தோட்டக்கலை குறிப்புகள் : இந்தப் பூச்செடிகளை மே மாதத்தில் வைத்தால், அது ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் பூ பூக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தோட்டக்கலை குறிப்புகள் : இந்தப் பூச்செடிகளை மே மாதத்தில் வைத்தால், அது ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் பூ பூக்கும்!

தோட்டக்கலை குறிப்புகள் : இந்தப் பூச்செடிகளை மே மாதத்தில் வைத்தால், அது ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் பூ பூக்கும்!

Priyadarshini R HT Tamil
Published May 19, 2025 07:00 AM IST

தோட்டக்கலை குறிப்புகள் : நீங்கள் மே மாதத்தில் இந்தச் செடிகளையெல்லாம் நட்டு வைத்தால் அது ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் பூக்களை பூக்கச் செய்யும். அது எந்தச் செடிகள் என்று பாருங்கள்.

தோட்டக்கலை குறிப்புகள் : இந்தப் பூச்செடிகளை மே மாதத்தில் வைத்தால், அது ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் பூ பூக்கும்!
தோட்டக்கலை குறிப்புகள் : இந்தப் பூச்செடிகளை மே மாதத்தில் வைத்தால், அது ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் பூ பூக்கும்!

சாமந்திப்பூ

இந்திய மலர்களிலேயே அழகிய மலர் என்றால் அது சாமந்திப்பூக்கள்தான். இதை பார்ப்பதற்கே கண்களுக்கு குளுமையாக இருக்கும். இந்தப் பூக்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் கண்களைக் கவர்வதாக இருக்கும். இதன் அழகிய இதழ்கள் உங்கள் பால்கனி மற்றும் தோட்டம் இரண்டையும் அழகாக்கும். நீங்கள் உங்கள் வீட்டுக்கு சாமந்திப்பூக்களின் செடிகளை கொண்டு வந்தால் அது உங்கள் தோட்டத்தில் அதிக மலர்களை மலரச்செய்யும்.

ரோஜாப் பூக்கள்

ரோஜாப்பூக்கள் பூக்க கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். ஆனால் அது பூக்கத் துவங்கிவிட்டால், அதன் மணம் உங்களை மயக்கும். அதில் பூக்களை விரைந்து பூக்கச் செய்வதற்கு, உங்கள் வீட்டுக்கு ஆரோக்கியமான செடியை வாங்கி வாருங்கள். அதில் 2 அல்லது 3 பூக்கள் இருந்தால் நல்லது. இதற்கு உரமிட்ட மண்ணை அடியில் சேர்க்கவேண்டும். இருவாரத்திற்கு ஒருமுறை உரமிடவேண்டும்.

சங்குப்பூக்கள்

விதைகளில் இருந்து வளர்க்கும்போது, சங்குப்பூக்கள் மிகவும் நன்றாக இருக்கும். இது வளர்ந்து பூக்கள் பூப்பதற்கு காலமும், அதிகளவு முயற்சியும் எடுத்துக்கொள்ளும். செடியை நீங்கள் வாங்கிவைத்து வளர்த்தால் அது மிகவும் நல்லது. அது ஓரிரு மாதங்களிலே வளர்ந்து பூக்கத் துவங்கிவிடும். இதன் கொடி தோட்டம் முழுவதும் படர்ந்திருக்கும்.

அமைதி அல்லி

நீங்கள் வீட்டுக்குள் வைத்து வளர்க்க மிகவும் ஏற்றது இந்த அல்லி மலர்கள். இதற்கு மறைமுக சூரியஒளி கிடைத்தால்போதும். அது நன்றாக வளர்ந்த பூக்கள் பூக்கத் துவங்கிவிடும். இதை பராமரிப்பதும் எளிது. முதிர்ந்த அமைதி அல்லி தாவரத்தை வீட்டுக்கு கொண்டுவந்து, அதை நல்ல முறையில் பராமரித்தால், அது உங்களுக்கு பொன்னிற மொட்டுக்களுடன், விரைவில் அழகிய மலர்களைக் கொடுக்கும்.

செண்பகப் பூக்கள்

உங்கள் வீட்டுத்தோட்டம் அல்லது பால்கனி தோட்டத்தில் போதிய அளவு இடமிருந்தால், நீங்கள் செண்பக மலர்களை வளர்க்கலாம். இந்தச் செடி வளர்ந்து முதிரும் பருவத்தில்தான் பூக்கள் கொடுக்கும். இந்த செடியை வாங்கி நீங்கள் மே மாதத்தில் நட்டுவைத்தால் ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் பூக்களை பூக்கத் துவங்கும். இதை பார்க்கவே பரவசமாக இருக்கும்.

மல்லிகை

ஒரே ஒரு செடி இருந்தால் போதும், தோட்டம் முழுவதும் மண்ணம். இந்தியாவில் கோடைக்காலத்திற்கு மிகவும் பிடித்த மலர். மல்லிகையில் சில வகை இரவில் மலரும். சில வகை காலையில் மலரும் தன்மைகொண்டது. இதன் அழகிய வெண்ணிறம், உங்களைக் கவரும். இதையும் நீங்கள் விதைகளின் மூலம் வளர்க்கலாம். அது 3 முதல் 4 மாதத்தில் பலன்தரும். செடியை ஏற்கனவே வைத்திருந்தால், சீசனில் பூக்கள் பூக்கத் துவங்கும்.

சீனியா

இந்த மலர்கள் சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது. அதனால் பூக்கும்போது உங்கள் தோட்டத்து அழகைத் தரும். இதை நீங்கள் விதைகளை வைத்து வளர்க்கும்போது, மூன்று மாதத்தில் பூக்கள் பூக்கத் துவங்கும். நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஆரோக்கியமான செடியைக் கொண்டுவந்தால், அது உங்கள் வீட்டுக்கு வண்ணமயமான சீனியா பூக்களைக் கொடுக்கும். உங்கள் தோட்டம் அல்லது பால்கனி தோட்டமே ரம்மியமாகக் காட்சி தரும்.