Garlic Eating Methods : பூண்டை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது? இப்படி சாப்பிட்டு பாருங்க! இரட்டிப்பாகும் நன்மைகள்!
Garlic Eating Methods : பூண்டை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது? இப்படி சாப்பிட்டு பாருங்க! இரட்டிப்பாகும் நன்மைகள்!

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.
நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
பூண்டை பச்சையான சாப்பிடக்கூடாது. அதை தண்ணீர் அல்லது பாலில் வேகவைத்துதான் சாப்பிடவேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் இரண்டு மடங்கு அளவு நமது உடலுக்கு கிட்டும்.
பாலில் கொதிக்கவைத்து இரவில் உறங்கச்செல்லும்முன் பருகினால் ஆழ்ந்த உறக்கம் கிட்டும். பூண்டை இரவு உறங்கச் செல்லும் முன் எப்படி பருகவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பால் – ஒரு டம்ளர் (பசும்பாலாக இருந்தால் நல்லது)
பூண்டு – 10 பற்கள் (உறித்தது)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – அரை ஸ்பூன்
இதனால் உங்கள் உடலில் ஏற்படும் வாயுத்தொல்லைகள் குறையும். கெட்ட கொழுப்புகள் கரைந்தோடும். உங்கள் இதயத்தை வலுப்படுத்தும். வெங்காயத்தைப்போல் பூண்டும் ரத்த கொழுப்பை குறைக்கும் தன்மைகொண்டது.
ரத்த நாளங்களில் உள்ள வெடிப்புக்களை குறைக்கவும் உதவும். பூண்டுடன் கட்டாயம் மஞ்சள்தூளை சேர்த்த பருகினால் சிறு நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கக் கூடியது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது. மேலும் இரவில் உறக்கத்தை அதிகரிக்கவும் உதவுகறிது.
மஞ்சள் புற்றுநோய் முதல் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு தரும் என்பதால், நாம் அதை அன்றாடம் உணவில் சேர்ப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். அது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத்தரும். இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்றுக்களையும் அடித்து விரட்டுகிறது.
பூண்டை இப்படி செய்து சாப்பிடுவது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும் என்பதால், இதை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்து சாப்பிட்டு பலன்பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்