மசாலா இருக்கும். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.