Gardening Tips : காய்ந்து போன துளசிச் செடியை மீண்டும் துளிர்க்கச் செய்வது எப்படி? இதோ குறிப்புகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gardening Tips : காய்ந்து போன துளசிச் செடியை மீண்டும் துளிர்க்கச் செய்வது எப்படி? இதோ குறிப்புகள்!

Gardening Tips : காய்ந்து போன துளசிச் செடியை மீண்டும் துளிர்க்கச் செய்வது எப்படி? இதோ குறிப்புகள்!

Priyadarshini R HT Tamil
Published Feb 19, 2025 07:00 AM IST

Gardening Tips : காய்ந்து போன துளசிச் செடியை மீண்டும் துளிர்க்கச் செய்யலாமா? பொறுமையாக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்று பாருங்கள்.

Gardening Tips : காய்ந்து போன துளசிச் செடியை மீண்டும் துளிர்க்கச் செய்வது எப்படி? இதோ குறிப்புகள்!
Gardening Tips : காய்ந்து போன துளசிச் செடியை மீண்டும் துளிர்க்கச் செய்வது எப்படி? இதோ குறிப்புகள்!

துளசியின் தேவைகள் என்ன?

போதிய அளவு தண்ணீர் ஊற்றுவது.

போதிய அளவு சூரிய ஒளியைக் கொடுப்பது.

நல்ல மண் அதன் வளர்ச்சிக்கு நல்லது.

துளசிச் செடியின் நிலை

துளசிச் செடி முற்றிலும் வறண்டு விட்டால், அதை பசுமையாக்குவது எப்படி என்று பார்க்கலாம். அதன் நிலையை என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அது மீண்டும் துளிர்க்க வாய்ப்பு உள்ளதா என்பதை பார்க்கவேண்டும். ஆரோக்கியமான துளசி செடியில் நல்ல பசுமையான தண்டுகள் இருக்கும். மண்ணில் இருந்து புதிதாக வளர்ந்து வரும். அதன் தண்டுகள் காய்ந்து, இலைகள் காய்ந்து காணப்பட்டால் நீங்கள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காய்ந்த துளசிச் செடிகளை காப்பாற்றும் வழிகள்

தேவையற்ற சில இலைகள் மற்றும் பழுத்த இலைகளை அகற்றவேண்டும். எப்போதும் ஒரு தாவரத்தின் வளர்ச்சிக்கு அதன் கிளைகளை அவ்வப்போது களைந்துவிடவேண்டும். மேலேதான் வளர்ந்து செல்லும் அந்த இடத்தை வெட்டும்போது, அது புதிதாக வளரும். புதிய கிளைகள் மற்றும் இலைகள் வரும். 3 முதல் 6 மாதமான செடியை மிதமாக களைந்தாலே போதும். பிப்ரவரி முதல் அக்டோபர் மாதம் வரை மிதமாகக் கொய்யும்போது அது புதிய கிளைகள் வளர காரணமாகிறது. புதிய தண்டுகள் வந்த பின்னர், அவை 5 முதல் 6 இன்ச்கள் வளர்ந்த பின்னர் தான் மீண்டும் வெட்ட வேண்டும். காய்ந்த, மஞ்சள் மற்றும் பழுத்த இலைகளை களைந்துவிடவேண்டும். இது செடியின் வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் பிப்ரவரி மாதத்தில் மட்டும் அதிகமாக வெட்டலாம். அப்போது ஒரு வாரம் செடியை நிழலில் வைக்கவேண்டும். இது புதிய சூழலை ஏற்க உதவும்.

தொட்டி மாற்றம் மற்றும் உரம்

ஒன்று முதல் 3 ஆண்டுகள் பழமையான துளசிச் செடியை வேறு தொட்டிக்கு மாற்றவேண்டும். வளர்ச்சிக்கு உதவ மண்புழு உரமிடவேண்டும். புதிய செடி என்றால் தொட்டி மாற்றவேண்டாம். மண்ணைக் கிளறிவிட்டு, மண்புழு உரமிட்டாலே போதும். இது துளசிச் செடியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவும். மாலையில் மட்டுமே தொட்டியை மாற்றி 4 நாட்கள் நிழலில் வைக்கவேண்டும்.

தண்ணீர்

பாய்ச்சல் மற்றும் காய்ச்சல் முறையில் தண்ணீர் ஊற்றவேண்டும். அதிகம் தண்ணீர் ஊற்றினால் வேர் அழுகிவிடும. குறைவாக தண்ணீர் ஊற்றினால் செடி காய்ந்துவிடும். தண்ணீர் தேங்காமல் இருக்க போதிய அளவு துவாரம் இருக்கவேண்டும். தொட்டியில் வளரும் செடிகளுக்கு இது அவசியம்.

சூரிய ஒளி

காய்ந்த துளசிச் செடியை மீண்டும் துளிர்க்கச் செய்ய போதிய சூரிய ஒளி தேவை. தினமும் 5 முதல் 6 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கச் செய்யவேண்டும். பச்சையம் தயாரிப்பைத் தூண்ட இது தேவை. இதனால் செடியின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

குளிர்

கடும் குளிரில் இருந்து துளசி செடியைக் காக்க வேண்டும். எனவே குளிரடிக்கும்போது அதை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். வெளியில் வைத்தால் பாதுகாப்புக்கு துணி அல்லது கிரீன் ஸ்கிரீன் போடலாம். இது செடியைக் காக்கும்.

பூச்சிகள்

நீங்கள் கருகியை துளசியை மீண்டும துளிர்க்கச் செய்யும்போது அதை பூச்சி தாக்கிவிடாமல் காக்க வேண்டும். எனவே அவற்றை அன்றாடம் கண்காணித்து, பூச்சிகள் ஏதேனும் தோன்றுகிறதா என பார்க்கவேண்டும். தோட்டத்தில் வரும் பொதுவான எட்டுக்கால் பூச்சிகள் அல்லது பூஞ்ஜை தொற்றுகள் அல்லது மாவுப்பூச்சிகள் வருகிறதா என பார்க்கவேண்டும் அதை கண்டுபிடித்தால் வேப்பெண்ணை தெளிப்பது போன்ற இயற்கை முறையில் அதை போக்கவேண்டும்.

உரம்

துளசிக்கு பஞ்சகவ்யா திரவ உரம் அல்லது மண் புழு உரமிடவேண்டும். இதை கோடை காலங்களில் செய்யவேண்டும். மாதமொருமுறை கோடை மாதங்களில் உரமிடவேண்டும்.

மேலும் காய்ந்த செடியை மீட்க பொறுமை மற்றும் முறையான பாதுகாப்பு தேவை. செடியின் நிலையைப் பார்த்து இறந்த பகுதிகளை நீக்கவேண்டும். தண்ணீர் ஊற்றும் முறையை சரியாக்கவேண்டும். போதிய சூரிய ஒளி, குளிர் பாதுகாப்பு, பூச்சிகள் தாக்காமல் பாதுகாப்பு என உங்கள் செடிக்கு புத்துயிர் கொடுக்க பாடுபடவேண்டும். செடியை மீண்டும் வர ஊக்குவிக்கவேண்டும்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.