Gardening Tips : மாடியில் அழகிய தோட்டம் அமைக்க ஆசையா? இதோ இந்த வழிகளை பின்பற்றுங்கள்!
Gardening Tips : மாடியில் அழகிய தோட்டம் அமைக்க ஆசையா? இதோ இந்த வழிகளை பின்பற்றுங்கள். உங்கள் மாடித்தோட்டம் அனைவரையும் வரவேற்கும் வகையில் சிறப்பாக இருக்கும்.
உங்களின் சிறப்பான தோட்டத்தை உருவாக்குங்கள்
மாடியில் தோட்டம் அமைக்க வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவென்று தெரிந்துகொண்டால் நீங்கள் அழகிய வீட்டையும், தோட்டத்தையும் உருவாக்கிவிடலாம். இது உங்கள் ஓய்வு நேரத்தை நன்றாக செலவிடவும் உதவும். உங்கள் வீட்டுக்கு பசுமை தோற்றமும் கிடைக்கும். மேலும் காய்கறிகள் மற்றும் பூக்களும் கிடைக்கும். அவற்றை வீட்டுக்கும் உபயோகித்தும் கொள்ளலாம். உங்கள் வீட்டுத்தோட்டத்தில் பல்வேறு வகை தாவரங்களையும் நடலாம். எப்படி இதை தொடங்கலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டு தோட்டத்தை உங்களுக்கு விருப்பமாகவும் வைத்துக்கொள்ளலாம். அது உங்களின் மனஅமைதியையும் அதிகரிக்கும்.
குப்பைகளை அகற்றுங்கள்
உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் எப்போதும் குப்பைகள் அதிகம் சேர்ந்திருக்கும். மேலும் நாம் தேவையற்ற பொருட்களை மொட்டை மாடியில் தான் வைத்திருப்போம். இதனால் மொட்டை மாடி எப்போதும் குப்பை போடும் இடமாகத்தான் இருக்கும். நாம் அது மீண்டும் தேவைப்படும் என்று குப்பையை சேர்த்து வைத்திருப்போம். ஆனால், உங்களுக்கு மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கவேண்டுமெனில், நிறைய இடம் தேவை. அதற்காக அந்த இடத்தை நீங்கள் சுத்தம் செய்யவேண்டும்.
இடத்தின் அளவு
மொட்டை மாடியைச் சுத்தம் செய்தபின்னர், தொட்டிகள் வைக்க ஏதுவாக இடம் எங்கு உள்ளது, எங்கு சூரியவெளிச்சம் நன்றாகப்படும் இடம் எது என்று பாருங்கள். அப்போதுதான் செடிகள் வளர்க்க ஏதுவாக இருக்கும். எனவே மறைமுக வெளிச்சம் படும் இடம். நிழல் படும் இடம் எது என்று பார்த்துக்கொள்ளுங்கள். 2-4 மணி நேரம் வெயில் கிடைக்கவேண்டும். அதற்கு ஏற்ப திட்டமிடுங்கள்.
தொட்டிகள் மற்றும் கண்டெய்னர்கள்
இடங்கள் எல்லாம் தேர்வு செய்த பின்னர், நீங்கள் என்ன பூச்செடிகளை நடலாம் அல்லது மூலிகைச் செடிகள் நடலாம் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அவற்றுக்கு தொட்டிகள் அல்லது எது வேண்டும் என்பதையும் முடிவு செய்துகொள்ளுங்கள். தொட்டிகள் வட்டமாகவும், சிலிண்டர் போன்ற வடிவிலும் இருக்கும். அதில் எதை தேர்ந்தெடுக்கலாம் எனப்பாருங்கள். கண்டய்னர்கள் அதிக இடத்தை அடைக்கும் மற்றும் நீளமானதாகவும் இருக்கும்.
