தோட்டக்கலை குறிப்புகள் : மண் வேண்டாம்; தண்ணீரே போதும்! வீட்டிலே வளர்க்கலாம் மல்லித்தழை! 40 நாளில் சாத்தியம்!
தோட்டக்கலை குறிப்புகள் : வீட்டில் மண் இல்லாமல் தண்ணீரிலே நீங்கள் மல்லித்தழையை 40 நாளில் வளர்க்க முடியும். அது எப்படி என்று பாருங்கள்.

இந்திய சமையலறையல் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் முக்கியமானது மல்லித்தழையாகும். இதை நீங்கள் சிக்கன் சூப் முதல் உப்புமா வரை அனைத்து உணவிலும் சேர்க்கவேண்டும். அப்போதுதான் உணவின் மணம் அதிகரிக்கும். காய்கறிகள், சாம்பார் முதல் கிரேவி வரை அனைத்தின் சுவையையும் அதிகரிக்கச் செய்வது இந்த மல்லித்தழையாகும். இதை நீங்கள் வீட்டிலே தண்ணீரில் வைத்தே வளர்த்துவிட முடியும். அது எப்படி என்று பாருங்கள்.
விதைகள்
முழு மல்லி விதைகளை, நல்ல தரமானதா என பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். உடைந்திருக்கவோ அல்லது புழு, பூச்சி வைத்திருக்கவோ கூடாது. நல்ல மெத்தென்ற விதைகளாக அவை இருக்கவேண்டும்.
ஊறவைத்து உடைக்கவேண்டும்
நீங்கள் அந்த விதைகளை முன்னரே ஊறவைத்துக்கொள்ளலாம் அல்லது பின்னரும் ஊறவைத்துக்கொள்ளலாம். ஒரு தரையில் விதைகளை வைக்கவேண்டும். அதை மெதுவாக உடைக்கவேண்டும். இரண்டாக அது உடைந்து வரவேண்டும்.
தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்
அடுத்து ஒரு பாத்திரத்தில் உடைந்த விதைகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவிடவேண்டும். இதை 24 மணி நேரம் ஊறுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் அல்லது ஒரிரவு ஊறவைக்கவேண்டும். இது விரைவிலே வெளிப்புறத்தில் உள்ள தோலை மிருதுவாக்கும். அது முளைவிட உதவும். எனவே நன்றாக ஊறவிடுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு மேலும் ஊறவிடக்கூடாது.
தொட்டி
ஒரு சிறிய தொட்டியை எடுத்து, அதில் அடிப்புறத்தில் சில துவாரங்களை இடவேண்டும். அதை ஒரு வாலி அல்லது ஆழமான பாத்திரத்தின் மேல் வைக்கவேண்டும். இந்த துவாரத்தை தண்ணீர் தொடவேண்டும். மூழ்கடிக்கக் கூடாது.
தேவைப்பட்டால் இதையும் செய்ங்க
உங்களுக்கு தேவைப்பட்டால், மண்ணுக்கு பதில், நீங்கள் அடியில் தேங்காய் நார் சேர்த்துக்கொள்ளலாம். இது விதைகளுக்கு ஊட்டம் கொடுக்கும். தேங்காய் நார் கழிவுகளை தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். அடுத்து அதிகம் உள்ள தண்ணீரை பிழிந்து எடுக்கவேண்டும். தொட்டியில் பரவலாக தூவி விடவேண்டும்.
விதைகளை சேர்க்கவேண்டும்
அடுத்து ஊறவைத்த விதைகளை சேர்க்கவேண்டும். தண்ணீரில் பரவலாக அனைத்து இடங்களிலும் ஒரே அளவில் சேர்க்கவேண்டும். அவை நன்றாக போதிய ஈரப்பதம் கிடைக்கும் அளவுக்கு மூழ்கியுள்ளதா என்பதையும் பார்க்கவேண்டும்.
சூரிய ஒளியில் வைக்கவேண்டும்
இப்போது மல்லித்தழைக்கு மறைமுக சூரிய ஒளி கிடைக்கவேண்டும். அப்போதுதான் அது முளைத்து வளரும். ஜன்னலுக்கு அருகில் தொட்டியை வைக்கவேண்டும். இங்கு 4 முதல் 5 மணி நேரம் தினமும் இயற்கை சூரிய ஒளி கிடைக்கும்படி செய்யவேண்டும். அடிக்கடி தண்ணீர் மாற்றக்கூடாது.
எப்போது தண்ணீர் மாற்றவேண்டும்?
செடி தண்ணீரில் வளர்வதால், நீங்கள் தண்ணீரை எப்போதும் ஃபிரஷ்ஷாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றிவிடவேண்டும். அப்போதுதான் வேர்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
முளைவிடுவது
10 நாட்களில் அது முளைத்துவங்கும். சிறிய முளை விதைகளில் இருந்து வரும். முளைக்கத் துவங்கியவுடன், வேர்களை தண்ணீரில் மூழ்கடித்து வைக்கவேண்டும்.
தண்டுகள்
அடுத்த 20 நாளில், தண்டுகள் பிடித்து வளரத் துவங்கியிருக்கும். நிறைய இலைகளும் முளைக்கத் துவங்கியிருக்கும். ஆனால் அவை முழு இலைகளாக இருக்காது. இந்த தருணமத்தில் பறித்துவிடக்கூடாது. மேலும் சில நாட்கள் காத்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட 35 நாட்களில் நீங்கள் அறுவடையைத் துவக்கலாம். சிறிய தொட்டியில் இருந்து வளரத்துவங்கிய மல்லித்தழையை ஃபிரஷ்ஷாக பறித்து சமையலில் சேர்த்து மகிழ்ந்திருங்கள்.

டாபிக்ஸ்