Garlic Tamarind Thokku : இப்டி ஒரு பூண்டு தொக்கு வாழ்நாளிலே சாப்பிட்டு இருக்க மாட்டீங்க! உச்சுக்கொட்டி தீராது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Garlic Tamarind Thokku : இப்டி ஒரு பூண்டு தொக்கு வாழ்நாளிலே சாப்பிட்டு இருக்க மாட்டீங்க! உச்சுக்கொட்டி தீராது!

Garlic Tamarind Thokku : இப்டி ஒரு பூண்டு தொக்கு வாழ்நாளிலே சாப்பிட்டு இருக்க மாட்டீங்க! உச்சுக்கொட்டி தீராது!

Priyadarshini R HT Tamil
Aug 01, 2024 03:04 PM IST

Garlic Tamarind Thokku : இப்டி ஒரு பூண்டு தொக்கு வாழ்நாளிலே சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். இதை சாப்பிட சாப்பிட உச்சுக்கொட்டிக்கொண்டே இருப்பீர்கள்.

Garlic Tamarind Thokku : இப்டி ஒரு பூண்டு தொக்கு வாழ்நாளிலே சாப்பிட்டு இருக்க மாட்டீங்க! உச்சுக்கொட்டி தீராது!
Garlic Tamarind Thokku : இப்டி ஒரு பூண்டு தொக்கு வாழ்நாளிலே சாப்பிட்டு இருக்க மாட்டீங்க! உச்சுக்கொட்டி தீராது!

தேவையான பொருட்கள்

பூண்டு – ஒரு கப்

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

வர மிளகாய் – 8

வெந்தயம் – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

புளி – 4 கொட்டை

உப்பு – தேவையான அளவு

நாட்டுச்சர்க்கரை – கால் ஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவேண்டும். பின்னர் வெந்தயம், வரமிளகாய், சீரகம் சேர்த்து எதையும் கறுக்கிவிடாமல் அடுப்பை குறைவான தீயில் வைத்து எண்ணெயிலே அவற்றையும் சேர்த்து அனைத்து பொருட்களையும் ஒன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அவற்றை தனியாக ஆறவைத்து, அதனுடன், புளி, உப்பு, நாட்டுச்சர்க்கரை மற்றும் வறுக்கப்பயன்படுத்திய எண்ணெயில் சிறிது சேர்த்து மிக்ஸிஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளவேண்டும். நல்ல மிருதுவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

எண்ணெயில் வறுக்கும்போது, அடுப்பை எப்போதும் குறைவான தீயில் வைத்திருக்க வேண்டும். கருகிவிட்டால் சுவை நன்றாகவே இருக்காது. எனவே வறுக்கும்போதும் கவனம் தேவை.

தேவைப்பட்டால் கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்தால், சூப்பர் சுவையில் பூண்டு தொக்கு தயார். தாளிக்காமலும் அப்படியே சாப்பிடலாம்.

இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதை டிஃபனுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 

இந்த பூண்டு தொக்கை நினைத்தவுடனே செய்து முடித்துவிடாலம். வீட்டில் காய்கறிகளே இல்லையென்றாலும் கவலைவேண்டாம். பூண்டு மட்டும் இருந்தால் போதும்.

பூண்டில் உள்ள நன்மைகள்

பொதுவாக பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்தது. பூண்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஆனால் காரம் அதிகம் இருக்கும். வாயில் துர்நாற்றம் வீசும். அதனால் இதை பச்சையாக சாப்பிட மாட்டார்கள்.

அதனால் பூண்டை பல்வேறு உணவுகளிலும் சேர்த்து எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி இந்த பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் சாப்பிட்ட சாப்பாட்டில் உள்ள சத்தை எளிதாக உடல் உறிஞ்ச உதவுகிறது. உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.

வாயுத்தொல்லையை சரிசெய்யவும், இடுப்பைச் சுற்றியுள்ள தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் வளர்சிதை அதிகரித்து, கெட்ட கொழுப்பை வெளியேற்றிவிடுகிறது.

பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள், ரத்த நாளங்களில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. இதை தினமும் எடுத்துக்கொள்ள உடலில் ஆரோக்கியத்தை அள்ளித்தருகிறது.

உடலில் ஃபரி ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. உடலில் கொழுப்பை சீராக பராமரிக்க உதவுகிறது.

உடலில் உள்ள தமனிகளை சரிசெய்து இதயநோய் வராமல் பாதுகாக்கிறது. முக்கியமாக எலும்புகளுக்கு உறுதியைக் கொடுத்து, எலும்புகள் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

பூண்டை சாப்பிடும்போது அது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். உடலில் தங்கியிருக்கும் கெட்ட வாயுக்களை கரைத்து வெளியேற்றும். வாழ்நாளை நீட்டிக்கும்.

உடலில் சோர்வை நீக்கும். ரத்த அழுத்தம், கொழுப்பு, மாரடைப்பு, பெருந்தமனி அடைப்பு ஆகியவற்றை தடுக்கிறது. ரத்த நாளங்களை சீரான முறையில் வேலை செய்ய உதவுகிறது.

உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதால் உடல் எடை குறைக்க உதவும். ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். கை-கால் வலியைப்போக்கும். வாயுத்தொல்லை முற்றிலும் குறைக்கும்.

வறுக்காத பூண்டை சுளுக்குக்கு மருந்தாகப்பயன்படுத்தலாம். தேமலுக்கும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

பூண்டை இடித்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தின் மீது தடவினால் சுளுக்கு குணமாகும். பூண்டு மற்றும் வெற்றிலையை அரைத்து தேமல் மீது தடவினால் தேமல் மறைந்து ஓடும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாலில் பூண்டை கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் அந்தப் பிரச்னைகள் குணமாகும்.

புற்றுநோயாளிகள் இந்த பூண்டை வேகவைத்து சாப்பிடும்போது, அது அவர்களின் வலியை குறைக்க உதவும்.

இத்தனை நன்மைகள் நிறைந்த பூண்டை தினமும் உணவில் சேர்த்து அதன் முழுப்பலன்களையும் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.