Gardening Tips : தோட்டம் அல்லது தொட்டிச்செடி; எந்த தண்ணீர் தாவரங்கள் வளர்க்க சிறந்தது? இதோ ஐடியா!
Gardening Tips : தோட்டம் அல்லது தொட்டிச்செடி; எந்த தண்ணீர் தாவரங்கள் வளர்க்க சிறந்தது என்று பாருங்கள்.
உங்கள் வீட்டில் பெரிய தோட்டம் வைத்துள்ளீர்கள் அல்லது சிறிய தொட்டியில் செடிகள் வைத்துள்ளீர்கள், அதற்கு எந்த தண்ணீர் ஊற்றுவது நல்லது என்று தெரியுமா? அதற்கு முதலில் நீங்கள் எதற்கு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவேண்டும் என்று தெரிந்துகொள்வது அவசியம். செடிகள் வளர்வதற்கு தண்ணீர்தான் மிகவும் அவசியம். அது செடி வளர்வதற்கு மட்டுமல்ல, பச்சையம் தயாரிக்கவும், மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், செழிக்கவும் உதவுகிறது. மனிதர்களுக்கு எதற்கு தண்ணீர் உபயோகப்படுகிறதோ அதேபோல்தான் தாவரங்களுக்கும் தண்ணீர் மிகவும் முக்கியமானது. அது எந்த தண்ணீர் என்பது மிகவும் அவசியம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தண்ணீர் ஊற்றும்போது அது உங்கள் தாவர வளர்ச்சிக்கு நல்லது.
அதிக தண்ணீர் ஊற்றினால் என்னவாகும்?
அதிக தண்ணீர் பருகினால் நமது உடலுக்கு என்னவாகும். அதுபோல்தான், அதிக தண்ணீர் பயிர்களுக்கும் கேடுதரும். உங்கள் செடிகளுக்கு அதிக தண்ணீர் ஊற்றினால், அது மண்ணில் தேங்கும், இதனால் வேர் அழுகும், இவைகளும் உதிர்ந்து செடியே அழிந்துவிடும். வலுவான வேர்கள்தான் செடிகள் செழித்து வளர உதவும்.
குறைவான அளவு தண்ணீர் ஊற்றினால் என்னவாகும்?
துரதிருஷ்டவசமாக அதிக தண்ணீர் ஊற்றுவது மற்றும் குறைந்த அளவு தண்ணீர் ஊற்றுவது என இரண்டும் தாவரத்துக்கு கேடுவிளைவிக்கும். அதற்கு சமஅளவு தண்ணீர் தேவைப்படுகிறது. உங்கள் தாவரங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கொடுக்கவில்லையென்றால், தாவரங்கள் நீர்ச்சத்தை இழக்கும். மண்ணை வறண்டு போக வைக்கும், வேர்களின் ஆரோக்கியத்தைப் போக்கும், இலைகளை சுருளச்செய்யும், கடைசியில் தாவம் அழிந்துவிடும். அதில் இலைகளும், பூக்களும் தோன்றாமல் காய்ந்துவிடும்.
சூடான தண்ணீர் அல்லது குளிர்ந்த தண்ணீர்
உங்கள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டுமெனில், சூடான தண்ணீர் ஊற்றவேண்டுமா அல்லது குளிர்ந்த தண்ணீர் ஊற்றவேண்டுமா? அதிக கொதிக்கும் தண்ணீர், அதிக குளிர்ந்த தண்ணீர் இரண்டுமே செடிக்கு ஆபத்துதான். கொதிக்கும் தண்ணீர் வேரை பாதிக்கும், அதிக குளிர்ந்த நீர் வளர்ச்சியை குறைக்கும். தாவரத்துக்கு அழுத்தத்தை தரும்.
எது சிறந்தது?
கொதிக்கும் தண்ணீர் ஊற்றவேண்டாம், ஆனால் இளஞ்சூடான தண்ணீர் ஊற்றலாம் அல்லது வழக்கமான நிலையில் உள்ள தண்ணீர் ஊற்றவேண்டும். அப்போதுதான் செடி நன்றாக வளரும்.
குழாய் தண்ணீர் அல்லது ஆர்ஓ தண்ணீர்
குழாய் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுவது எளிது என்பதால், அதை ஊற்றிவிடுவார்கள். குழாய் தண்ணீரில் குளோரின், ஃப்ளூரைட் மற்றும் மற்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்கும். இது உங்கள் தாவரங்களுக்கு கேடு விளைவிக்கும்.
ஏன் ஆர்ஓ தண்ணீர்?
ஆர் ஓ தண்ணீர் வடிக்கப்பட்டது. இதில் குறைந்த அளவே நச்சுக்கள் இருக்கும். அதிகப்படியான குளோரினை வெளியேற்றிவிடும். மண்ணில் மினரல்கள் தேங்குவதை இது தடுக்கும். தண்ணீர் விட சிரமமான இடங்களில் குழாய் தண்ணீர் ஊற்றினால், செடிகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. எனவே ஆர்ஓ தண்ணீர்தான் சிறந்தது.
வாழைப்பழத்தோல் தண்ணீர்
வாழைப்பழத்தோல் தண்ணீரில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதை நீங்கள் தாவரங்களுக்கு ஊற்றினால், அது உங்கள் தாவரங்களுக்கு நல்லது. ஓரிரு நாள் வாழைப்பழத்தின் தோலை தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். பின்னர் தோலை அகற்றிவிட்டு, தண்ணீரை உங்கள் தாவரங்களுக்கு ஊற்றவேண்டும்.
வேப்பெண்ணெய் மற்றும் தண்ணீர்
வேப்ப எண்ணெயை தண்ணீரில் கலந்து செடிகளில் ஸ்பிரே செய்யவேண்டும். அதன் இலைகள் மற்றும் தண்டுகளில் ஸ்பிரே செய்யவேண்டும். இதை இரு வாரங்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும். இது இயற்கை உரமாகும். இது பூச்சிகளின் வலைகள் படரவிடாமல் தடுக்கும். வண்டுகள், ஈக்கள் வராமல் காக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி லிட்டர் எண்ணெயைக் கலந்து சரியான அளவு ஸ்பிரே செய்யவேண்டும்.
அரிசி கழுவிய தண்ணீர்
அரிசி கழுவிய தண்ணீரை 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை ஊற்ற வேண்டும். இந்த தண்ணீரில் பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை இருக்கும். அது தாவரகள் வளர உதவும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்