Gardening Tips : ‘சிறிய தோட்டம் சிங்காரமான இல்லம்’ இந்த யோசனைகள் போதும்! உங்கள் வீடு மேலும் அழகாகும்!-gardening tips enough of these small garden beautiful home ideas your home will be more beautiful - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gardening Tips : ‘சிறிய தோட்டம் சிங்காரமான இல்லம்’ இந்த யோசனைகள் போதும்! உங்கள் வீடு மேலும் அழகாகும்!

Gardening Tips : ‘சிறிய தோட்டம் சிங்காரமான இல்லம்’ இந்த யோசனைகள் போதும்! உங்கள் வீடு மேலும் அழகாகும்!

Priyadarshini R HT Tamil
Aug 07, 2024 10:58 AM IST

Gardening Tips : ‘சிறிய தோட்டம் சிங்காரமான இல்லம்’ இந்த யோசனைகள் இருந்தால் போதும். உங்கள் வீட்டுத்தோட்டம் மேலும் அழகாகும்.

Gardening Tips : ‘சிறிய தோட்டம் சிங்காரமான இல்லம்’ இந்த யோசனைகள் போதும்! உங்கள் வீடு மேலும் அழகாகும்!
Gardening Tips : ‘சிறிய தோட்டம் சிங்காரமான இல்லம்’ இந்த யோசனைகள் போதும்! உங்கள் வீடு மேலும் அழகாகும்!

திட்டமிடுங்கள்

இடம் - நீங்கள் மேல குறிப்பிட்டுள்ள அனைத்தையும் தேர்ந்தெடுத்தப்பின், எங்கே எந்த தாவரத்தை நடவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். இடைவெளி மிகவும் அவசியம். நம்மைப்போலவே செடிகளுக்கு தனியிடம் வேண்டும். நீங்கள் இளஞ்செடிகளை ஒன்றுக்கு ஒன்று அருகில் வைத்திருந்தால், அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படும். அவற்றிற்கு தொற்றுகள் ஏற்பட்டு அழியும்.

லேபிளிங் – நீங்கள் உங்கள் வீட்டில் எந்த தாவரத்தை எங்கு நட்டுள்ளீர்கள் என்பதை தெரிந்துகொள்ள, அது என்ன தாவரம் என்ற பெயரை அதற்கு அருகில் குறிப்பிடுங்கள். அதையும் அலங்கரித்தால் உங்கள் தோட்டம் இன்னும் அழகாகும்.

ஒருங்கிணைத்தல் – நீங்கள் முதன் முதலில் தோட்டம் அமைக்கிறீர்கள் என்றால், அதை நீங்கள் நன்றாக அமைக்கவேண்டும். அதன் ஒவ்வொரு நிலையையும் படம் பிடியுங்கள். ஒவ்வொரு செடியும் எப்படி வளர்கிறது என்று ஒவ்வொரு நிலையில் படம் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். அது எவ்வாறு வளர்ந்து வருகிறது என்று பாருங்கள்.

தோட்டத்தின் அமைப்பு

நீங்கள் அனைத்தையும் திட்டமிட்ட பின், உங்கள் தோட்டத்தில் தரையில் மட்டுமே தாவரங்களை நடப்போகிறீர்களா அல்லது கொஞ்சம் உயரமாக திண்டு அமைத்து அதில் நடப்போகிறீர்களா என்பதை முடிவெடுத்துக்கொள்ளுங்கள். இதுபோல் திண்டு அமைப்பது உங்கள் தோட்டத்துக்கு அழகைத்தரும்.

இது உங்கள் தோட்டத்துக்கு வடிவத்தையும் கொடுக்கும். இந்த திண்டுகள் குறுகலான நீண்ட திண்டுகளாக இருந்தால் நல்லது. ஒவ்வொரு செடிக்கும் அதற்கு தேவையான இடம்கொடுப்பது அவசியம். விதைகள் சிறியதாக இருக்கும். ஆனால் வளரும்போது அது பெரிதாகிவிடும்.

