Gardening Tips : மாடித்தோட்டத்திலே சிவப்பு குடை மிளகாயை நீங்கள் வளர்க்கலாம்; அது எப்படி என்று பாருங்கள்!
Gardening Tips : நீங்கள் மாடித்தோட்டத்திலேயே சிவப்பு குடை மிளகாயை வளர்க்க முடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Gardening Tips : வீட்டிலேயே நீங்கள் சிவப்பு குடை மிளகாயை வளர்க்க முடியும்
சிவப்பு குடை மிளகாய் சூப்பர் ஃபுட் என்று கூறுப்படும் அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுதான். இதன் மிதமான இனிப்பு சுவை மற்றும் மொறுமொறுப்பான குணத்துக்காக இதை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால், இவை பச்சை குடை மிளகாயைவிட கொஞ்சம் கூடுதல் விலை கொண்டவை. இதனால் மக்கள் சிவப்பு குடை மிளகாயை அதிகம் வாங்க முடிவதில்லை. ஆனால் நீங்கள் இதை வீட்டிலேயே வளர்க்க முடியும். மேலும் அதிக அறுவடை காலங்களில் விற்கலாம். அண்டை வீடுகளுக்கு பரிசாகக் கொடுக்கலாம்.
விதைகள்
உங்கள் வீட்டில் சிவப்பு குடை மிளகாய் இருந்தால், அதன் விதைகளை எடுக்கலாம் அல்லது விதைகளை மார்க்கெட்டில் இருந்து வாங்கிக்கொள்ளலாம். சிவப்பு குடை மிளகாயை மெதுவாக வெட்டி விதைகள் ஆரோக்கியமானதாக உள்ளதா என்பதை பார்த்துவிட்டு, மெதுவாக எடுக்கவேண்டும். கரும்புள்ளிகள் இருந்தால் எடுக்கக் கூடாது.
முளைக்க வைக்கும் வழி
பெரிய தொட்டிக்கு மாற்றும் முன்னர் விதைகளை முளைக்க வைக்கவேண்டும். நல்ல தரமான மண்ணில் விதைகளை இடவேண்டும். மேலே ஒரு லேயர் மண் தூவி மூடிவிடுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றுங்கள். அதை ஒரு மூடி அல்லது பிளாஸ்டிக் கவர் போட்டு மூடிவைத்தால்தான் ஈரப்பதம் நிலைத்திருக்கும்.