மண் கலவை
நீங்கள் இப்போதுதான் முதல் முறை தோட்டம் அமைப்பவர் என்றால், நல்ல தரமான மண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அந்த மண் கலவையே சிறப்பானதாக இருக்கட்டும். நீங்கள் அதை நர்சரி கார்டனில் வாங்கலாம் அல்லது தேர்ந்தெடுத்து வாங்கிகொள்ளலாம். நீங்கள் முதல் முறை தோட்டம் அமைப்பவர் என்றால் அது மண் கலவை எப்படி இருக்கவேண்டும் என்றால் மண், மண்புழு உரம், தேங்காய் நார், வேப்பம் புண்ணாக்கு அல்லது எண்ணெய், கரிமப்பொருட்களும் வேண்டும்.
எளிதாக வளர்க்கக்கூடிய தாவரங்கள்
தாவரங்களையும், பூக்களையும் நன்றாக பராமரித்து வளர்க்கவேண்டும். முதலில் எளிமையாக வளர்க்கக்கூடிய தாவரங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அந்த தாவரங்கள் உங்களுக்கு வளர்ப்பதற்கும் எளிதாக இருக்கும். தோட்டக்கலையை ஆர்வமாக்கும். செரி தக்காளிகள், பாம்புச் செடி, பூச்செடிகளை வளர்த்து முதலில் அனுபவம் பெற்று பின்னர் பிற செடிகளைத் தேர்ந்தெடுங்கள்.
தண்ணீர் தேவைகள்
உங்கள் தாவரங்களுக்கு ஆர் தண்ணீர் ஊற்றுவதை உறுதிப்படுத்துங்கள். குறிப்பாக வளரும் பருவத்தில் அது கட்டாயம் தேவை. உங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விடுங்கள் அல்லது ஆர்ஓ தண்ணீரை பக்கெட்டில் எடுத்துச்சென்று ஊற்றுங்கள். உங்கள் மண்ணில் மினரல்கள் அதிகம் சேர்ந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
கம்போஸ்ட்
நீங்கள் தோட்டம் அமைக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் முன்னரே சிறிய கம்போஸ்ட் தொட்டியை வாங்கி அதில் வீட்டில் மிஞ்சும் காய்கறி கழிவுகளை சேர்த்து இயற்கை உரம் தயாரிக்கத் துவங்குங்கள். அதை உங்கள் தாவரங்களுக்கு பயன்படுத்தலாம்.
வெர்டிக்கல் தோட்டம்
உங்கள் வீட்டு மாடியில் போதிய அளவு இடமில்லை என்றால், நீங்கள் வெர்டிக்கல் தோட்டம் அமைக்க திட்டமிடுங்கள். அதற்கு தேவையான செட்அப்பை நீங்கள் ஆன்லைன் அல்லது நர்சரி கார்டனில் இருந்து பெறலாம். இதில் சிறிய மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். தொங்கும் தொட்டிகள் அல்லது தொட்டி ஷெவ்ஃப்கள் போன்றவற்றையும் நீங்கள் செய்யலாம்.
வெட்டுவது
தாங்கள் வளர்க்கும் செடிகளை வெட்டுவதற்கு சிலர் தயங்குவார்கள். ஏனெனில் மீண்டும் தாவரங்கள் முளைக்கத்துவங்காது என அவர்கள் அஞ்சுவார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. நீங்கள் செடியில் வளராத பாகங்களை அதிகம் வெட்டினால், அது உங்களுக்கு மீண்டும் வளரும். வெட்டவெட்டத்தான் தாவரங்கள் செழித்து வளரும்.
பராமரிப்பு மற்றும் மகிழ்ச்சி
நீங்கள் இவற்றையெல்லாம் முதலில் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் ஆரோக்கியமான தோட்டம் அமைக்க முடியும். அழகான தோட்டமாகவும் அது இருக்கும். எனவே செடிகளை நடுங்கள். போதிய தண்ணீர் விடுங்கள். உரங்கள் போடுங்கள். தொடர்ந்து வெட்டி புதிய செடிகள் வளர்வதற்கு உதவுங்கள். உங்களுக்கு விரைவில் அழகிய தோட்டம் கிடைக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்