Garlic Kara Thokku : ஒரு மாதம் ஆனாலும் கெடாது! இந்த ஒரு தொக்கு போதும்! அடிக்கடி கிச்சனில் வெயிலில் அவதிப்பட வேண்டாம்!
Garlic Kara Thokku : ஒரு மாதம் கெடாமல் இருக்கும் பூண்டு கார தொக்கு செய்வது எப்படி?

சாதம் மற்றும் தயிர் சாதத்துக்கு அட்டகாசமான காம்பினேசன் பூண்டு கார தொக்கு. ஒரு மாதம் வரை கெடாது. இந்த வெயில் காலத்தில் அடிக்கடி கிச்சன் சென்று அவதிப்படவேண்டாம். இதை சாப்பாடு, டிஃபன் என இரண்டுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வர மிளகாய் – 20
புளி – நெல்லிக்காய் அளவு
(இரண்டையும் மூழ்குமளவு தண்ணீரில் ஊறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
தாளிக்க
எண்ணெய் – ஒரு கிண்ணம்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – 4 கொத்து
சின்ன வெங்காயம் – 15 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 25
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
எவ்வளவு நன்றாக வதக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. பின்னர் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்வரை வதங்கவிடவேண்டும்.
இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது. ஆனால் மிக்ஸியை கழுவும் தண்ணீர் சிறிதளவு மட்டும் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இந்த பூண்டு கார தொக்கு நிச்சயம் உங்கள் நாவின் சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்கும்.
பூண்டில் உள்ள சத்துக்களும் நன்மைகளும்
ஒரு பல் பூண்டில் 4.5 கலோரிகள் உள்ளது. கொழுப்பு இல்லை. சோடியம் 0.5 கிராம், கார்போஹைட்ரேட்கள் 1 கிராம், சர்க்கரை 0 கிராம், புரதம் 0.2 கிராம், வைட்டமின் சி 0.9 மில்லி கிராம், சிங்க் 0.04 மைக்ரோகிராம் உள்ளது.
பூண்டில் கலோரி, கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் ஆகியவை குறைவாக உள்ளது. இதில் பல்வேறு வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளன. வைட்டமின் சி, சிங்க், கால்சியம் ஆகியவையும் சிறிய அளவில் உள்ளது.
ஆரோக்கிய நன்மைகள்
பூண்டில் உள்ள பயோ ஆக்டிவ் குணங்கள் அதன் மருத்துவ குணத்துக்கு காரணமாகிறது. இதில் உள்ள சல்ஃபைட், சாபோனின், ஃபினோலிக், பாலிசாச்சரைகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. பூண்டு சேர்த்து செய்யப்படும் கூடுதல் உணவுகளில்தான் அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நீங்கள் கடைகளில் வாங்கி வீடுகளில் சேமித்து வைத்து சாப்பிடும் பூண்டில் அத்தனை நன்மைகள் கிடையாது. எனவே நீங்கள் வீட்டில் சமைத்து சாப்பிடும் பூண்டில் அத்தனை ஆரோக்கிய நன்மைகள் கிடையாது. எனவே நீங்கள் பூண்டு சேர்த்து தயாரிக்கப்படும் கூடுதல் உணவு (Garlic food supplement) எடுத்துக்கொண்டு அதன் முழு பலனைப்பெறுங்கள்.
பூண்டு உட்கொள்வது நீங்கள் உட்கொள்ளும் உணவில் சமநிலையை பேணுகிறது.
வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
ரத்த கொழுப்புக்களை குறைக்கிறது.
ஆக்ஸிடேட்டில் அழுத்தத்தை குறைக்கிறது.
இதய நோய்களை குணப்படுத்துகிறது.
பூண்டு எடுத்துக்கொள்வது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். பூண்டை சாப்பிடுவது, பூண்டு தோலை சுவாசிப்பது மற்றும் பூண்டுடன் தொடர்பில் இருப்பது என அனைத்தும் அலர்ஜி கொடுக்கும். வாய் துர்நாற்றத்தை பச்சை பூண்டு குறைக்கும். ஆனால் முற்றிலும் சரியாக்காது.

டாபிக்ஸ்