Gardening Tips : பிப்ரவரி மாதத்தில் மலரும் மலர்கள்; அந்த செடிகளுக்கு குறைந்த பராமரிப்பும் போதுமானது!
Gardening Tips : பிப்ரவரி மாதத்தில் மலரும் மலர்கள் குறித்து பார்க்கலாம். அவற்றை தோட்டத்தில் வைத்து வளர்க்கும்போது உங்கள் வீடே வண்ணமயமாக காட்சியளிக்கும். அவற்றை பராமரிப்பதும் எளிதானது.

பிப்ரவரி மாதம் வந்துவிட்டது. இதனால் இப்போது பனி குறையும் வாய்ப்புள்ளது இதனால் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் பனியில் வாடியிருந்த செடிகள் மீண்டும் வளரத்துவங்கும். மண்ணில் ஈரப்பதமும் குறைவாக இருக்கும். பூக்கள் பூக்கத்துவங்கிவிடும். பிப்ரவரியில் பூக்கும் 8 செடிகள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
- பனி மல்லிகை
பிப்ரவரியில் பூக்கும் பூக்களில் முக்கியமானது பனி மல்லிகை. இது அழகிய மலர்களுள் ஒன்று. இவை நட்சத்திர வடிவம் கொண்டவையாகும். ப்ரைட்டாக இருக்கக்கூடியவையாகும். இவை உங்கள் பால்கனி தோட்டத்தில் வளர்க்க ஏற்றவையாகும்.
2. கேமலியா
பிப்ரவரி மாதத்தில் மலரக்கூடிய அழகிய மலர்களுள் கேமலியாவும் ஒன்று. இது வெளிர் சிவப்பு மற்றும் பிங்க் வண்ணத்தில் பூத்துக்குலுங்கும். இதன் இதழ்கள் ரோஜாப்பூக்களை ஒத்து இருக்கும்.
3. பிரிம்ரோஸ்
பிரிம் ரோஸ் மலர்களும் பிப்ரவரி – மார்ச் மாதத்தில் நன்றாக வளரக்கூடியவை. இதன் இதழ்களும் நன்றாக மலர்ந்துவரும். இது பல வண்ணங்களில் காணப்படும். மஞ்சள், பிங்க், பர்பிள் மற்றும் பல வண்ணங்களில் வரும். இதை உங்கள் பால்கனியில் வைத்தால் பால்கனியே அழகாகிவிடும்.
4. பேன்சீஸ்
இந்தியாவில் வீட்டில் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு, பனிக்காலத்தில் மிகவும் பிடித்தது இந்த பேன்சி மலர்கள். இது நல்ல நிறம் கொண்டதாகவும், அழகாகவும் இருக்கும். இதன் இதழ்களில் நல்ல பேட்டர்ன்கள் இருக்கும். இதன் வண்ணம் லைலக் மற்றும் பர்பிள் நிறம் கொண்டதாக இருக்கும். இது உங்களுக்கு அழகான தோற்றத்தைத் தரும்.
5. அல்லிசம்
அல்லிசம் செடிக்கு நீங்கள் குறைவான கவனம் செலுத்தினாலே போதும். இதன் மலர்கள் கொத்தாக மலரும். இதன் இதழ்கள் சிறியதாகவும், மணம் வீசக்கூடியதாகவும் இருக்கும். இவை பிங்க், வெள்ளை, பர்பிள் மற்றும் பல வண்ணங்களில் வரும்.
6. ஐரிஸ்
ஐரிஸ் மலர்கள், மிகவும் பிரைட்டான மற்றும் அழகான தோற்றம் கொண்டவை. இவையும் பல வண்ணங்களில் வரும். ஊதா வண்ணம், பர்பிள் என வண்ணங்களில் வரும். ஐரிஸ் மலர்களின் இதழ்கள் மிகவும் இலகுவாக, பறந்து செல்ல எளிதாக இருக்கும். பிப்ரவரி மாதத்தில் இதை நீங்கள் வளர்க்கலாம்.
7. நாஸ்டர்டியம்
செம்பருத்திப் பூக்களைப் போன்ற தோற்றம் கொண்டதுதான் இந்த நாஸ்டர்டியம் பூக்கள். இலை ஆரஞ்சு, சிவப்பு மற்றும் அடர் ஊதா வண்ணங்களில் வருகின்றன. இவை பால்கனியில் தொங்கும் தொட்டிகளில் வைத்து வளர ஏற்றவை.
8. சாமந்திப்பூ (மாரிகோல்ட்)
இந்தியாவில் தோட்டம் வைக்க விரும்புபவர்களுக்கு பிடித்தது இந்த சாமந்திப்பூ. நாம் அதிகம் பயன்படுத்துவது. மாலைகள் கட்ட உதவுவது. இந்த மலர்கள் ஆண்டு முழுவதும் மலரும். பிப்ரவரி மாதத்திலும் மலரும். இது செரியை தலையில் வைத்ததுபோல் இருக்கும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்