Garlic Rice : பள்ளிகள் துவங்கியாச்சு, லன்ஞ்சுக்கு என்ன என்ற குழப்பம் வேண்டாம்! இதோ மணக்கும் பூண்டு சாதம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Garlic Rice : பள்ளிகள் துவங்கியாச்சு, லன்ஞ்சுக்கு என்ன என்ற குழப்பம் வேண்டாம்! இதோ மணக்கும் பூண்டு சாதம்!

Garlic Rice : பள்ளிகள் துவங்கியாச்சு, லன்ஞ்சுக்கு என்ன என்ற குழப்பம் வேண்டாம்! இதோ மணக்கும் பூண்டு சாதம்!

Priyadarshini R HT Tamil
Jun 15, 2024 11:29 AM IST

Garlic Rice : பள்ளிகள் துவங்கியாச்சு, லன்ஞ்சுக்கு என்ன என்ற குழப்பம் வேண்டாம். இதோ மணக்கும் பூண்டு சாதம் ரெசிபி. செஞ்சு சாப்பிட்டு பாருங்கள்.

Garlic Rice : பள்ளிகள் துவங்கியாச்சு, லன்ஞ்சுக்கு என்ன என்ற குழப்பம் வேண்டாம்! இதோ மணக்கும் பூண்டு சாதம்!
Garlic Rice : பள்ளிகள் துவங்கியாச்சு, லன்ஞ்சுக்கு என்ன என்ற குழப்பம் வேண்டாம்! இதோ மணக்கும் பூண்டு சாதம்!

சோம்பு – ஒரு ஸ்பூன்

பூண்டு – 20 பல்

கறிவேப்பிலை – 2 கொத்து

புதினா – 10 இலைகள்

பச்சை மிளகாய் – 5 (கீறியது)

பெரிய வெங்காயம் – நீளமாக நறுக்கியது

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

வடித்த சாதம் – ஒரு கப்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் பூண்டு சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். பூண்டு நன்றாக சிவக்கவேண்டும். ஆனால் கருகிவிடக்கூடாது. கவனமாக இருக்கவேண்டும்.

பின்னர் முந்திரி, புதினா இலைகள், பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவேண்டும்.

பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவேண்டும். அடுத்து தக்காளியையும் சேர்த்து வதக்கிவிட்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும்.

பின்னர் மல்லித்தழையை தூவி, அதில் வடித்த ஒரு கப் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட்டால் சூப்பர் சுவையில் பூண்டு சாதம் ரெடி.

இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், வத்தல், ஊறுகாய் என இருந்தாலே போதும். இது ஒரு சிறந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி ஆகும்.

தற்போது பள்ளிகள் துவங்கிவிட்டதால், குழந்கைளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்ற குழப்பம வரும். அப்போது இந்த ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்.

இதில் பூண்டின் காரம், மணம் என எதுவும் உங்கள் வாய்க்கு வதை செய்யாது. அதற்குத்தான் பூண்டை நன்றாக வதக்குகிறோம்.

பூண்டின் நன்மைகள்

நாம் சாப்பிட்ட சாப்பாட்டில் உள்ள சத்தை எளிதாக உடல் உறிஞ்ச உதவுகிறது. உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. வாயுத்தொல்லையை சரிசெய்யவும், இடுப்பைச் சுற்றியுள்ள தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் வளர்சிதை அதிகரித்து, கெட்ட கொழுப்பை வெளியேற்றிவிடுகிறது.

பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள், ரத்த நாளங்களில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. இதை தினமும் எடுத்துக்கொள்ள உடலில் ஆரோக்கியத்தை அள்ளித்தருகிறது.

உடலில் ஃபரி ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. உடலில் கொழுப்பை சீராக பராமரிக்க உதவுகிறது. உடலில் உள்ள தமனிகளை சரிசெய்து இதயநோய் வராமல் பாதுகாக்கிறது. முக்கியமாக எலும்புகளுக்கு உறுதியைக் கொடுத்து, எலும்புகள் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

பூண்டை சாப்பிடும்போது அது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். உடலில் தங்கியிருக்கும் கெட்ட வாயுக்களை கரைத்து வெளியேற்றும். 

வாழ்நாளை நீட்டிக்கும். உடலில் சோர்வை நீக்கும். ரத்த அழுத்தம், கொழுப்பு, மாரடைப்பு, பெருந்தமனி அடைப்பு ஆகியவற்றை தடுக்கிறது. ரத்த நாளங்களை சீரான முறையில் வேலை செய்ய உதவுகிறது.

உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதால் உடல் எடை குறைக்க உதவும். ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். கை-கால் வலியைப்போக்கும். வாயுத்தொல்லை முற்றிலும் குறைக்கும்.

வறுக்காத பூண்டை சுளுக்குக்கு மருந்தாகப்பயன்படுத்தலாம். தேமலுக்கும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

பூண்டை இடித்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தின் மீது தடவினால் சுளுக்கு குணமாகும். பூண்டு மற்றும் வெற்றிலையை அரைத்து தேமல் மீது தடவினால் தேமல் மறைந்து ஓடும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாலில் பூண்டை கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் அந்தப் பிரச்னைகள் குணமாகும்.

புற்றுநோயாளிகள் இந்த பூண்டை வேகவைத்து சாப்பிடும்போது, அது அவர்களின் வலியை குறைக்க உதவும்.

இத்தனை நன்மைகள் நிறைந்த பூண்டை தினமும் உணவில் சேர்த்து அதன் முழுப்பலன்களையும் பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.