கவனமாக நடுங்கள்

இந்த வேலைகள் அனைத்தும் முடிந்த பின்னர், நீங்கள் தாவரங்களை நடத்துவங்குங்கள். விதைகளிலே உங்களுக்கு அவற்றை எவ்வாறு நடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே அவற்றை பின்பற்றி, நட்டு வாருங்கள். சில காலங்களில் நீங்களே சிறப்பாக நடத்துவங்குவீர்கள். பொதுவாக நீங்கள் விதைகளை நடும்போது, நல்ல ஆழ்த்தில் தான் நடவேண்டும். மண்ணைப்போட்டு நன்றாக மூடி, அவற்றுக்கு தேவையான அளவு தண்ணீர் கொடுக்கவேண்டும். விதைகள் வெளியே தெரியக்கூடாது.

செடிகளை நடும்போது, நீங்கள் நட நினைக்கும் இடத்தில் ஆழக்குழிதோண்டி, வேர்களுக்கு நல்ல இடைவெளியும், ஆழமும் கிடைக்கும் அளவுக்கு, இரு மடஙகு குழிதோண்டி நடுங்கள். மண்ணைப்போட்டு, சிறிது இயற்கை உரமிடுங்கள். அது உங்கள் தாவரங்கள் நன்றாக செழித்து வளர உதவும். வேர்கள் வெளியே தெரியாமல் நடவேண்டியது மிகவும் அவசியம். உங்கள் செடிகளுக்கு சரியாக தண்ணீர் விடுங்கள்.

தண்ணீர்

செடி வளரத் தேவை தண்ணீர். எனவே உங்கள் செடிக்கும் தண்ணீர் அவசியம். அது போதிய அளவு இருந்தால் போதும். அதிகளவு தண்ணீர் என்பதும் ஆபத்துதான். எனவே தேவையானபோது மட்டும் தண்ணீர்விடவேண்டும். தாவரங்களுக்கு கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் விடவேண்டும். அதிக தண்ணீரை ஊற்றினால், ஆழம் வரை செல்லாது. மெதுவாக மண் உறிஞ்ச உறிஞ்ச தண்ணீர் ஊற்றவேண்டும்.

தரை ஓரளவு ஆழம் வரை ஈரமாக வேண்டும். கோடை காலத்தில் தாவரங்களுக்கு தண்ணீர் அதிகம் வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றுவது மிகவும் அவசியம். தாவரங்களின் ஒவ்வொரு படிநிலைக்கும் ஒவ்வொரு மாதிரி தண்ணீர் ஊற்றுவது அவசியம்.

இளம் செடிகளுக்கு தினமும் தண்ணீர் தேவை. அப்போதுதான் அதன் வேர்கள் நன்றாக தரையில் ஊன்றி வளரும். வளர்ந்த தாவரங்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினாலே போதும். மழைக்காலத்தில் குறைவான அளவு தண்ணீரே போதும். அதற்கு ஏற்றாற்போலும் தண்ணீர் விடவேண்டும்.

இயற்கை உரங்கள்

செடிகளுக்கு உரங்கள் மிகவும் அவசியம். எனவே உங்கள் தாவரங்களுக்கு இயற்கை உரங்களை மட்டுமே கொடுங்கள். நீங்களே அவற்றையும் தயாரித்துக்கொள்ளுங்கள்.

மண்புழு உரம், இயற்கை கொருட்களை உங்கள் தோட்டத்தில் சேர்த்து உங்கள் தாவரங்கள் வளர உதவுங்கள். அவை காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள், டீத்தூள் முதல் நாம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களின் கழிவுகள் என எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். இதுபோன்ற இயற்கை உரங்கள் உங்கள் மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் உதவும். நோய்கள் மற்றும் களைகளையும் எதிர்க்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.