Gardening Tips : புத்தம் புதிய புதினா இலைகளை தினமும் பறித்து சாப்பிட ஆசையா? இதோ வீட்டில் வளர்க்கலாம் பாருங்கள்!
Gardening Tips : புத்தம் புதிய புதினா இலைகளை தினமும் பறித்து சாப்பிட ஆசையா? இதோ வீட்டிலே வளர்க்கலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் புதினாச் செடியை வெற்றிகரமாக வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். வீட்டில் புதினா செடியை வைத்துக்கொண்டால், நீங்கள் புதினாவை வெளியே சென்று வாங்கவேண்டிய தேவையில்லை. குளிர் காலங்களில் புதினா உங்கள் உயிரைக்காக்கும் மருந்தாகப் பார்க்கலாம். தண்ணீரில் ஊறவைத்து பருகுவது முதல் பானங்கள் வரை அகைத்திலும் சேர்த்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல, வீட்டில் அதை வளர்க்கும்போது, அது வீடு முழுவதும் மனம் பரப்பும். சில புதினா இலைகள்தான் உங்கள் உணவின் சுவையை மாற்றுபவை. தொடர்ந்து அதன் தேவையிருப்பதால் அதன் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே இந்த புதினா இலைகளை வீட்டில் வளர்த்தால், நீங்கள் இதை அக்கம்பக்கத்தினருக்கு இலவசமாகவே கொடுத்து அன்பை வளர்க்கலாம் அல்லது விற்கலாம். உங்கள் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தலாம். இந்த புதினாவை வீட்டில் வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
விதைகள் அல்லது செடி
வீட்டில் புதினா வளர்க்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், மக்களின் மனதில் முதலில் தோன்றுவது விதைகள் மூலம் வளர்க்கலாமா அல்லது செடிகளை நட்டு வளர்க்கலாமா என்பதுதான். விதைகள் தூவினால், அதிகப்படியாக முளைத்துவிடும் என்பதால், நீங்கள் தண்டை நட்டு வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வளரவைத்து, அறுவடை செய்துகொள்ளலாம்.
வெட்டுதல்
புதினா செடியை வளர்க்கும்போது, அதை வெட்டுவதால், இலைகள் விரைவில் வெளியேவர அது உதவும். விதைகள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். முளைத்து, பின்னர் இலைகள் வெளியே வரும். வேர்கள் தோன்றி, தண்டுகள் வளர்ந்து பின்னர்தான் முளைக்கும்.
எங்கு வைக்கவேண்டும்?
புதினா இலைகளுக்கு கொஞ்சாமக சூரிய ஒளி கிடைத்தாலே போதும். முழு மற்றும் நேரடி சூரிய ஒளி இலைகளை காய்ந்து கருக்கிவிடும். அதிக நிழலான இடமாக இருந்தாலும், அது உங்கள் வேரை அழுகவைத்துவிடும். இரண்டு மணி நேரம் மறைமுக சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
புதினாவுக்கு சிறந்த மண்
புதினாவை செடிகளை வைத்து நட்டால், அதற்கு நல்ல மண் தேவை. அந்த மண் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். அந்த மண்ணில் இயற்கை உரம், தேங்காய் நார் உரம், வேப்ப எண்ணெய் அல்லது வேப்பம் புண்ணாக்கு என அனைத்தையும் சேர்த்து கலந்து பின்னர் தொட்டியில் நிரப்பிக்கொள்ளவேண்டும். இந்த கலவையை உங்கள் நர்சரி ஊழியர்களே செய்து கொடுப்பார்கள். உங்களுக்கு அறிவுரை தேவைப்பட்டால் அவர்களிடம் இருந்தும் பெறலாம்.
எதில் நடவேண்டும்?
புதினாவை தொட்டியில் நடுவதா அல்லது தோட்டத்தில் நேரடியாக நடுவதா என்ற கேள்வி அடுத்து எழும். புதினாவை எதில் வேண்டுமானாலும் நடலாம். ஆனால், நேரடியாக மண்ணில் நடும்போது, தாவரங்கள் படர்ந்து வளரும் தன்மைகொண்டது. அதற்காக அதை மட்டும் கொஞ்சம் அகலமான தொட்டியில் வைத்துக்கொள்ளலாம். வளரத்துவங்கிவிட்டால் தொடர்ந்து புசுபுசுவென வளர்ந்துகொண்டே இருக்கும்.
வெட்டும் இடைவெளி
விதைகளால் முளைக்காவிட்டாலும், அவை புசுபுசுவென சிறிது காலத்தில் வளரத்துவங்கிவிடும். எனவே, அவை வளரும் விதத்ததுக்கு ஏற்ப குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி வெட்டிவிடவேண்டும். மற்ற தொட்டிகளில் இருந்து சிறிது இடைவெளி விட்டு வளருங்கள். அப்போதுதான், அது படர்ந்தாலும் மற்ற தாவரங்களை தாக்காது.
தண்ணீர் விடுவது எப்படி?
புதினாவில் இலைகள் மற்றும் வேர்கள் இரண்டுமே அதிக தண்ணீர் ஊற்றினால், அழுகிவிடும். இலைகள் சிறுக்க துவங்கிவிடும். கருப்பாகிவிடும். வேர்கள் உடையும். எனவே மண் ஈரமானால் போதும். தண்ணீரில் மூழ்கத்தேவையில்லை.
கூடுதல் உரங்கள்
புதினா நன்றாக வளர எப்போதும் கூடுதல் உரங்கள் தேவைப்படாது. எனவே எப்போதாவது அரிசி தண்ணீர் மற்றும் வாழைப்பழத்தின் தோல் ஊறிய தண்ணீரை மண்ணைச் சுற்றி ஊற்றவேண்டும்.
பூச்சிகளில் இருந்து காப்பது எப்படி?
மனிதர்கள் மட்டுமல்ல, புதினாவின் மணம் பூச்சிகளையும் சுண்டி இழுக்கும் தன்மைகொண்டது. பூச்சிகள் வந்தால் பிரச்னைகளும் கூடவே வரும். எனவே புதினா இலைகளை பூச்சிகள் தாக்கிவிடாமல் இருக்க, அதில் கொஞ்சம் வேப்ப எண்ணெயை தெளித்துவிடுங்கள்.
பறிப்பது எப்போது?
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் சரியாக முடித்துவிட்டீர்கள் என்றால், புதினா செழித்து வளரத்துவங்கிவிடும். ஒரேடியாக அவையனைத்தையும் பறித்துவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கவேண்டும். அதேபோல் வேர் வரை வெட்டாமல், சிறிது விட்டு வெட்டவேண்டும். அப்போது தான் அது மீண்டும் முளைக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்