Gardening Tips : 80 ஆண்டுகள் வரை இந்த 9 செடிகள் வாழும் என்றால் அது உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதா?
Gardening Tips : 80 ஆண்டுகள் வரை இந்த 9 செடிகள் வாழும் என்றால் அது உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதா? அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
80 ஆண்டுகள் உயிர்வாழும் இந்த 9 தாவரங்களைப்பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். இதை நீங்கள் உங்கள் வீட்டிலும் வைத்து வளர்க்கலாம். அந்த அழியா வரம் பெற்ற தாவரங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். ஒரு சிலருக்கு செடிகள் வளர்க்க மிகவும் பிடிக்கும். அவர்கள் மீண்டும், மீண்டும் அழிந்தாலும் தொடர்ந்து செடிகள் வளர்ப்பார்கள். ஆனால் சிலருக்க செடிகள் வளர்க்கப் பிடிக்காது. அது வறண்டாலோ அல்லது அழுகி அழிந்தாலே அவர்கள் வருந்துவார்கள். ஆனால், சில தாவரங்களுக்கு பெரிய பராமரிப்புகள் ஒன்றும் தேவையில்லைதான், எனினும் அவை நீண்ட காலம் உயிர் வாழும். அவை குறித்து தெரிந்துகொள்ளுங்கள். இவற்றை நீங்கள் நட்டால் உங்கள் பேரக்குழந்தைகள் வரை பார்த்து மகிழ்வார்கள். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
மான்ஸ்ட்ரா
மான்ஸ்ட்ரா என்ற செடி, வீட்டின் உள்புறத்தில் அழகுக்காக வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்றாகும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இவை கிழிந்திருக்கும். ஆனால் அந்த கிழிசல்கள்தான் இந்த செடிக்கு அழகைத்தரும். இந்தச்செடி 80 ஆண்டுகள் வரை வளரும். இது மிதமான காடுகளில் நன்றாக வளரும். வீட்டிலும் அழகுக்காக வளர்க்கலாம்.
போத்தோஸ்
போதோஸ் என்றால், உங்கள் வீடுகளில் எளிதில் வளர்க்கக்கூடிய செடிகளுள் ஒன்று. இதற்கான பராமரிப்பு செலவு மிகவும் குறைவுதான். இது பல ஆண்டுகள் தொடர்ந்து வளரும் தன்மை கொண்டது. இது 100 ஆண்டுகளை கடந்தும் வாழும்.
பாம்புச்செடி
பாம்புச் செடி ஆங்கிலத்தில் ஸ்னேக் ப்ளான்ட் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பராமரிப்பு செலவுகளும் மிகவும் குறைவுதான். எளிதில் வளரக்கூடியவை மற்றும் இதை பராமரிப்பதும் சுலபம்தான். இதன் நீண்ட இலைகள் அதில் உள்ள மஞ்சள் – பசுமை நிற கோடுகள், உங்கள் வீடுகளுக்கு நல்ல அழகைத்தரும். இவை எளிதாக 80 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும்.
ஜேட்
ஜேட் என்ற செடியை நீங்கள் எளிதில் வீட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே என எப்படி வேண்டுமானாலும் வளர்ப்பது எளிது. இந்த செடியும் 80 ஆண்டுகள் வரை எளிதாக வளரக்கூடியது. இதன் இலைகள் இந்தச்செடிக்கு அத்தனை அழகைத்தருபவையாகும். ஜேட் செடிகள் 80 ஆண்டுகள் தொடர்ந்து வளரும் தன்மைகொண்டது. இதன் அடர்த்தியான இலைகள், மெல்லிசாக இருக்கும் இலைகளுடன் சேர்ந்து வீட்டுக்கு அழகான தோற்றத்தைத்தரும்.
ஸ்பைடர் தாவரம்
ஸ்பைடர் தாவரத்தின் அழகிய வளைந்த இலைகள், உங்கள் வீட்டுக்கு அழகிய தோற்றத்தை தரும். குறிப்பாக அது வளரும்போது மிகவும் அழகாக இருக்கும். அதை நாம் தொங்கும் தொட்களில் வளர்க்கலாம். ஸ்பைடர் தாவரங்களுக்கு பராமரிப்பும் குறையும். இதுவும் 80 ஆண்டுகள் வளரும். அதற்கு நாம் அதை சிறப்பாக கவனித்துக்கொள்ளவேண்டும்.
காற்றாழை
கற்றாழை மற்றுமொரு தாவரம் அடர்ந்து வளரக்கூடிய தாவரம் ஆகும். இதற்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. கற்றாழை 80 ஆண்டுகள் வரை வளரும். இது 100 ஆண்டுகள் வரை கூட வளரும். இதை நல்ல மண்ணில் வைத்து வளர்க்கவேண்டும். இதை அடிக்கடி வெட்டி வளர்க்கவேண்டும்.
சைனீஸ் எவர்கிரீன்
சைனீஸ் எவர்கிரீன் என்பது உங்கள் வீடுகளில் எளிதில் வளர்க்கக்கூடிய இதன் இலைகளும் அழகாக இருக்கும். இலை சிவப்பும் பசுமையும் கலந்து இருக்கும். இதை பராமரிப்பதும் எளிது. இதற்கு குறைவான ஒளியே போதும். இதை நீங்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வளர்க்கலாம்.
ஃபிடில் லீஃப் ஃபிக்
தி ஃபிடில் லீஃப் ஃபிக் என்பது வீடுகளில் அழகுக்காக வளர்க்கக்கூடிய தாவரம் ஆகும். இதன் இலைகள் பெரிய மற்றும் கண்ணாடி போன்ற தோற்றம் கொண்டவை. இந்தச் செடியும் பல ஆண்டுகள் வளரக்கூடியது. இதை பராமரிப்பதும் எளிது. இது நேராக வளரக்கூடியது. இது நீளமாக வளரும். இது மரம் போல் வளரக்கூடியது.
ரப்பர் பிளான்ட்
ரப்பர் பிளான்டும் 80 ஆண்டுகள் வாழும் தன்மை கொண்து. இதன் அடர்த்தியான இலைகள் மற்றும் அதன் வடிவங்களும் அழகியல் தன்மைகொண்டவை. இதற்கு நீங்கள் சரியான உரங்கள் போடவேண்டும். இதையும் அவ்வப்போது வெட்டவேண்டும். இது நீண்டகாலம் தொடர்ந்து வளரும் தன்மைகொண்டது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்