தோட்டக்கலை குறிப்புகள் : அதிர்ஷ்ட மூங்கிலை உங்கள் படுக்கையறையில் வைக்கும்போது நடக்கும் ஆச்சர்யங்கள்!
தோட்டக்கலை குறிப்புகள் : அதிர்ஷ்ட மூங்கிலை உங்கள் படுக்கையறையில் வைக்கும்போது எத்தனை ஆச்சர்யங்கள் ஏற்படுகிறது என்று பாருங்கள்.

இது நேர்மறையான ஆற்றலை ஈர்க்கிறது
அதிர்ஷ்ட மூங்கில், உங்கள் வீட்டுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறது. செல்வம் மற்றும் இதமான சூழலையும் கொண்டு வருவதாக ஃபெங்க் சூயி கொள்கைகள் தெரிவிக்கின்றன. இதை நீங்கள் படுக்கையறையில் வைத்தால் படுக்கையறையின் நேர்மறையான ஆற்றல் அதிகரிக்கும். அது அமைதியான ஆற்றலை அதில் நிரப்பும்.
காற்றின் தரம்
படுக்கையறையில் உள்ள காற்றின் தரம் எப்போதும் உயர்ந்திருக்கவேண்டும். அப்போதுதான் நாம் சுவாசிக்க எவ்வித இடையூறுமின்றி இருக்க முடியும். அதற்கு மற்ற வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளைப் போல் மூங்கிலும் உதவுகிறது. இது காற்றை சுத்தம் செய்கிறது. காற்றில் உள்ள நச்சுக்களை உறிஞ்சிக்கொள்கிறது. மேலும் உங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனைக் கொடுக்கிறது. சுத்தமான மற்றும் புத்துணர்ச்சி தரும் சூழலை படுக்கையறைக்குள் உருவாக்குகிறது.
மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கிறது
இந்த அமைதியான பசுமை நிறம் மற்றும் இந்த இயற்கை செடியை நீங்கள் படுக்கையறையில் வைக்கும்போது, அது இரு இதமான சூழலை மனதில் ஏற்றுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் மனஅமைதியை மேம்படுத்துகிறது.
உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது
காற்றின் தரம் உயரும்போதும், அமைதியான ஆற்றலைக் கொடுக்கும்போதும், அதிர்ஷ்ட மூங்கில் உங்களுக்கு மிகவும் நிம்மதியான உறக்கத்தைக் கொடுக்கிறது. இது உங்கள் உறக்க சூழலையே மாற்றுகிறது.
குறைவான பராமரிப்பு
இந்த தாவரத்தை பராமரிப்பதும் எளிது. இதற்கு குறைவான தண்ணீர் மற்றும் வெளிச்சம் இருந்தாலே போதும். இதை படுக்கையறைக்கு ஏற்ற சிறப்பான ஒரு தாவரமாக மாற்றுகிறது. நீங்கள் புதிதாக தாவரங்கள் வளர்க்க துவங்கியவராக இருந்தாலும், இது உங்களுக்கு எளிமையானதுதான்.
அழகிய தோற்றம்
அதிர்ஷ்ட மூங்கில் வைத்தால் உங்கள் படுக்கையறைக்கு அது அழகிய தோற்றத்தைக் கொடுக்கும். சுத்தமான மற்றும் நளிமானவும் இது பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும். இது இயற்கையின் அழகை பிரதிபலிக்கும். உங்கள் படுக்கையறையை ரம்மியமாக்கும்.
வளர்ச்சி மற்றும் மீண்டெழும் திறனைக் காட்டுகிறது
இந்த செடி நேராகவும், வலுவாகவும் வளரும் தன்மைகொண்டது. இதன் இந்த வலுவான தண்டுகளைப் பார்க்கும்போது நமக்கு தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மீண்டெழும் திறனைப் பெற ஒரு நேர்மறையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது உங்கள் படுக்கையறையில் இருப்பது, நீங்கள் நிம்மதியாக உறங்கி உற்சாகமாக எழ உதவுகிறது.
இதை நீங்கள் செராமிக் தொட்டியில் வைப்பது நல்லது. எப்போதும் அதில் சிவப்பு நிற ரிப்பன் கட்டப்பட்டு இருக்கும். அதிர்ஷ்ட மூங்கிலில் 5 ஃபெங் சூயி உட்பொருட்கள் உள்ளது. அது மரம் (தாவரம்), தண்ணீர் (அடியில் வைப்பது), பூமி (அதன் அடியில் இடப்படும் கற்கள்), நெருப்பு (சிவப்பு நிற ரிப்பன்) மற்றும் மெட்டர் (செராமிக் அல்லது கண்ணாடி தொட்டி) இவை ஆற்றலை உங்கள் படுக்கையறைக்குள் சமப்படுத்த உதவுகிறது.

டாபிக்ஸ்