Gardening Tips : பால்கனி தோட்டத்தில் கூட எளிதாக வளர்க்கலாம் எலுமிச்சை! இதோ எப்படி என்று பாருங்கள்?
Gardening Tips : பால்கனி தோட்டத்தில் கூட எலுமிச்சையை வளர்க்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதோ எப்படி என்று பாருங்கள்.

உங்கள் வீட்டு பால்கனி தோட்டத்திலே எலுமிச்சை பழச்செடியை எளிதாக வளர்க்க முடியும். அது எப்படி என்று பாருங்கள். வீட்டில் தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் எலுமிச்சைப்பழங்களை வீட்டில் வளர்ப்பதில் தயக்கம் காட்டுவார்கள். ஏனெனில் அதில் அடிக்கடி பூ பூக்கும் ஆனால், பனிக்காலத்துக்கு முன்னர்தான் காய் காய்க்கும். நீங்கள் இதற்கு முன்னர் இந்த பிரச்னைகளை சந்தித்து இருந்தீர்கள் என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, பழத்தை பால்கனி தோட்டத்திலே வளர்த்துப் பாருங்கள்.
விதைகள் அல்லது செடி
நீங்கள் விதைகள் வைத்து முளைக்க வைக்கப் போகிறீர்களா அல்லது செடியை வாங்கி வளர்க்கப்போகிறீர்களா என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் விதையில் இருந்து வளர்க்கும்போதுதான் நீங்கள் முழு வளர்ச்சி மற்றும் வளரும் நிலை என அனைத்தையும் நீங்கள் பார்க்க முடியும். ஆனால் செடியை நட்டுவைத்து வளர்ப்பது உங்களுக்கு உறுதியாகப் பழம் கொடுக்கும்.
சரியான தொட்டி
நீங்கள் தொட்டியில் செடியை வைத்து வளர்க்கப்போகிறீர்கள் என்றால், அதற்கான பானை நல்ல பெரியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் செடி நன்றாக வளரும். தொட்டி அல்லது பை, அது நல்ல அகலமானதாக இருக்கவேணடும். 7 இன்ச்கள் ஆழமானதாக இருக்கவேண்டும்.
மண் கலவை
நர்சரியில் உள்ள தோட்ட பராமரிப்பாளரிடம், உங்கள் தொட்டியில் போடும் மண் கலவை எப்படி இருக்கவேண்டும் என்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். 50 சதவீம் தோட்ட மண், 20 சதவீதம் மண்புழு உரம் அல்லது ஆர்கானிக் உரம் மற்றும் வேறு மண்ணையும் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை
நீங்கள் செடிக்கு தண்ணீர் ஊற்றும்போது, எச்சரிக்கையுடன் தண்ணீர் ஊற்றவேண்டும். ஏனெனில் எலுமிச்சை மரத்தின் மயக்கும் மணமும், பழமும் சில பூச்சிகளை சுண்டி இழுக்கும். எனவே மண்ணி மேற்பகுதி காய்திருந்தால் மட்டும்தான் தண்ணீர் ஊற்ற வேண்டும் (குறிப்பாக பனிக்காலத்தில்) கோடை காலத்தில், ஒரு நாளில் ஒருமுறை தண்ணீர் ஊற்றவேண்டும்.
சூரிய ஒளி தேவை
எலுமிச்சை செடிகளுக்கு சூரிய ஒளி தேவை. பிரகாசமான சூரிய ஒளி அதில் படவேண்டும். அப்போதுதான் செடி வளர்ந்து, பூக்கள் மற்றும் பழங்கள் வரும். எனவே நீங்கள் பால்கனி தோட்டத்தில் செடி வைத்தால், அந்த தொட்டிக்கு போதிய இடைவெளி உள்ளதா என்றும், தினமும் 6 மணி நேர சூரிய ஒளி கிடைக்கிறதா என்றும் பாருங்கள். மறைமுக சூரிய ஒளியும் சில மணி நேரங்கள் கிடைக்கவேண்டும்.
மண்ணை கிளறிவிடவேண்டும்
எலுமிச்சை செடியை சுற்றியும் உள்ள மண்ணை நன்றாகக் கிளறிவிடவேண்டும். நீங்கள் செடியை வீட்டுக்கு கொண்டு வரும்போது, இலைகள் வளரத் துவங்கும். ஒவ்வொரு 20 முதல் 25 நாட்களிலும் நீங்கள் மண்ணை கிளறிவிடவேண்டும்.
இதற்கு உரம் தேவையா?
பழம் விரைவில் வரவேண்டுமெனில் நீங்கள் எலுமிச்சை செடிக்கு கட்டாயம் உரமிடவேண்டும். ஆனால், இதை பூக்கள் பூக்கும் தருணத்தில் செய்யவேண்டும். இலைவிடும் பருவத்தில் செய்யக்கூடாது. ஒருமுறை பூக்கள் வரத்துவங்கிவிட்டால், அதற்கு உரமிட்டு, தேவையற்ற இலைகளை களைய வேண்டும்.
பழங்கள் எப்போது வரத்துவங்கும்?
பூக்கள் பூத்தவுடனேயே பழங்கள் வரத்துவங்கும். எலுமிச்சை செடியில் உள்ள பூக்கள், வெள்ளை நிறத்தில் இருக்கும். அதன் மேல் பொன்னிற மொட்டுக்கள் இருக்கும். அதற்குள் பச்சை கொட்டைபோன்ற காய்கள் இருக்கும். இது முதல் பூ பூத்த 2 வாரத்தில் இப்படி இருக்கும்.
எப்போது அறுவடை செய்வது?
ஒன்றரை மாதத்திற்குப் பின்னர், பூக்கள் காயாக துவங்கிய பின்னர் எலுமிச்சைகள் முழு வீச்சில் முளைக்கத் துவங்கும். அடர் பசுமை நிறத்தில் காய்கள் இருக்கும். இது இன்னும் சில வாரங்கள் எடுத்து மஞ்சள் நிறத்துக்கு மாறும். எனவே அது மாறும் வரை காத்திருங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்